சூர்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூர்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் மாதம் 'மாஸ்' ரிலீஸ்...!

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா,
நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. அங்கு மிக நீண்ட ஷெட்யூல் நடைபெற்றிருக்கிறது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம்.

அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகி பிப்ரவரிக்குள் முடிந்த பின் படத்தை மார்ச் மாதக் கடைசியில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். சூர்யா, 'மாஸ்' படம் மூலம் அவருடைய வெற்றியை நிரூபித்து ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளார். 'அஞ்சான்' படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எழுந்த அதிரடியான விமர்சனங்களால் அந்தப் படத்தின் இயக்குனரான லிங்குசாமி மட்டும் பாதிக்கப்படவில்லை, சூர்யாவும்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்.

சூர்யாவின் அடுத்த படம் "24"

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்து விக்ரம் கே. குமாரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மாஸில் நயன்தாரா, எமி ஜக்சன், ப்ரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் விக்ரம் கே. குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இவர் சிம்பு நடித்த அலை, மாதவன் நடித்த யாவரும் நலம், தெலுங்கில் மனம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்திற்கு '24" என்ற பெயரை வைக்கலாமா என்று பரீசீலித்து வருகின்றனர்.

அனேகன் காதல் படமா? ஆக்ஷன் படமா? இயக்குநர் விளக்கம்!

அயன், மாற்றான், தற்போது அனேகன் என்று தமிழ் அகராதியிலிருந்து தேடிப்பிடித்து புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை தன் படத்துக்கு தலைப்பாக வைத்து வருகிறார் கே.வி.ஆனந்த். சூர்யாவை வைத்து இயக்கிய மாற்றான் படம் படு தோல்வியடைந்தநிலையில் தற்போது தனஷை வைத்து அனேகன் படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தில் 4 வித்தியாசமான கெட்அப்களில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மும்பை வரவு அமைரா தஸ்தர் நடிக்கிறார்.

முக்கிய வேடமொன்றில் அதாவது வில்லன் வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார். அனேகன் படத்தின் ஒளிப்பதிவை ஓம்பிராகஷ் கவனிக்க, இசையமைக்கிறார் கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.

நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் - கார்த்தி!

தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்திக்கு தற்போது வெளியாகி இருக்கும் மெட்ராஸ் படம், ஓரளவுக்கு பெயரை பெற்று தந்துள்ளது. அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய இப்படம், வட சென்னை ஏரியாவில் ஒரு சுவற்றை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருந்தது. மெட்ராஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில், பத்திரிகையாளர்கள் முன்பு நடந்தது.

அப்போது, இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்த ஜெயராம் பேசுகையில், கார்த்தியை ஓவராக புகழ்ந்து பேசினார். மெட்ராஸ் படத்தில் நிறைய பேர் நடிக்க தயங்கினார்கள், ஆனால் நீங்கள்(கார்த்தி) தைரியமாக நடித்தீர்கள். உங்களை பார்க்கும்போது எனக்கு நீங்கள், மக்களின் நாயகனாக தெரிகிறீர்கள். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்.க்கு பிறகு மக்கள் நாயகன் என்ற இடம் காலியாகத்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் மக்கள் நாயகனாக வளர வேண்டும், நான் என்றார்.

புதிய படத்துக்கு விஜய்-சூர்யா படத்தின் தலைப்பை வைத்த சுசீந்திரன்!

1997ல் வசந்த் இயக்கிய படம் நேருக்கு நேர். டைரக்டர் மணிரத்னம் தயாரித்த இந்த படத்தில் விஜய் நாயகனாக நடித்தார். இன்னொரு நாயகனாக இந்த படத்தில்தான் சூர்யா அறிமுகம் ஆனார். இதில் விஜய்க்கு ஜோடியாக கெளசல்யாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர். அந்த படத்தின் நேருக்கு நேர் என்ற தலைப்பை, ஜீவா படத்திற்கு பிறகு தான் இயக்கும் படத்திற்கு சுசீந்திரன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ, இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக சம்ஸ்க்ருதி செனாய் என்ற புதுமுகம் நடிக்கிறாராம். அக்டோபர் 6-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி 30 நாட்களில் டோட்டல் படப்பிடிப்பும் முடிகிறதாம். இந்த ஸ்ரீ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு ஒரு பெண் இயக்குனர் இயக்கிய சோம்ப்டி என்றொரு படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் வியாபாரம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது.

ஐ படத்திற்கு சூர்யா முக்கியத்துவம்

ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டை முதன் முறையாக சூர்யா சந்தித்து விளம்பரம் தேடிக் கொண்டதாக சூர்யா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஐ படத்தை தனது வாட்ஸ் ஆஃப் பக்கத்தின் புரபைல் பிக்சராக வைத்து படத்துக்கு வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார்.

