தனுஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனுஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'கொலவெறி...' பாடலை மறக்க வைக்குமா 'டங்கா மாரி...'

தனுஷிற்கு இந்திய அளவில் அங்கீகாரத்தைக் கொடுத்த விஷயங்கள் இரண்டு. ஒன்று 'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது பெற்றது, மற்றொன்று 'கொல வெறி...' பாடலின் தாறுமாறான ஹிட். ஆனால், தற்போது 'கொலவெறி...' பாடலைப் பற்றிக் கேட்டாலே தனுஷ் கொலை வெறி ஆகிவிடுகிறாராம். இப்போதும் அவர் எங்கே சென்றாலும் 'கொல வெறி...' பாடலைப் பாடுங்களேன் என்று வற்புறுத்துகிறார்களாம்.

அப்படி வற்புறுத்துவதால் மிகவும் டார்ச்சராக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தனுஷ். அதன் பிறகு பல பாடல்களை தனுஷ் பாடியிருந்தாலும் மீண்டும் மீண்டும் 'கொல வெறி..'பாடலை மட்டுமே பாடச் சொல்லிக் கேட்பதை அவர் விரும்பவில்லை என்பதையே அது காட்டுகிறது.

சிம்புவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதலா..!

சிவகார்த்திகேயன் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் சிம்பு, சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் மோதல் தொடர ஆரம்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பொதுவாக, 'இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்கிறவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை' என்று தெரிவித்திருந்தார்.

 சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் எனப் பலரும் பேச ஆரம்பித்தார்கள். தனுஷ் தான், சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் உருவாகும் படங்களில் நாயகனாக நடிக்க வைத்தார். அதனால்தான் சிம்பு அப்படிப் பேசினார் என்றார்கள். அதன் பின் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனுஷ், 'நானும் ரௌடிதான்' படத்தைத் தயாரிக்க ஆரம்பித்த பின் அந்தப் பேச்சு இன்னும் அதிகமானது. சிவகார்த்திகேயனுக்கும், தனுஷிற்கும் இடையில் மோதல் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்

'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி மாணவனாக நடித்து அறிமுகமான
தனுஷ், இப்போது பல்கலை மாணவனாக மாறிவிட்டார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என திரையுலகில் அவருடைய பாதையை கமல்ஹாசன் வழிக்கு மாறி விட்டாரோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தைக் கூட தனுஷ்தான் இயக்கினார் என்று கூட ஒரு பேச்சு அடிபட்டது. குடும்பமே சினிமாக் குடும்பம் என்பதால் சினிமாவில் தனுஷின் ஈடுபாடு அதிகமிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நேற்று ஒரு சிறுவர் சிறுமியர் கலந்து கொள்ளும் ஒரு தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார், ரசிகர்களுடன் டிவிட்டர் வலைத்தளத்திலும் சாட் செய்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, “என்னை எல்லாரும் நல்லா பாடறன்னு சொல்றாங்க, ஆனால் நான் பாடறதுலாம் பாட்டு இல்லைங்க. இங்க சின்னச் சின்னப் பசங்க பாடறதையெல்லாம் பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்கு.

தனுஷின் மாரி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘வாயை மூடி பேசவும்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார். இவர் இயக்கும் அந்த புதிய படத்தில் நாயகனாக தனுஷும், நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார்கள்.

பெயரிப்படாத நிலையில் இப்படத்தின் தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்டர் வேகமாக இன்டர்நெட்டில் பரவி வருகிறது.

தனுசுடன் நடிக்க விரும்பும் டப்பிங் ஆர்டிஸ்ட்!

தமிழ், மலையாள சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜாரவியின் மகள் ரவீணா. சாட்டை படத்திலிருந்து அவரும் டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார். தமிழ், மலையாளம், இந்தி, மொழி படங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார். அமலா பால் (நிமிர்ந்து நில்), மோனல் கஜ்ஜார் (சிகரம் தொடு), ஸ்ரீதிவ்யா (ஜீவா), சமந்தா (கத்தி), எமி ஜாக்சன் (ஐ) ஆகியோருக்கு சமீபத்தில் டப்பிங் பேசியிருக்கிறார்.

ரவீணாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்க பாட்டிக்கு என்னோட அம்மா ஸ்ரீஜாரவியை சினிமாவில் நடிக்க வச்சு ஹீரோயினாக பார்க்க ரொம்ப ஆசை. அந்த ஆசை நிறைவேறவில்லை.

தனுஷ் படத்தில் ரோபோ ஷங்கர்!

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது சம்சாரம் ஆரோக்கியதினு ஹானிகாரம் என்ற மலையாள படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனுஷின் வுண்டர் பார் பிலிம்சுக்காக ஒரு படத்தை தனுஷ்-காஜல் அகர்வாலை ஜோடி சேர்த்து இயக்குகிறார்.

தற்போது அனேகன், ஷமிதாப் பட வேலைகளில் இருக்கும் தனுஷ், அடுத்து வெற்றிமாறனின் சூதாடி படத்தை முடித்ததும் இந்த படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம்.

தனுசுடன் இணைகிறார் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜீத் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்ட த்ரிஷா ரஜினியுடனும், அவரது மருமகன் தனுசுடனுதான் இதுவரை ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இதில் ரஜினியுடன் நடிப்பதற்கு லிங்கா படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அழைப்பார் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் த்ரிஷா. ஆனால், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவையும், தெலுங்கில் படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்காவையும் அப்படத்துக்கு புக் பண்ணி த்ரிஷாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டனர்.

மேலும், தனுசுடனும் நடிப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த த்ரிஷாவை, ஆடுகளம் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார் வெற்றிமாறன். ஆனால், அப்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் த்ரிஷாவால் அவர்கள் கேட்ட தேதிக்கு கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால்தான் அந்த வாய்ப்பு டாப்சிக்கு சென்றது. வெள்ளாவி நடிகை என்ற அடைமொழியையும் அப்படம அவருக்கு கொடுத்தது.

தனுசுக்கு கன்னடத்தில் சான்ஸ் வாங்கிக்கொடுத்த கொலவெறி பாடல்!

தனுஷின் இசைப்பயணத்தில் கொலவெறி பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில்தான் அந்த பாடல் இடம்பெற்றிருந்தது. அனிருத் அந்த படத்தில்தான் அறிமுகமானார்.

அது மட்டுமின்றி அந்த ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை தனுஷே எழுதி பாடியும் இருந்தார். அப்பாடல் வெளியான சில தினங்களிலேயே சூப்பர் ஹிட்டானது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்கூட அந்த பாடலைக் கேட்டுவிட்டு தனுஷை பாராட்டியிருந்தார். ஆக, எத்தனையோ படங்களில நடித்திருந்தபோதும் அவர் பாடிய அந்த ஒருபாட்டு அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.

தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் காஜல்அகர்வால்

பொல்லாதவன், ஆடுகளம் என வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இரண்டு படங்களுமே மெகா ஹிட். அதிலும் ஆடுகளம் தனுசுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அதனால் அவர்களது கூட்டணி ராசியானதாகி விட்டது. அதையடுத்து சிம்புவைக்கொண்டு வடசென்னை என்றொரு படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். ஆனால் அவர்களுக்கிடையே என்ன மோதல் நடந்ததோ, அந்த படம் ஆரம்பத்திலேயே கிடப்பில் போடப்பட்டது.

அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்க மீண்டும் களமிறங்கிய வெற்றிமாறன், மீண்டும் தனுஷையே அழைத்தார். அதையடுத்து சூதாடி என்ற படத்தை தான் இயக்கிக்கொண்டிருப்பதாக ஒரு பட விழாவில் வெற்றிமாறனே சொன்னார். ஆனால், அப்போது அனேகன், வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் என பல படங்களில் தனுஷ் நடித்துக்கொண்டிருந்ததால். இவர் கேட்ட நேரத்திற்கு அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம்.

சமூக வலைத்தளங்களில் தனுஷின் சாதனை!

