அழகுக்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகுக்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்குள் கருப்பா இருக்கா? அதைப் போக்க சில அட்டகாசமான வழிகள்!!!

உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். அக்குள் கருப்பாக உள்ளது என்று பெண்கள் தான் அதிக அளவில் வருத்தப்படுவார்கள். இதற்கு காரணம், அக்குள் கருப்பாக இருந்தால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாது என்பது.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை கருப்பாக இருக்கும் அக்குளை வெள்ளையாக்க சில அட்டகாசமான வழிகளைக் கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பார்த்து, அவற்றை தினமும் முயற்சித்து பாருங்களேன்…

உங்கள் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

பெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்… ஓல்டு ஏஜ்… என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசு புசுவென காடுபோல் முடி வளர்வது இயற்கையே.

ஆனால், அழகாக இல்லையே’ என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் – குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.

மூக்கு சரியா இல்லையே என்ற கவலையா? உங்களுக்கான சில சூப்பர் டிப்ஸ்

பெண்களை பார்த்தால் மூக்கும் முழியுமாக நல்ல லட்சணமாக இருக்கிறார் என்று சொல்வார்கள். முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடைமிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும். ஆனால் எப்படிப்பட்ட தோற்றம் இருந்தாலும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் கவலைப்படத் தேவையில்லை.

மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும்.


 வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

முகப்பரு வருவதற்கான பிரதான காரணங்கள்.

இரவில் சருமத்தை சுத்தப்படுத்தாமல் இருப்பது இரவில் தூங்கும் போது கிளின்சர் பயன்படுத்தி முகத்தை நன்கு நீரில் கழுவிபின் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொண்டு தூங்க வேண்டும். தூங்கும் போது முகத்தை கழுவாமல் தூங்கினால்சருமத்துளைகளை அடைத்துள்ள தூசிகள் சருமத்தில் அப்படியே தங்கிஅவை பருக்களை ஏற்படுத்துவதுடன்முகத்தை பொலிவற்றதாக வெளிக்காட்டும்.

சரும பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்படும் சரும பராமரிப்பு பொருட்கள் அனைவருக்குமே சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அந்த பொருட்களே சரும துளைகளை அடைத்து பருக்களை ஏற்படுத்தும்.

உங்களுக்கும் அழகிய கண்கள் வேண்டுமா?

கண்களைச் சுற்றி ஈரப்பதம் கண்களைச் சுற்றியுள்ள இடம் மிகவும் மென்மையானது. முகத்திலேயே அது தான் மிகவும் மென்மையான இடமும் கூட. இவ்விடத்தில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை. ஆகவே தினமும் இரவில் கண்களைச் சுற்றி ஜெல் அல்லது கோல்ட் க்ரீம் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றி கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஃபேஷ் வாஷ் வேண்டாம் கண்களுக்கு போட்டுள்ள கண்மையை நீக்க, சாதாரணமாக முகத்தைக் கழுவ பயன்படுத்தும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

முகப்பரு வராமல் தடுக்கும் வழிகள்.

பொடுகு தலையில் பொடுகு அதிகம் இருந்தால்அந்த பொடுகு முகத்தில் பட்டு பருக்களை ஏற்படுத்தும். எனவே பருக்கள் வருவதை தவிர்க்க வேண்டுமானால்முதலில் தலையை சுத்தமாக பொடுகின்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் பசை சருமம் பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும்.எனவே இத்தகையவர்கள், தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

உங்கள் கால்கள் அழகாக வேண்டுமா?

கால்களை நீரால் கழுவ வேண்டும் குளிக்கும் போது கால்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முற்றிலும் கால்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக பயன்படுத்தும் சோப்பு அல்லது உடல் கழுவியினால் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் துர்நாற்றம் மற்றும் அழுக்கு இவற்றிலிருந்து விடுபட தூங்க செல்லும் முன் ஒவ்வொரு இரவும் கால்களை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அழுக்கு படிந்த கால்கள் பிளவுற்ற கால்களை போன்றே மோசமானது.

பால் சிகிச்சை பாலை 250 மி.லி கூடுதலாக வாங்கி, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அதில் கால்களை ஊற வைக்கவும். ஆனால் பால் சற்று வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இது போன்று செய்வதால் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள பாலால் அனைத்து கடினமான புள்ளிகளும் நீக்கப்பட்டு, தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.

பச்சை ஆப்பிளின் வியக்க வைக்கும் குணங்கள்.

தாதுப்பொருட்களான தாமிரம், மாங்கனீசு, இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும். அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது. மேலும் எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும். மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த அழகு மேம்படுத்தியாக உள்ளது. சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு போன்ற நிறைய நன்மைகள் பச்சை ஆப்பிள்களுடன் தொடர்புள்ளது.இந்த ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்.

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிலையான பந்தம். அந்த பந்தம் தான் கடைசி வரை அவளுடன் இருக்கும். எனவே இத்திருமணத்தில் தேர்ந்தெடுக்கபடும் துணைவன் சரியானவரா, துணைவி தமக்கு ஏற்றவளா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கும்.

இத்தகைய திருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன்,மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். தன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும்.

நீண்ட கருமையான கூந்தல்வேண்டுமா?

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

நீங்கள் முகத்தை உம்முன்னு வைத்திருக்கிரவரா?