"சினிமாவில் உண்மையான நண்பர்கள் அமைவது சிரமம். நண்பர்களாக இருப்பவர்கள் நண்பர்களாக நடித்துக் கொண்டிருப்பதாகத்தான் பொருள். ஆனால் சூர்யா எல்லோருக்கும் உண்மையான நண்பனாக இருக்கிறார். அதனால்தான் தான் நடிக்காத படத்தை தன் புரபைல் படமாக போட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் இந்த மனது வேறு எந்த நடிகருக்காவது வருமா? என்பது சந்தேகமே" என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அஞ்சான் படத்திற்கு வரி விலக்கு கிடைக்காதது ஏன்...?!

நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்திற்கு, வரி விலக்கு அளிக்கும்படி தேர்வுக்குழு உறுப்பினர் யாரும் பரிந்துரை செய்யாததால் வரி விலக்கு அளிக்க இயலாது என, அரசு அறிவித்துள்ளது. தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது உட்பட, பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்கு, தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது. வரி விலக்கு அளிக்க தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், சூர்யா நடித்து, சமீபத்தில் வெளியான, அஞ்சான் திரைப்படம், கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்கு, தகுதியானது அல்ல என, பரிந்துரை செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு...

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் ஜோதிகா

அஜீத் நடித்த வாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. அக்கா நக்மா சிபாரிசால் சினிமாவுக்கு வந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அன்று முதல் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் இணைந்து நடித்து காதல் வளர்த்தார்கள். அதன் பிறகு 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு முன் ஜோதிகா கடைசியாக நடித்த படம் மொழி. அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். தற்போது சூர்யா, ஜோதிகா தம்பதிகளுக்கு 7வயதில் தியா என்ற மகளும், 4 வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். இடையில் சில விளம்பர படங்களில் சூர்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வந்தது. அதையெல்லாம் மறுத்து வந்தார்கள்.

ரஜினிகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - சூர்யா!

'உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்' என ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியின் டைட்டிலுக்காக போட்டி போடுவதைப் போல இன்றைய சில முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னர் ஆரம்பமான இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? என்ற பேச்சு தற்போதைக்கு கொஞ்சம் அடங்கியுள்ளது. எப்போது அதைப் பற்றி மீண்டும் 'கத்தி' பேச ஆரம்பிப்பார்களோ தெரியாது. தற்காலிகமாக அந்த பேச்சு அடங்கியுள்ளது அவ்வளவுதான்.

'அஞ்சான்' டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் வானளாவ புகழ்ந்த விஷயமெல்லாம் நடந்தது.

சிவாஜியின் சாதனையை முறியடித்த அஞ்சான்!

சிங்கம் - 2 சூப்பர்ஹிட் வெற்றிப் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது - அஞ்சான் திரைப்படம். ஆகஸ்ட் 15 - ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.

ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தின் சென்னை விநியோக உரிமையை அபிராமி ராமநாதன்தான் வாங்கினார். அப்போது சிவாஜி திரைப்படத்தை சென்னையில் மட்டும் 17 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். இப்போது சிவாஜி படத்தின் சாதனையை முறியடிக்கும் விதமாக அஞ்சான் படத்தை சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் அபிராமி ராமநாதன்!

சிரஞ்சீவி எனக்கு முன்னுதாரணம்...சூர்யா பேச்சு...

அஞ்சான்' படத்தின் பிரமோஷனுக்காக பல ஊர்களுக்குச் சுற்றி வருகிறார் சூர்யா. சென்னையில் ஆரம்பமான இசை வெளியீடு, அடுத்து ஹைதராபாத்தில் நடந்தது, பின்னர் கொச்சிக்குச் சென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சூர்யா, நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த 'சிக்கந்தர்' படத்தின் இசை வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் லிங்குசாமி, 'சிக்கந்தர்' படத்தை தெலுங்கில் வெளியிடும் தயாரிப்பாளர் லகடபதி ஸ்ரீதர், நடிகை பூனம் கௌர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 'அஞ்சான்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'சிக்கந்தர்' 15ம் தேதி வெளிவருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கஜினி' திரைப்படம் சூர்யாவின் மாஸ் இமேஜ் உயர முக்கிய காரணமாக அமைந்தது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பின் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, அவருக்கென அங்கு ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியது.

 சூர்யா நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'அஞ்சான்' படமும் அங்கு 'சிக்கந்தர்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டில் எண்ணற்ற ரசிகர்கள் கலந்து கொண்டனர். தெலுங்குத் திரையுலகிலும் இந்த படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஞ்சான் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்க்க எதிர்ப்பு!

யுடிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவருகிறது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்ற அஞ்சான் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் அண்மையில் நிறைவுற்று, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகி உள்ளது. சில தினங்களுக்கு முன் அஞ்சான் படத்தை சூர்யா, லிங்குசாமி உட்பட குறிப்பிட்ட சிலர் பார்த்தனர். படத்தை பார்த்த சூர்யாவுக்கு பரம திருப்தி. சூர்யாவின் பாராட்டைத் தொடர்ந்து படத்தை சென்சாருக்கு அனுப்பும் பணிகளைத் தொடங்கினார்கள்.

