நயன்தாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நயன்தாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நயன்தாராவுக்கென ஒரு தனி இடம் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரபுதேவாவுடனான காதல் விவகாரத்துக்குப் பிறகு மறுபிரவேசம் செய்தபோது, மீண்டும் விட்ட இடத்தை நயன்தாராவினால் பிடிக்க முடியாது என்றுதான் கருதப்பட்டது. ஆனபோதும், மீண்டும் அதே பழைய எனர்ஜியுடன் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, பழைய இடத்தை பிடித்துக்கொண்டார்.

குறிப்பாக, ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி செம ஸ்பீடாக சென்று கொண்டிருக்கும் நயன்தாராவின் படக்கூலி இப்போது ஒன்றரை கோடியை தொட்டு நிற்கிறது. ஆனால், நடித்து வரும் படங்களில் ஒன்றிரண்டு சூப்பர் ஹிட் ஆனால் அதை அபபடியே இரண்டு கோடியாக ரவுண்டாக்கி விடவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.

மார்ச் மாதம் 'மாஸ்' ரிலீஸ்...!

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா,
நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. அங்கு மிக நீண்ட ஷெட்யூல் நடைபெற்றிருக்கிறது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம்.

அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகி பிப்ரவரிக்குள் முடிந்த பின் படத்தை மார்ச் மாதக் கடைசியில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். சூர்யா, 'மாஸ்' படம் மூலம் அவருடைய வெற்றியை நிரூபித்து ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளார். 'அஞ்சான்' படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எழுந்த அதிரடியான விமர்சனங்களால் அந்தப் படத்தின் இயக்குனரான லிங்குசாமி மட்டும் பாதிக்கப்படவில்லை, சூர்யாவும்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்.

2015 ரேஸில் முந்தப்போவது நயன்தாரவா? ஹன்சிகாவா?

இன்றைக்கும் தமிழ் சினிமாவில் டாப்பில் இருப்பது நயன்தாரா, ஹன்சிகாதான். 2014ம் ஆண்டில் இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே என்ற இரண்டு படத்தில்தான் நயன்தாரா நடித்தார். ஹன்சிகா மான் கராத்தே, அரண்மனை என்ற இரண்டு படத்தில் நடித்தார். ஆனால் 2015ம் ஆண்டில்தான் இருவருக்குமே கடுமையான போட்டி இருக்கிறது. காரணம் இருவர் கையிலும் கணிசமான படங்கள் இருக்கிறது.

உதயநிதியுடன் ''நண்பேன்டா'', சிம்புவுடன் ''இது நம்ம ஆளு'', ஜெயம் ரவியுடன் ''தனி ஒருவன்'', சூர்யாவுடன் ''மாஸ்'', விஜய் சேதுபதியுடன் ''நானும் ரவுடிதான்''. தனி ஹீரோயினாக ''நைட் ஷோ'', ''பாஸ்கர் தி ராஸ்கல்'' என்ற மலையாளப்படம், பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படம் என நயன்தாரா கையில் 8 படங்கள் இருக்கிறது.

விஜய்சேதுபதி, நயன்தாரா இப்போது நண்பர்கள்

விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் டீசர் அண்மையில் யூடியூபில் வெளியானது.  வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்த ஆரஞ்சு மிட்டாய் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவரை 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆரஞ்சுமிட்டாய் டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர்.  சுமார் 3500 பேர் லைக் பண்ணி இருக்கின்றனர்.

  ஆரஞ்சு மிட்டாய் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷத்திலிருக்கும் விஜய் சேதுபதிக்கு, இப்போது கூடுதலாக இன்னொரு சந்தோஷமும்....! என்ன சந்தோஷம்?  சிம்பு, பிரபுதேவா என்று ஆட்டோகிராப் பக்கங்கள் புரட்டப்பட்டாலும் நம் ஹீரோக்களுக்கு நயன்தாரா மீது உள்ள மயக்கம் கொஞ்சமும் குறையவில்லை. கிறக்கமும்தான்.

கார்த்திக்கு ஜோடியாகிறார் நயன்தாரா?

‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், தற்போது கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கஸ்மோரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன், படப்பிடிப்புக்காக தேதிகளை ஒதுக்கித் தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரித்திர படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம்

நயன்தாராவுக்கு, தற்போது ஆக் ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. 'ராணி ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும் நடிக்க விரும்புகிறேன் என்றும், சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார் நயன்தாரா.

அதோடு, 'ஸ்ரீராமராஜ்ஜியம்' தெலுங்கு படத்தில் சீதை வேடத்திற்காக தான் நந்தி விருது பெற்றதை, அவர்களுக்கு நினைவுபடுத்தும் நயன்தாரா, சினிமாவுக்காக கடுமையாக உழைக்கவும், ரிஸ்க் எடுக்கவும், நான் தயாராகி விட்டேன் என்றும் கூறிவருகிறார். அதனால் கூடிய சீக்கிரமே, சரித்திர படங்களில் நடிப்பதில் அனுஷ்காவுக்கு போட்டி நடிகையாக, நயன்தாராவும் உருவெடுப்பார் என்று தெரிகிறது.

மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!

தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், கடுகளவுகூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்ற கண்டிசனோடுதான் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருகிறார். அதனால்தான் தமிழில் குறைவான படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், த்றபோது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும் என்று தன்னை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறார். காரணம், இந்த படத்தில் மனதை தொடும் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு மீராநந்தனுக்கு அதிகமாக கிடைத்துள்ளதாம்.

ஜூனியர் நடிகைகளுக்கு அட்வைஸ் செய்யும் த்ரிஷா

த்ரிஷாவின், கடந்த 10 ஆண்டு கால சினிமா கேரியரில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுடன் எதிரும், புதிருமாகத் தான் இருந்து வந்தார்; ஆனால், இப்போது ரொம்பவே மாறி விட்டார். நயன்தாரா போன்ற முன்னாள் போட்டி நடிகைகளுடன் பகை மறந்து, நட்பு வளர்த்து வருகிறார். அதேபோல், வளர்ந்து வரும் புதுவரவு நடிகைகளுக்கு, நடிப்பு குறித்த, 'டிப்ஸ்' வழங்கி வருகிறார்.

த்ரிஷா, இப்போது கன்னடத்திலும் பிசியாக நடித்து வருவதால், அங்குள்ள புதுமுக நடிகைகளுக்கும் ஆலோசனைகள் வழங்குகிறாராம். த்ரிஷாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பார்த்து, வியந்து போயிருக்கிறது கோடம்பாக்கம்.

தயாரிப்பாளர்களை தடுமாற வைத்த நயன்தாரா!

இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா படம்தான் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அப்படம் வெளியானதால தனக்கு பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமையப்போகிறது என்று பெரிய அளவில் எதிர்பார்த்தார் நயன்தாரா.

ஆனால், ஏற்கனவே கஹானி இந்தியா முழுக்க வெற்றிகரமாக ஓடியதால், பெருவாரியான ரசிகர்கள் அப்படத்தை பார்த்து விட்டனர். அதனால் தென்னிந்தியாவில் அப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்காரணமாக தன்னை தென்னிந்தியாவின் வித்யாபாலனாக அனாமிகா மாற்றி விடும் என்று எதிர்பார்த்திருந்த நயன்தாராவுககு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

சத்தமில்லாமல் உதவி செய்யும் நயன்தாரா!

சினிமா நடிகர் நடிகைகளில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று தாங்கள் செய்யும் உதவியை வெளியில் தெரியாமல் செய்வது. இன்னொன்று ஒரு லட்சம் உதவி செய்தால்கூட அதை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து 10 லட்சம் அளவுக்கு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வது. இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர்தான் நயன்தாரா.

இவர் இதுவரை செய்த உதவிகளில் சுனாமி நிவாரண நிதிக்காக 10 லட்சம் கொடுத்தது மட்டும்தான் வெளியில் தெரியும்.மற்றபடி தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வலது கை கொடுப்பது இடது கைககு தெரியக்கூடாது என்ற பாலிஸியை அவர் கடை பிடித்து வருகிறார்.

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து நயன்தாராவுக்கு அழைப்பு?

