கார்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கார்த்திக்கு ஜோடியாகிறார் நயன்தாரா?

‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், தற்போது கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கஸ்மோரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன், படப்பிடிப்புக்காக தேதிகளை ஒதுக்கித் தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொம்பன் படத்தில் ராஜ்கிரண்!

என் ராசாவின் மனசிலே, மாணிக்கம், பொன்னு வெளையுற பூமி என்று கிராமத்து நாயகனாக பல படங்களில் நடித்தவர் ராஜ்கிரண். ஒரு கட்டத்தில் தனது கதாநாயகன் மார்க்கெட் சரிந்ததும், பாலாவின் நந்தா படத்தில் இருந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்தார். முக்கியமாக பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, கோவில், சண்டக்கோழி போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரஙக்ளில் நடித்து செண்டிமென்ட் நடிகராகவும் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், மஞ்சப்பை படத்தில் தாத்தா ரோலில் நடித்த ராஜ்கிரண், சிவப்பு படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கிறார். அதையடுத்து, மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஏற்கனவே மஞசப்பையில் நடித்த லட்சுமிமேனன் நாயகியாக நடிக்கிறார்.

கார்த்தியை ஓவராக புகழ்ந்து தள்ளிய சினிமாக்காரர்கள்!

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த கார்த்தி, மெட்ராஸ் படத்தின் ஹிட் காரணமாக உற்சாக மனநிலையில் காணப்படுகிறார். வழக்கம் போல் மெட்ராஸ் படம் இரண்டு நாள் ஹிட் என்றதும் சக்சஸ் மீட் நடத்தினார்கள். அப்போது, இந்த படத்தில் கார்த்தியை தவிர வேறு எந்த ஹீரோவும் நடிக்க மாட்டார்கள். காரணம், அந்த படப்பிடிப்பு நடைபெற்ற ஹவுசிங் போர்டு ஏரியாவில் மற்ற நடிகர்கள் என்றால் காலை கீழே மிதிக்க மாட்டார்கள்.

ஆனால் கார்த்தியோ கேரவன்கூட கேட்காமல் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபடி நடித்தார். மேலும், பெரிய நடிகராச்சே, எப்படி இயல்பாக பழகப்போகிறார் என்று நாங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க அவரோ, வந்த வேகத்திலேயே அனைவரிடமும் தோள் போட்டு அன்பாக பழகினார். அதனால் எங்களுக்கு அவர் மீதிருந்த பயம் போனது. அதனால்தான் அனைவரும் இயல்பாக நடித்திருந்தோம் என்று அப்படத்தில் இன்னொரு ஹீரோ-ஹீரோயினாக நடித்திருந்த கலையரசன், ரித்விகா இருவரும் பேசினர்.

நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் - கார்த்தி!

தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்திக்கு தற்போது வெளியாகி இருக்கும் மெட்ராஸ் படம், ஓரளவுக்கு பெயரை பெற்று தந்துள்ளது. அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய இப்படம், வட சென்னை ஏரியாவில் ஒரு சுவற்றை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருந்தது. மெட்ராஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில், பத்திரிகையாளர்கள் முன்பு நடந்தது.

அப்போது, இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்த ஜெயராம் பேசுகையில், கார்த்தியை ஓவராக புகழ்ந்து பேசினார். மெட்ராஸ் படத்தில் நிறைய பேர் நடிக்க தயங்கினார்கள், ஆனால் நீங்கள்(கார்த்தி) தைரியமாக நடித்தீர்கள். உங்களை பார்க்கும்போது எனக்கு நீங்கள், மக்களின் நாயகனாக தெரிகிறீர்கள். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்.க்கு பிறகு மக்கள் நாயகன் என்ற இடம் காலியாகத்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் மக்கள் நாயகனாக வளர வேண்டும், நான் என்றார்.

“மெட்ராஸ் - பூலோகம்” ஒரு ஏரியா கதையாமே....!

கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க 'அட்டகத்தி' பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'மெட்ராஸ்' படமும், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ள 'பூலோகம்' படமும் ஒரே கதையில்தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இரண்டு படங்களுமே வட சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளன. ஒரு சாதாரண இளைஞன் எப்படி சிறந்த பாக்சிங் வீரனாகிறான் என்பதுதான் படத்தின் கதையாம்.

இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராகி பல மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

திடீர் மயக்கம் - நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் கார்த்தி திடீரென மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் சரியாக போகாத நிலையில், தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார், விரைவில் இவரது நடிப்பில் மெட்ராஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது.