கைவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாப்பாட்டு மேசைக்கான தென்னை மர அலங்காரம்.

தமிழர்களின் நற்பண்புகளில் விருந்துபசாரம் மிக முக்கியமானதாகும்.அதிலும் அந்த உணவின் ருசியுடன் சாப்பாட்டு மேசையையும் வித்தியாசமாக அலங்கரித்து வைத்தால் வருகிறவர்களின் மனமும் உற்சாகமடையும்.அப்படியான ஒரு அலங்காரத்தின் செய்முறையே இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்.
தோடம்பழம் 1
வாழைப்பழம் 1
கிவி பழம் 2

வித்தியாசமான பழ தட்டு அலங்காரம்.

சாப்பாட்டு மேசைக்கான பூ வாஸ்.

இலகுவான ஆப்பிள் பூ வாஸ் செய்முறை.

அழகிய ஆப்பிள் வாத்து செய்முறை.

அழகிய முட்டை பொம்மை.

முன் ஆயத்தம்.

2 முட்டையை அவித்து கொள்ளவும்.
கேரட்டை வட்ட வடிவமாக வெட்டி கொள்ளவும்.
5 மிளகு,கொத்தமல்லி இலை சிறியது.
மூக்கு வைக்க சிறிய கேரட் துண்டை   கூர்மையாக   வெட்டிக் கொள்ளவும்.

செய்முறை.
அவித்த  இரண்டு முட்டைகளையும் சிறிய குச்சி மூலம் ஒன்றாக சேர்க்கவும்.

இலகுவான முட்டை பொம்மை.

முன் ஆயத்தம்.
முட்டையை அவித்து வைத்து கொள்ளவும்.
கேரட்டில் ஒரு சிறிய துண்டை வெட்டி அதில் சிறிது சிறிதாக கீறி கொள்ளவும்.
வாய்க்கு கேரட் துண்டை இரண்டு சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கண் வைக்க இரண்டு மிளகு எடுத்து கொள்ளவும்.

செய்முறை.

அவித்த முட்டையை எடுத்து அதில் சிறிதாக உள்ள பக்கத்தை தலைக்கும் பெரிய பகுதியை உடல் பகுதி போலவும் வைக்கவும்

சாப்பாட்டு மேசைக்கான கிறிஸ்மஸ் மரம்.

தேவையான பொருட்கள்:

சலாது இலை
வத்தாளை கிழங்கு
கரட்
கிழங்கு
வெண்டிக்காய்
பீட்ருட்
கோலிங் பிளவர்
போஞ்சி

செய்முறை:

சலாது இலையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அவற்றை மர வடிவில் செய்து கொள்ளவும்.

வித்தியாசமாக தட்டை அலங்கரிக்கும் முறை.

வெள்ளரிக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்.பின்பு அதில் ஒவ்வொன்றையும் சிறிதாக வெட்டிக் கொள்ளவும். வெட்டியவற்றில் கொஞ்சத்தை தட்டின் ஓரத்தில் வைக்கவும். பிறகு இடையில் சிறிய தக்காளி பழம் ஒன்றை வைக்கவும்.மறுபடி கொஞ்சம் வெள்ளரிக்காயை வைக்கவும், தட்டின் ஓரம் முழுவதும் இவ்வாறு மாறி மாறி வைத்து அலங்கரிக்கவும்.

வீட்டின் சாப்பாட்டு மேசையில் பழங்களை வைக்கும் போது ஒரு தட்டில் இவ்வாறு செய்து வைத்து அதின் நடுவில் பழங்களையோ அல்லது

இலகுவில் தயாரிக்ககூடிய கிறிஸ்மஸ் மரம்.

தேவையான பொருட்கள்:-

பச்சை வானீஸ் பேப்பர் - 1
சிவப்பு வானீஸ் பேப்பர் - 1
செலோடேப் - 1
கம்
செய்தி தாள்கள்
அலங்கார பொருட்கள்

செய்முறை:-

வானீஸ் பேப்பர்களை நீளம் கூடியதாகவும்   அகலம் குறைந்ததாகவும்வெட்டிக்கொள்ளவும்.பின்பு அவற்றில் அடி பக்கம் கொஞ்சமாக வெட்டிக் கொள்ளவும்.

மெழுகுவர்த்தி தயாரிக்கும் முறை.


மெழுகை தயாரிக்க பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் போன்ற பொருட்கள் தேவைப்படும்.

கரடி பொம்மை செய்து பாருங்கள்.

கூடை பொம்மைகளை மார்பு வரை தயாரித்தால் போதுமானது. கரடி, நாய், பூனை, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம்.  பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும்.

அது முகம், கை, உடல், ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும். வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள்.

தக்காளியினால் பொம்மை செய்யுங்கள்.

பெரிய தக்காளி ஒன்றையும் சிறிய தக்காளி ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன தக்காளி பழத்தில் ஒரு பகுதி பெரிதாகவும் ஒரு பகுதி சிறிதாக இருக்குமாறும் வெட்டிக் கொள்ளவும்.

சிறிய தக்காளியில் பெரிதாக வெட்டிய பகுதியையும் பெரிய தக்காளி பழத்தையும் ஒரு சிறிய குச்சியின் மூலம் இணைக்கவும். பின்பு மிகுதியாக இருக்கும் சிறிய தக்காளியில் இரண்டு இலை வடிவங்களை வெட்டி கைகளை போல் பொருத்தவும்.

நத்தார் முகமுடியை செய்து பாருங்கள்.

முட்டையின் ஓட்டை நன்றாக கழுவி விட்டு அதற்கு வெள்ளை, சிவப்பு இரண்டு நிறங்களையும் கலந்து வரும் இளச் சிவப்பு நிறத்தை பூசி காய வைக்கவும். காய்ந்ததும் நத்தார் தொப்பியை போல் சிவப்பு நிற காகிதத்தை கூர்மையாக செய்து ஓட்டின் மேல் பகுதியில் ஒட்டவும். பின்பு பஞ்சில் மீசை,தாடி, புருவம் வைத்து விட்டு மீசையின் கீழ் சிவப்பு நிறத்தில் சிறிதாக வாய் வரையவும். பின் இரண்டு சிறிய கருப்பு பொட்டுகளை கண்களை போல் ஒட்டவும். அழகிய நத்தார் முகம் தயாராகி விட்டது.