நட்பிலும் நன்றி மறக்க கூடாது.

கார்த்திக்,விஸ்ணு எனும் இரு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்டது, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு சென்று தண்ணீர் குடிப்பதில் வாய்சண்டை கை சண்டையாக மாறி  கார்த்திக் விஸ்ணுவை அடித்துவிடுகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத விஸ்ணு , அந்த பாலைவன மணலில் ஏதோ எழுதிவிட்டு,
அந்த இடத்தை விட்டு நகர்கின்றார், அதை கண்ட பின் தொடர்ந்து வந்த கார்த்திக், என்ன எழுதினான் என்று பார்க்கையில் “என் நண்பன் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டான்” என்று இருந்தது.

ஒருவருக்கொருவர் பேசாமலேயே, மீண்டும் பயணத்தை தொடர்கின்றார்கள்

சற்றும் எதிபாரத நேரத்தில், அடி வாங்கிய விஸ்ணு ஒரு புதைகுழியில் மாட்ட, கன்னத்தில் அறைந்த கார்த்திக்கோ, தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், விஸ்ணுவை காப்பாற்றுகின்றார். இந்த சம்பவம் நடந்த பின்பு, ஒரு பாறையில், புதைகுழியில் விழுந்த விஸ்ணு மீண்டும் ஏதோ எழுதினார். அவருடைய நண்பர் கார்த்திக், அருகில் வந்து பார்க்கும் போது  “என் நண்பர் என் உயிரைக் காப்பாற்றினான்” என்று எழுதி இருந்ததை கண்டு, விஸ்ணுவிடம் நான் உன்னை அடித்ததை மணலில் எழுதிவிட்டு, உயிரைக் காப்பாற்றியதை மட்டும்ஏ ன் பாறையில் எழுதினாய்?என்று கேட்டார்.

”என்ன இருந்தாலும் நீ என் நண்பன், ஏதோ ஒரு கோபத்தில் அடித்துவிட்டாய், அது நான் பாலைவனத்தில் எழுதிய எழுத்து போல, கொஞ்ச நேரத்தில் என் மனதில் இருந்துவிட்டு மறைந்துவிட வேண்டும் என்றும், என் உயிரைக் காப்பாற்றியதை நான் என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில், இந்த பாறையில் எழுதிய எழுத்து போல மறையாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தேன் என விஸ்ணு கூறினான்.