எந்த ஒரு கோளாறும், ரொம்ப நாள் நீடிக்கக் கூடாது; அப்படிபோனால் பெரிய சிக்கலுக்கு காரணமாகி விடும். அதேபோல், மனத்தளர்ச்சி (டிப்ரஷன்) பிரச்னையையும் உடனே கவனிக்க வேண்டும்.

டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.

எப்போதும் முகத்தை உம்மென்று வைத்திருந்தால், மனத்தளர்வு நோய் ஏற்படும்.உம்மனாமூஞ்சியாக இருக்காமல், சிரித்த முகமாக இருக்க வேண்டும்.

கண்ணாடி அணிந்தாலும் அழகாக இருக்கலாம்.

கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது.

தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.
கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்று சில டிப்ஸ்:

கோடைக்கால அழகுக்குறிப்பு.

கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகிக் கொண்டிருக்கிறது. வெயிலில் அதிக நேரம் நடப்பதால் அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பொலிவின்றி காணப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரித்து அழகுப் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம், அழகுப் பெண்கள் அனைவரையுமே வாட்டிக் கொண்டிருக்கிறது.

“நமது சருமத்திற்கு தண்ணீர் சத்தும் கொழுப்பும் அத்தியவசியமானது. கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.

கோடைக்கால முடி பராமரிப்பு.

உச்சி என்பதை நடு மண்டை என்று பலரும் நினைக்கிறார்கள். தலையின் முன் நெற்றியில் முடி தொடங்கும் இடத்தில் குறுக்காக நான்கு விரல்களை வைக்கவேண்டும். அதில் நான்காம் விரல் வைக்கப்படும் இடமே உச்சியாகும். குழந்தையாக இருக்கும்போது மிக மென்மையாக துடிக்கும்பகுதி போல் தெரியுமே அதுதான் உச்சி. இந்த உச்சிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால் அந்த இடத்தில் சிறிதளவு எண்ணெய் வைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

“நமது கூந்தல் கறுப்பாக இருந்தாலும் அதனை பகுத்தாய்ந்து பார்த்தால்
பிரவுன், லைட் பிரவுன், நீலம், ஊதா, ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறக்கலப்பு தெரியும். கோடை வெயில் தொடர்ந்து கூந்தலில்பட்டால் முதலில் நீல நிறம் மறையும்.

ஆண்களுக்கு மட்டுமான அழகுக்குறிப்பு.

சிறுவயது ஆண்களில் சிலர் பார்ப்பதற்கே மிகவும் வயது போனவர்களை போன்று காணப்படுவர்.அதேப்போல் சிலரை பார்த்தால் வயது 50 அல்லது 60ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர்.இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக் கொள்வது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தை அல்ல.

மாறாக கொஞ்சம் முயற்சித்தால் வயது ஏறிகொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும்.அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ்(ஆண்களுக்கு மட்டும்)

முகத்திற்கு ஏற்ற அழகிய புருவங்கள்.

கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லென வளைந்த புருவம் என்று வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவீதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு. கண்களை பெரிதாக்கும் சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும்.

முகத்தில் உள்ள பரு,அம்மை தழும்புகள் நீங்க சில டிப்ஸ்.

நேற்றுவரை கண்ணாடி மாதிரி பளபளத்த சருமத்தில், இன்று திடீரென சின்னதாக ஒரு கரும்புள்ளியோ, பருவோ வந்தால் அது தரும் மன உளைச்சல் மிகவும் பெரியது. அதிலும் அந்தக் கரும்புள்ளியோ, பருவோ வந்தோமா, போனோமா என இல்லாமல், வந்துவிட்டுப் போனதன் தடமாக தழும்பை விட்டுச் சென்றால்? தழும்புகளைப் பார்க்கும் போதெல்லாம் தன்னம்பிக்கை குறையும். தூக்கம் தொலையும். தழும்புகளற்ற சுத்தமான சருமத்துக்கு மனது ஏங்கும். ”சரியான காரணம் தெரிந்து, சிகிச்சை அளித்தால், தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம் என்கிறார் அழகுக் கலை நிபுணரும், அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு.

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குசென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது.

அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

ஆண்கள் குளிர் காலத்தில் தனது சருமத்தை பராமரித்துக் கொள்ளும் முறை.

சரும பராமரிப்பு என்று வரும் பொழுது ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இருப்பதில்லை. இன்றைய ஆண்கள் பளபளக்கும், நல்ல தோல் பகுதியை பெருமையாக கருதுகிறார்கள். குளிர்காலம் தொடங்கும் போது கூடவே தோல் தொடர்பான பிரச்சனைகளும் படையெடுக்கத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் நிலவும் வறட்சி மற்றும் குளிர்காற்றினால் ஆண்களின் தோல் வறட்சியடைந்து விடும். தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும். ஈரப்பதம் உருவாக்கும் லோஷன்களை தடவுவதன் மூலம் உங்கள் உடலுக்கு போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பெண்களின் தோலை விட ஆண்களின் தோல் அதிக கடினத்தன்மை கொண்டிருப்பதால், ஆண்களுக்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தவும். பெண்களுக்கு தயாரிக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தினால் பலன் குறைவாகவே இருக்கும்.

அழகைக் கூட்ட வயது தேவையில்லை.

25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்’ என்கிற பார்வை உங்களுக்கு  இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?

‘‘நமது சருமம், 20 வயதில் இருப்பது மாதிரி 40 வயதிலோ, 40ல் இருப்பது மாதிரி 60 வயதிலோ இருப்பதில்லை. 20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.