தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா!

சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில்கூட முன்பு மாதிரி பின்னணி பாடுவதில்லை இளையராஜா. அப்படிப்பட்ட அவரை சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் பாட வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. யுவன் இசையமைக்கும் அந்த படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடுவாரா? மாட்டாரா? என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடியிருககிறார் இளையராஜா. அந்த பாடலை எழுதியிருப்பவர் தனுஷ். ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராகவும் பிரபலமானவர் தனுஷ்.


ஆனால். இப்போது தான் எழுதிய பாடலை இளையராஜா பாடியிருப்பது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை. ஆனால் என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.