தலையணையின் ஆபத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலையணையின் ஆபத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தலையணை பாவிப்பதில் உள்ள ஆபத்துக்கள்.

பலருக்கு தலையணை இல்லாத உறக்கம் உப்பில்லாத சாப்பாடு போலதான் இருக்கும்.இக்காலத்தில்  தலையணை இல்லாமல் யாரும் தூங்குவதே இல்லை என்றே கூறலாம்.‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது" என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி.தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர்.

தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ… அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை.சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது.