இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாபகமறதியால் அவஸ்தையா? இதோ சூப்பர் டிப்ஸ்

 நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன். நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன். படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை. நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளேன். இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம். ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

எந்த மனிதனுக்கும் குறைந்த அளவு ஞாபக சக்தி அதிக அளவு ஞாபக சக்தி என்பதை வகுத்துக் கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது. நம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை தெரிந்து கொள்வோம்.

மருத்துவகுணம் அடங்கிய வாழைத்தண்டு.

வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூ கினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே, இது பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது.

அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் ஆகும்.

‘‘இன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும் வறட்சியான உணவாகவும் இருக்கிறது.

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?..

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

தொண்டை வலி தீர வழிகள்.

தொண்டை வலியை Pharyngitis என்பார்கள். Pharyngitis-யை Sore throat என்றும் அழைப்பார்கள். இது வந்தால் தொண்டையில் ஊசியை வைத்துக் குத்துவது போல் வலிக்கும். விழுங்குவதற்கும் கஷ்டமாக இருக்கும்.

ஜலதோஷம் வந்த பிறகும், வைரஸ் காய்ச்சல் வந்த பிறகும் இது காணப்படும். Group A streptococcus கிருமிகள் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். குளிர் காலங்களில் இது அதிகம் வரலாம். இது பரவும் தன்மைகொண்டது. இதனுடன் காய்ச்சல், தலைவலி, தோலில் குறியீடுகள், நிணநீர் நாணங்களில் வீக்கம் போன்றவை காணப்படும்.

சில நேரம் தேவைப்பட்டால் தொண்டையில் இருக்கும் திசுவை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். இது வைரஸால் வந்திருந்தால் Antibiotic-க்கால் பலன் கிடையாது. நம்முடைய உணவுப் பழக்கத்தின் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை இயல்பாக அதிகரிப்பதே சிறந்தது.

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

துளசியின் மகத்துவம்

மார்கழி மாதம் என்றாலே பெருமாள் கோயிலும் அங்கு வழங்கப்படும் துளசி தீர்த்தமும் நினைவுக்கு வரும். திருமாலின் மார்பில் மாலையாகவும், பக்தர்களுக்கு துளசியிலையாகவும், துளசி தீர்த்தமாகவும் வழங்கப்பெறும். மகாலட்சுமியின் இருப்பிடமாக விளங்கும் துளசி, குளிர் மற்றும் பனி காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தீர்க்கும் அரு மருந்தாகவும் விளங்குகிறது. கற்பூர மணத்துடனும் கதிர் போன்ற பூங்கொத்துகளை உடைய சிறு செடியாகும்.

இதற்கு காரமுவுண்டு 2 அடிமுதல் 3 அடி வரை வளரக்கூடியது. தமிழகம் புதுவை மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வளர்கிறது. இதில் நற்றுளசி, நாய்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி உட்பட பல வகைகள் உண்டு. கோழையகற்றுதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல், வியர்வைபெருக்கும் குணங்கள் கொண்டது.

நட்சத்திரப் பழம் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்.

நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு.ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது.

காதுக்குள் பூச்சி நுழைந்தால்...

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம்.

 சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவார்கள். ஆனால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறப்பது இல்லை. அதே போல, குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான். சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம். காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை கண்டறிய சில குறிப்புகள் :

கீரையின் மகத்துவங்கள்

கீரைகள் இறைவனின் அருள்கொடைகள் என்றே சொல்லலாம். நம் அன்றாட உணவில் கீரைகளின் பங்கு மிகவும் மகத்தானது. நோயை விரட்டி உடலுக்கு சக்தி அளித்து, ஆரோக்கியத்தை கூட்டுவது. கிராமத்தில் நிறையப் பேருக்கு பாட்டி வைத்தியம் செய்வார்கள், அதில் கீரைகள் முக்கிய பங்கு வக்கின்றன. கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஆனாலும் நிறைய பேருக்கு அதிகம் தெரிந்தது அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை மட்டுமே.

தெருவில் கீரை விற்பவர்கள் முதல்கொண்டு காய்கறி சந்தை வரை அதிகமாக நாம் காண்பதும் இந்த வகை கீரைகள்தான். பண்டைய காலம் முதலே பலவகையான கீரைகளை தங்கள் சாப்பாட்டில் சேர்த்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள். அதன் பலனும் அலாதியானது. கீரைகளில், அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கன்னி, பசலை, புளிச்சக்கீரை (கோங்குரா), தண்டுக்கீரை, புதினா,முள்ளங்கிக்கீரை, கொத்தமல்லி தழை, பருப்புக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரையுடன் கிராமங்களில் மானாவாரியாக ஆங்காங்கே புல்பூண்டுகளுடன் முளைத்துக்கிடக்கும் முடக்கற்றான், குப்பைமேனி, வல்லாரை, தூதுவளை, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, தாளிக்கீரை, பசரை, சக்ரவர்த்திக்கீரை, தொய்யாக்கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கை, கோவை, கரிசலாங்கண்ணி, வெள்ளைக்கீரை, நச்சுக்கொட்டை, பண்ணைக்கீரை, காசினி, மூக்கற்றை, துத்திக்கீரை போன்ற பல்வேறு கீரைகைகள் உள்ளன.

