சிறுவர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கழுதையின் தந்திரமும் உப்பு வியாபாரியும்.

ஒரு நாட்டில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான்.

வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

அடக்கத்தில் சிறந்தவர் யார்?

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வருவதை கண்டு யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.

உலகிலேயே பேரழகி 'அம்மா' தான்.

ஒரு தெருவில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது.அப்போது அங்கே இருப்பவர்கள் அந்த குழந்தையிடம் வந்து ''ஏன் அழுகிறாய் ''என்று கேட்டனர்,என் அம்மாவை காணவில்லை என்றது,அவர்கள் அனைவரும் உன் அம்மா எப்படி இருப்பாள் என்றார்கள். 'அதற்கு அந்த குழந்தை 'என் அம்மா அழகாக இருப்பார்கள் ''என்றது.இதை அனைவரும் அந்த நாட்டின் மன்னனிடம் கூறினார்கள்.

அப்போது மன்னர் அந்த ஊரில் உள்ள அணைத்து அழகான பெண்களையும் வர சொல்லி அந்த குழந்தையிடம் காட்டினார். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இவர்கள் எல்லாரையும் விட என் அம்மா அழகாக இருப்பாள் என்றது.

பட்டம் பற்றிய பாடல்.

சின்ன சின்ன பட்டமாம்
சிங்காரப் பட்டமாம்
அக்கா செய்த பட்டமாம்
அருமையான பட்டமாம்
வாலிருக்கும் பட்டமாம்
காற்றிலாடும் பட்டமாம்
பல வண்ண பட்டமாம்
பறக்கும் நல்ல பட்டமாம்
அச்சமின்றி காற்றிலே
ஆடும் நல்ல பட்டமாம்
உயரப் போகும் பட்டமாம்
ஊசலாடும் பட்டமாம்
துயரமின்ரி ஆடுமாம்
துள்ளி வானில் ஓடுமாம்.

என் செல்ல பிராணி நாய்க்குட்டி.

சின்னச்சின்ன நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி
வண்ண வண்ண நாய்க்குட்டி
மின்னல் போல துள்ளிடும்
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
பொன்னைப் போன்ற வண்ணமும்
பொலிவுமிக்க வதனமும்
மேனி கொண்ட நாய்க்குட்டி
காலைக்காலை சுற்றி வந்து

காக்கையாரே காக்கையாரே... இலங்கை சிறுவர்பாடல்

காக்கையாரே காக்கையாரே  எங்கே போனீர்?

காணாத இடமெல்லாம் காண போனேன்
கண்டு வந்த புதுமைகளை சொல்ல கேளும்
செட்டியார் வீட்டில் கல்யாணம்
சிவனார் கோவிலில் விழா கோலம்
மீன் பிடி துறையில் ஜன கூட்டம்
மேரியின் வீட்டில் கொண்டாட்டம்.
கண்டி பக்கம் குளிரோ கொடுமை
காங்கேசன் துறையில் வெயிலோ கடுமை.

அப்பா,மாமா,அத்தான் கொழும்பில்
அவர்கள் சுகத்தை அறிவீரோ?

அணிலே அணிலே ஓடி வா.... சிறுவர் பாடல்.

அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்
கூடி கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்.

புத்திசாலித்தனமாக பதில் கூறிய பீர்ப்பால்.

அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால்அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.

அவசரமடைந்த காக்காவின் முட்டாள் தனம்.

மகன்:- ஒரு யோசனை சொல்ல வேண்டும். காரியங்களை வேகமாகச் செய்வது எப்படி?”

தந்தை:- “என்ன பிரச்னை? எதற்குக் கேட்கிறாய்?”

மகன்:-“எல்லா காரியங்களையும் வேகமாக செய்து முடிக்க நினைக்கிறேன். ஆனால் அப்படி முயலும்போது ஏதாவது தடங்கல் வந்துவிடுகிறது. என்ன செய்ய?”

அவன் சொன்ன பதிலிலிருந்து பிரச்சனை என்னவென்று தந்தைக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

கெடுவான் கேடு நினைப்பான்.

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் தனக்கு அந்த பொல்லாத தேள்  கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டது.

காகத்துக்கு நாய்க்குட்டி சொன்ன நீதி

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை செல்லமாக வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி ஒரு காகத்துடன் நட்பாக இருந்தது.

ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

முதியவரின் வித்தியாசமான உதவி.

ஒரு காட்டில் ஒரு வாலிபன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்து சாப்பிட்டான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்துக் கொண்டு கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்து தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை மிக கீழே இருந்தது.ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்றுதிரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

நட்பிலும் நன்றி மறக்க கூடாது.

கார்த்திக்,விஸ்ணு எனும் இரு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்டது, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு சென்று தண்ணீர் குடிப்பதில் வாய்சண்டை கை சண்டையாக மாறி  கார்த்திக் விஸ்ணுவை அடித்துவிடுகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத விஸ்ணு , அந்த பாலைவன மணலில் ஏதோ எழுதிவிட்டு,

தாய் சொல்லை தட்டாதே.

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கும்.அதைப்போல் அக்கிராமத்துக்கும் இருந்தது.அக்கிராமத்துக்கு பிரசித்தமானது அதன் பள்ளிக்கூடம் சண்டை,அடிதடி, வம்பு, தும்பு இத்தனைக்கும் பேர் போனது.
இப் பள்ளி மாணவர்கள் எப்போதும் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.இதை சரிசெய்வதற்குள் ஆசிரியர்களுக்கு பெரும்பாடாக இருக்கும்.ஆசிரியர்கள் இப் பள்ளியிலிருந்து விடுதலை கிடைக்கும் நாளை ஆவலோடு எதிர் நோக்கி இருப்பார்கள்.அதேபோல் அக்கிராமத்து பள்ளிக்கு மாறுதல் என்றால் ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும்.

அன்புள்ளம் கொண்ட விவசாயி.

விஸ்வநாதன் எனும் அரசன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்நேரம், ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது ஆடையில் படிந்திருந்த தூசியும், கலைந்த தலைமுடியும் அவன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.
அவன் மன்னனிடம், "அரசே........உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆபத்தான சிட்டுக்குருவியின் ஆசை.

இரண்டு தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள் அவை இரண்டும் இரை தேட வெளியே போயிருந்த நேரத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.