சூர்யா, காஜல் அகர்வால் நடித்த 'மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'அயன், கோ, மாற்றான்' படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமானது. பல காரணங்களால் அவ்வப்போது படப்பிடிப்பு தடைபட்டு தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. தனுஷ், இடையில் ஹிந்திப் படங்களில் நடிக்க சென்று விட்டதும் தாமதத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.