மரக்கறி வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரக்கறி வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மரக்கறி வகைகள் பற்றி தெரிந்து சாப்பிடுங்கள்.

உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம்.

கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும்.

யாருக்கு சாப்பிட கூடாது: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

மரக்கறி வகைகளின் நன்மைகள்.

பாகற்காய்: இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை  நோயை கட்டுப்படுத்த உதவும்.

வாழைத் தண்டு: கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு  இருந்தால் கரைக்க உதவும்.