நித்யானந்தா சுவாமிகளுடன் ரஞ்சிதா இடம்பெற்ற வீடியோ தொலைக்காட்சியில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகும் அவரைவிட்டு ரஞ்சிதா விலகவில்லை. அவரது சீடராகி அவரது ஆசிரமத்திலேயே இருந்து வருகிறார். ஆனால், அதுவரை தென்னிந்திய சினிமாவில் இருந்து அவரது ஆசிரமத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்தனர்.

இதனால் ஒருகாலத்தில் நடிகைகள் மற்றும் குடும்ப பெண்களின் வரவு அதிகரித்திருந்ததால் கலகலப்பாக காணப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் பின்னர் வெறிச்சோடியது. இந்த நிலையில், இரண்டு முறை காதல் தோல்வியில் விழுந்து விரக்தியடைந்துள்ள நயன்தாராவையும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு வருமாறு அங்கிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

காதலர்களுக்கு சிம்பு கொடுக்கும் டிப்ஸ்!

சினிமாவில் ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் பஞ்ச்தான் அவ்வப்போது கொடுத்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக அதெல்லாம் மறைந்துவிட்டது. மாறாக, ஆளாலுக்கு ஏதாவது ஒரு வகையில் பஞ்ச் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். ஏன் சந்தானம்கூட சில சமயங்களில் பஞ்ச் கொடுக்கிறார். ஆனால், சிம்புவோ காதலர்களுக்கு நிறைய பஞ்ச் கொடுக்கிறாராம்.

நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்து பிரிந்தவர் என்பதால், அவருக்கு காதலில் நல்ல அனுபவம் கிடைத்து விட்டது. அதனால், இந்த காலத்து காதலிகளை எப்படி கரெக்ட் பண்ணுவது, எப்படி மெயின்டெயின் பண்ணுவது என்றெல்லாம் ரசிகர்களுக்கு எடுத்துக்கொடுக்கிறாராம்.

ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் இப்போது எமியும் சேர்ந்தார்

ஆர்யாவுக்கு நயன்தாரா, பூஜா, த்ரிஷா, அனுஷ்கா என நிறைய நடிகைகள் நெருக்கம். எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டு பிரியாணி கிளப்பில் இணைந்தவர்கள்.

இப்போது இதில் எமியும் சேர்ந்துள்ளார். அவர் முன்பே பிரியாணி கிளப்பில் இருந்தாலும் இப்போதுதான் அதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ் நாட்டில் நண்பர்கள் இல்லை. இங்கு நடிக்க மட்டுமே வருவதால் நடித்து முடித்த உடன் லண்டன் சென்று விடுகிறேன். அங்குதான் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கு ஆர்யா மட்டுமே நண்பர். மதராசபட்டினம் படத்தில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதுபற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதில்லை என்கிறார் எமி.

ஆர்யா வலையில் சிக்குவாரா ஹன்சிகா?

நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து, ஆர்யாவின் கவனம், ஹன்சிகாவை நோக்கி திரும்பியுள்ளதாம். இன்னும் வெளியாகாத ஒரு படத்தில், ஹன்சிகாவும், ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர்.

இதில், ஒரு காட்சியில் ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்ததை நினைத்து, தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற கவலையில், படப்பிடிப்பிலேயே கண்ணீர் விட்டு, கதறி அழுதாராம், ஹன்சிகா. இதனால், ஆர்யாவுடன், ஹன்சிகா, டூ விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில், ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.

பெண் டான்ஸ் மாஸ்டருடன் பிரபுதேவா காதல்?

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. தந்தை வழியிலேயே நடன மாஸ்டராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சில பாடல்களில் நடனமாடி வந்த அவரை டைரக்டர் ஷங்கர் தனது காதலன் படத்தில் ஹீரோவாக்கினார். அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்தார் பிரபுதேவா.
1995ல் தனது நடன குழுவில் இருந்த ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால், வில்லு படத்தை இயக்கியபோது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

நயன்தாராவுடன் நடிக்க பரத்துக்கு ஆசை!

ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா. இப்போதெல்லாம் உடன் நடிக்கும் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையும், தன்னோட கேரக்டரும் நன்றாக இருக்கிறதா, கேட்கிற சம்பளம் தருகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார்.

 தன் மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். ராஜா ராணியில் ஜெய் ஜோடியாக நடித்தார், தற்போது ஒரு திகில் படத்தில் நெடுஞ்சாலை ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றம் இரண்டாவது வரிசை ஹீரோக்களையும் அவருடன் நடிக்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. அப்படி ஆசைப் படுகிறவர்களில் ஒருவர் பரத்.

நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அஞ்சான் சமந்தா!

நயன்தாரா சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே அவருக்கு பல ஹீரோக்களின் அணுக்கிரகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல சமயங்களில் ஆர்யா உள்ளிட்ட சில ஹீரோக்கள்தான் அவருக்கு கைகொடுத்து காப்பாற்றி விட்டுள்ளனர். அதனால்தான், தோழிகளை விட தோழர்களை எப்போதுமே தன்னைச்சுற்றி வைத்திருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச்சென்றால் தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்பதற்காகவே தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்வதையே தவிர்த்தார் நயன்தாரா. ஆனால், தமிழ் சினிமாவினர் அதை கண்டுகொள்ளாத நிலையில், தெலுங்கில் அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ள மறுத்ததால், அவருக்கு ரெட் கார்டு போட்டு, தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை போட்டுள்ளனர்.

சத்தமில்லாமல் காய் நகர்த்துகிறார் த்ரிஷா!

கோடம்பாக்கத்துக்கு லேட்டஸ்டாக இறக்குமதியான நடிகைகளில் லட்சுமிமேனனுக்கு பிறகு எந்த நடிகையும் பெரிய அளவில் வளரவில்லை. எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிப்புக்கு கல்தா கொடுத்து விட்டார்.

இதன்காரணமாக, பத்து வருடங்களாக கோலேச்சி கொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாரா, காஜல்அகர்வால் போன்ற சில முத்தின நடிகைகள்தான் தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். இதில் நயன்தாரா, காஜல் இருவரும் சம்பள விவகாரத்தில் இன்னமும் பழைய ஞாபகத்தில் உச்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

டாட்டூ வேண்டவே வேண்டாம் ! நடிகைகளை உஷார்படுத்தும் நயன்தாரா!!

சமீபகாலமாக தங்களது உடம்பில் சில முக்கிய பகுதிகளை தவிர அனைத்து ஏரியாக்களிலும் டாட்டூ வரைந்து அழகு பார்ப்பதில் பெருபாலான நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோலிவுட்டைப் பொறுத்தவரை, குஷ்பூ, த்ரிஷா, ப்ரியாமணி, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.

இவர்களில் த்ரிஷா தனது கழுத்துக்கு சற்று கீழே நெஞ்சுக்கு சற்று மேலே ஒரு டாட்டூவை ரொம்ப நாளாக வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் இறக்கமாக டிரஸ் அணியுமபோது அந்த டாட்டூ வெளியில் எட்டிப்பார்க்கும். அதேபோல், நயன்தாரா, தனது மாஜி காதலரான பிரபுதேவாவின் பெயரை தனது வலது கையில் டாட்டூ வரைந்திருக்கிறார். அதேபோல், இடை, தொடை என்று சில டாட்டூக்களை வரைந்து வைத்திருக்கிறார்.

நயன்தாராவை புறக்கணிக்கும் ஆர்யா!

தற்போதைய கோலிவுட் சினிமாவில் காதல் இளவரசன் ஆர்யா தான். அந்த அளவுக்கு அவரை இளவட்ட நடிகைகளை முற்றுகையிடுவது, சினிமா மேடைகளில் மாறி மாறி முத்தம் கொடுப்பது என்றெல்லாம் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது.

மேலும், எந்த நடிகை கோடம்பாக்கத்திற்குள் என்ட்ரி ஆனாலும் அவர்களைத் தேடிப்பிடித்து நட்பு வளர்க்கும் ஆர்யா, பிக்கப் நடிகர் என்ற பட்டப்பெயரையும் சம்பாதித்து விட்டார்.