கோடைக்கால அழகுக்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோடைக்கால அழகுக்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெயில் காலத்திற்கான குறிப்புகள்.

பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்கள் வெயிலுக்கு இதமாக இருப்பதுபோல இருந்தாலும் தாகத்தை முழுவதுமாக போக்குவது தண்ணீர் மட்டும்தான். பழச்சாறு தயாரிக்கும்போது சர்க்கரை சேர்க்கக்கூடாது.

தோல்தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுவது. அதனால் பால் பொருட்கள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடவும்.

குளிப்பதற்கு முன் சிறிது பயத்தமாவை உடலில் பூசி ஊறியதும் குளித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

கோடைக்கால அழகுக்குறிப்பு.

கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகிக் கொண்டிருக்கிறது. வெயிலில் அதிக நேரம் நடப்பதால் அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பொலிவின்றி காணப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரித்து அழகுப் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம், அழகுப் பெண்கள் அனைவரையுமே வாட்டிக் கொண்டிருக்கிறது.

“நமது சருமத்திற்கு தண்ணீர் சத்தும் கொழுப்பும் அத்தியவசியமானது. கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.