கடந்த சில வருடங்களாக திரைப்பட நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள்தான். ஏறக்குறைய எல்லா திரைப்பட நட்சத்திரங்களுமே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கி அதில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தங்களின் அபிமான நட்சத்திரங்களின் அன்றாட நடவடிக்கைகளைத் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக்கில் அவர்களுடைய அதிகாரபூர்வ பக்கத்தை லைக் செய்தும், ட்விட்டரில் அவர்களை பின்தொடர்ந்தும் வருகிறார்கள் ரசிகர்கள். பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருந்தாலும், ஒரு சில நட்சத்திரங்களே ஆக்ட்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர்.. தனுஷ். தனக்கான அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தையும், ட்விட்டர் கணக்கையும் துவங்கி அதில் தொடர்ந்து தன்னைப் பற்றியும், தன் படங்களைப் பற்றியும் செய்திகள் வெளியிட்டு வருகிறார். அதனாலோ என்னவோ, அதிகளவிலான ரசிகர்கள் தனுஷை ட்விட்டரில் பின்தொடரத் தொடங்கியுள்ளார்கள்.

இந்தியில் நடிப்பதையே விரும்பும் மாதவன்!

அலைபாயுதே மாதவன் தமிழில் மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல ஹிட் படங்களில் நடித்தபோதும், வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி சரியான கதைகள் கிடைக்காததால் டோட்டல் கவனத்தையும் இந்தி படங்கள் மீது திருப்பி விட்டார். தற்போது தமிழில் ஒரு படத்திலும், இந்தியில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு என்ற படம் 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து அவர் நடித்த எந்த இந்தி படமும் ஓடவில்லை.

அனேகன் காதல் படமா? ஆக்ஷன் படமா? இயக்குநர் விளக்கம்!

அயன், மாற்றான், தற்போது அனேகன் என்று தமிழ் அகராதியிலிருந்து தேடிப்பிடித்து புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை தன் படத்துக்கு தலைப்பாக வைத்து வருகிறார் கே.வி.ஆனந்த். சூர்யாவை வைத்து இயக்கிய மாற்றான் படம் படு தோல்வியடைந்தநிலையில் தற்போது தனஷை வைத்து அனேகன் படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தில் 4 வித்தியாசமான கெட்அப்களில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மும்பை வரவு அமைரா தஸ்தர் நடிக்கிறார்.

முக்கிய வேடமொன்றில் அதாவது வில்லன் வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார். அனேகன் படத்தின் ஒளிப்பதிவை ஓம்பிராகஷ் கவனிக்க, இசையமைக்கிறார் கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.

தனுஷ் படத்தில் காஜல்அகர்வால் நடிப்பது உறுதிதானாம்!

தெலுங்கில் யவடு , கோவிந்துடு ஆண்டாரிவாரிலே ஆகிய படங்களில் நடித்துள்ள காஜல்அகர்வாலுக்கு அடுத்து அங்கு புதிய படங்கள் இல்லையாம். அதனால் தற்போது இந்தியில் கமிட்டாகியுள்ள 2 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜில்லாவுக்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார் காஜல்.

முக்கியமாக, மீண்டும் விஜய், சூர்யா என தான் ஏற்கனவே நடித்த ஹீரோக்களுடன் மீண்டும் டூயட் பாடுவதற்காக கோடம்பாக்கத்திற்கு விசிட அடித்து படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு, இதுவரை கறாலாக சம்பளம் பேசி வந்த காஜல், இப்போது பெரிய ஹீரோ படவாய்ப்பு என்றால் முடிந்தவரை சம்பளத்தை குறைத்துக்கொள்வதாகவும் முன்மொழிந்து வருகிறாராம்.

சூதாடியில் இறங்குகிறார் தனுஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு புது உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதையடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வந்த அனேகன் படத்தை முடித்து விட்டவர், அதற்கு முன்பிருந்தே நடித்து வந்த ஷமிதாப் படத்தின் படப்பிடிப்பையும் இந்த மாதம் 6-ந் தேதியோடு முடித்துக் கொடுக்கிறார்.அதனால் அதற்கடுத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

என்ற போதும், தன்னை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து தன்னை வைத்து இயக்கும் சூதாடியில் முழுவீச்சில் இறங்கயிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறகனவே நடைபெற்றதாக கூறப்பட்டாலும், இனிமேல்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள்.

ஹிந்தியில் வேலையில்லா பட்டதாரி...! தனுஷே ஹீரோவாக நடிக்கிறார்...!

இந்த வருடம் வெளியான படங்களில் உண்மையிலேயே வணிக ரீதியில் வெற்றியடைந்த படம் - வேலையில்லா பட்டதாரி. இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலையில்லா பட்டதாரி 75வது நாளைக்கடந்து 100 அவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜை, இயக்குனராக்கி தனஷ் தயாரித்த இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வாங்கி வெளியிட்டார். தனுஷின் அடுத்தடுத்த படங்களையும் மதனுக்கே தரவதாக சொல்லி இருக்கிறாராம் தனுஷ். எனவே வேலையில்லா பட்டதாரி படத்தை எப்பாடுபட்டாவது 100 நாள் வரை ஓட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மதன்.

வெற்றிமாறனின் நான்கு ஆண்டு ரகசியம்!

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெறறிமாறன். இதில் ஆடுகளம் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அதற்கடுத்து வெற்றிமாறன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமானது. அதையடுத்து அவர் சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை எடுக்கவும் தயாரானார்.

ஆனால், இதோ அதோ என்று சொன்னவர்கள பின்னர் படத்தையே கிடப்பில் போட்டு விட்டனர். அதையடுத்து படம் இயக்கும் வேலைகளில் இறங்காத வெற்றிமாறன், உதயம் என்எச்4 என்ற படத்தை தயாரித்தவர், நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அதைத் தொடர்ந்து பொறியாளன் என்ற படத்தை வெளியிட்டார். தற்போது காக்கா முட்டை, ஈட்டி போன்ற படங்களை தயாரிக்கிறார்.

அறிமுக நடிகையை ஓங்கி அடித்த தனுஷ் : படப்பிடிப்பில் பரபரப்பு...!

அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் அம்ரியா தஸ்தூர் என்ற நடிகையின் முகத்தில் தனுஷ் குத்தியதால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ், அம்ரியா தஸ்தூர் மற்றும் பலர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் திரைப்படம் அனேகன்.
இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தனுஷ், அம்ரியா தஸ்தூர் மற்றும் வில்லன்கள் நடித்த சண்டைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது.

தனுஷ் புராணம் பாடும் கோலிவுட் இயக்குனர்கள்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்கள் ஒவ்வொருவருமே தங்களைச்சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது, டைரக்டர்கள் கதை சொல்லும்போது, சென்சார் போர்டு கட் பண்ணுவது போன்று இவர்களும் இந்த மாதிரி காட்சிகளெல்லாம் எனது இமேஜ்க்கு பங்கம் விளைவித்து விடும் என்று கத்தரி கொண்டு கட் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.
ஆக, அந்த டைரக்டர் கதையை சொல்லி முடிக்கும்போது அந்த கதை வேறு மாதிரியான கோணத்தில் போய் நிற்கும். குறிப்பாக, அவர் எந்த ஹீரோவிடம் கதை சொன்னாரோ அவர் விரும்பத்தகுந்த கதையாக உருமாறியிருக்கும். ஆனால் இந்த விசயத்தில் தனுஷ் வித்தியாசமானவர்.

தனுசை வைத்து 100 படங்களை இயக்குவாராம் கே.வி.ஆனந்த்!

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், தற்போது தனுசை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் அனேகன். மரியான் படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் தனுஷ் முழுசாக நடிக்கயிருந்தார்.
ஆனால் இடையினில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி படத்தை முடிக்க வேண்டியிருந்ததால் அனேகன் தாமதமானது.
அதையடுத்து இந்தியில் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி ஆகிய பட வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல படங்களில் தனுஷின் கவனம் சிதறியிருந்ததால் அனேகன் திட்டமிட்டதை விட பல மாதங்கள் அதிகமாகி விட்டது. இருப்பினும் இப்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு பூசணிக்காய் உடைத்து விட்டனர்.

வேலையில்லா பட்டதாரி ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி...!

தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க முன்னணி ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலை அள்ளியதாகச் சொல்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாக ஏழு தோல்விப் படங்களைக் கொடுத்த தனுஷிற்கு 'வேலையில்லா பட்டதாரி' படம் வெற்றி எண்ணிக்கையை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. இதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த 'ராஞ்சனா' இந்திப் படமும் வெற்றி பெற்றதால் இந்திய அளவிலும் புகழ் பெற ஆரம்பித்தார். தற்போது அமிதாப்புடன் 'ஷமிதாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.