புளி இருக்க பயம் ஏன்?..

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் புளியில் கால்சியம், வைட்டமின் "பி' நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது. புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. குழம்பு, ரசம், சாம்பார், புளிக் குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். ஆந்திராவில் புளியால் ஆன "பச்சி புளுஸ்'' பிரசித்தம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் புளியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்:

* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.

ஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா?

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு பெர்பியூம்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் அதனால் பக்கவிளைவுகளும் வரலாம்.

 இயற்கையாகவும் வியர்வை நாற்றத்தை போக்கலாம், வியர்வை நாற்றத்தை போக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். எலுமிச்சம் பழத்தை உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து பாருங்கள். தினமும் அரை

பச்சை ஆப்பிளின் வியக்க வைக்கும் குணங்கள்.

தாதுப்பொருட்களான தாமிரம், மாங்கனீசு, இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும். அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது. மேலும் எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும். மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த அழகு மேம்படுத்தியாக உள்ளது. சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு போன்ற நிறைய நன்மைகள் பச்சை ஆப்பிள்களுடன் தொடர்புள்ளது.இந்த ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.

உங்களின் மூளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி; இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா?

இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களை கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் இது தான் காரணம்.

 உங்கள் மூளையில் உள்ள செல்களை கொல்லாதீர்கள்; என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம்.

தலையணை பாவிப்பதில் உள்ள ஆபத்துக்கள்.

பலருக்கு தலையணை இல்லாத உறக்கம் உப்பில்லாத சாப்பாடு போலதான் இருக்கும்.இக்காலத்தில்  தலையணை இல்லாமல் யாரும் தூங்குவதே இல்லை என்றே கூறலாம்.‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது" என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி.தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர்.

தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ… அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை.சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது.

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்.

தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது. உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும்.

 டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா? ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும். தினமும் வெந்நீர் குடிப்பதால் பலவித மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்.

* ஆய்வு ஒன்றில் ஏலக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத்    தடுப்பதோடு, ஒருசில புற்றுநோய்களையும் அழிக்கும் வல்லமை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

* உணவு உண்ட பின் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், செரிமானம் மட்டுமின்றி, வாய் துர்நாற்றமும் நீங்கும்.ஏலக்காய் வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, வாய் அல்சர் மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை குணமாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

* ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் குணம் கொண்டது. மேலும் இது நுரையீரல் அழற்சி மற்றும் இருமல் போன்றவற்றையும் குணமாக்க உதவும்.நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஏலக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

நெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு பழம்.

உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தைரியமாக ஆரஞ்சு பழத்தையோ அல்லது சாறு குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சனை உடனே குறையும்.

உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது.
ஆரஞ்சு சாறில் உள்ள விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.

இதில் ஏ, பி, சி ஆகிய விட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

மரக்கறி வகைகள் பற்றி தெரிந்து சாப்பிடுங்கள்.

உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம்.

கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும்.

யாருக்கு சாப்பிட கூடாது: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

இயற்கை மருந்துகளின் ஆயுட் காலம் பற்றி தெரிந்து உபயோகியுங்கள்.

*சுரசம், கற்கம், சாறு, உட்களி, குடிநீர், அடை 3 மணி நேரம்
*சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய் 3 மாதங்கள்.
*மணப்பகு , நெய், இரசாயணம், இளகம் 6 மாதங்கள்.
*எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேனுறல், தீநீர் 1 ஆண்டுகள்.
*மெழுகு, குழம்பு 5 ஆண்டுகள்.
*பதங்கம் 10 ஆண்டுகள்.
*செந்தூரம் 75 ஆண்டுகள்
*பற்பம், கட்டு, உருக்கு, களங்கு 100 ஆண்டுகள்.
*சுண்ணம் 500 ஆண்டுகள்.
*கற்பம், சத்து, குருகுளிகை அநேக ஆண்டுகள்.

விழா எடுக்க கூடிய விளா மரம்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு மிகச் சரியான உதாரணம், விளாம்பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியோடு, இனிய மணத்தோடு இருக்கும் விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம். விளா மரத்தின் ஒவ்வொரு பாகமும் அபூர்வமான மருத்துவ குணங்கள் அடங்கியதே.

இந்த மரத்தின் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், வட மொழியில் 'கபி ப்ரியா’ என்றும் ஆங்கிலத்தில், 'மங்கி ட்ரீ’ என்றும் விளா மரத்துக்குப் பெயர்கள் உண்டு.