அஞ்சான் படத்தை சில தினங்களுக்கு முன் சென்சாருக்கும் அப்ளை பண்ணி இருக்கின்றனர். தணிக்கைக்காக அனுப்பப்பட்ட படங்களை தணிக்கைக்குழுவினர் பார்க்க அப்ளை பண்ணப்பட்ட சீனியாரிட்டி வரிசைப்படி தேதி கொடுக்கப்பட வேண்டும். அஞ்சான் படத்துக்கு முன்பே வேறு பல படங்கள் அப்ளை பண்ணப்பட்டு, அப்படங்களைப் பார்க்க தேதி கொடுக்கப்படாதநிலையில், கடைசியாய் அப்ளை பண்ணப்பட்ட அஞ்சான் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறது தணிக்கைக்குழு. அதாவது இன்று அஞ்சான் படத்தைப் பார்க்க இருக்கிறது தணிக்கைக்குழு.

'அஞ்சான்' சமந்தா, அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்...!

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சான்' படத்தின் மூலம் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சமந்தா ஆசைப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் பின் சமந்தா யார் என்பது ஓரளவிற்கு வெளியில் தெரிந்தாலும் அவர் தனி கதாநாயகியாக தமிழில் நடித்த 'பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.

சூர்யாவை இயக்கும் 'மனம்' விக்ரம் குமார்...!

மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் 'இஷ்க்' என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மனம்' படத்தையும் இயக்கியவர்.

அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா தற்போது 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் குமார் இயக்கும் படம் ஆரம்பமாக உள்ளது.

விஜய், அஜீத்துடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்கிறார் சூர்யா!

ரஜினி, கமலுக்குப்பிறகு அடுத்த போட்டியாளர்கள் யார் என்றால் அது அஜீத்-விஜய் இருவரும்தான். எப்படி ரஜினி, கமல் இருவரும் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜத்தில் நண்பர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்-அஜீத் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள்தான். ஒருவர் படத்தை ஒருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் பழக்கத்தை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.

அதனால்தான் தங்களது ரசிகர்கள் மோதிக்கொள்ளும்போது, தாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக சில செய்திகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

சமந்தா மீது கடும் கோபத்திலிருக்கும் சூர்யா....!

தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகைகள் அனைவருமே அவரவர் படங்களின் இசை வெளியீட்டுக்கோ, பத்திரிகையாளர் சந்திப்புக்கோ கண்டிப்பாக வந்து விடுவார்கள். அங்கு படத்தின் நாயகியர் வரும் போதுதான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். நடிகர்களுக்குள் எப்படிப்பட்ட போட்டி இருந்தாலும், நடிகைகள் அனைத்து ஹீரோக்களின் படங்களின் விழாக்களுக்கும் தவறாமல் வருவார்கள்.

அப்படியிருக்க சமீபத்தில் நடைபெற்ற 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின.

சூர்யாவுக்கு ஷாக் கொடுத்த பார்த்தீபன்!!.......

சினிமா விழாக்களில் யாராவது நடிகர்களை உயர்த்தி பேச வேண்டுமோ அல்லது தாழ்த்தி பேச வேண்டுமோ எதுவாக இருந்தாலும் தங்குதடையின்றி சரளமாக, தைரியமாக பேசி விடுவார் பார்த்திபன். குறிப்பாக ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்களை பிக்கப் நடிகர்கள், ஒரு நடிகைங்களகூட விட்டு வைக்க மாட்டேங்கிறீங்களே என்று அப்படி இப்படி ஏதாவது சொல்லி அவர்களை கதிகலங்க வைத்து விடுவார்.

அதேசமயம் மேல்தட்டு ஹீரோக்களின் பட விழாக்களில் என்றால் அடக்கி வாசிப்பார். தனக்கே உரிய பாணியில் எடக்கு மடக்காக பேச்சைத் தொடங்கினாலும் முடிவு என்னவோ சுமூகமாகவே இருக்கும். அந்த வகையில், அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன் என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.

சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் கார்த்தி!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் இசைவெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே விழா நடைபெறுவதாக இருந்த அதே நாளில் அதே இடத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தனர். படப் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக்காட்டும் நிகழ்வு என்று சொல்லிவிட்டு, இசைவெளியீட்டுவிழாவையே நடத்தி முடித்தனர்.

வழக்கமாக சூர்யா நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழாக்களில் மேடையில் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமே இடம்பிடித்திருப்பார்கள். ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக அஞ்சான் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், மதன் கார்க்கி, விவேகா, கபிலன் என பாடல்களை உருவாக்கியவர்களுக்கு விழா மேடையில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.

யுவன் பாட இருந்த பாடலை தானே பாடியிருக்கின்றார் சூர்யா.....!

சமீப காலமாக சில நடிகைகள் படங்களில் பாடி வருதை சில இசையமைப்பாளர்கள் எதிர்த்து வருகின்றனர். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் பலர் பாடி வருவது கண்டனத்துக்குரியது என்ற குரலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் 'அஞ்சான்' படத்தில் இடம் பெற்ற 'ஏக் தோ தீன் சார்...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் சூர்யாவும் பின்னணிப் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த பாடலை சூர்யா ஏன் பாடினார் என்பதற்கான காரணம், இன்று காலை நடைபெற்ற 'அஞ்சான்' ஆடியோ ரிலீசில் வெளிவந்தது. மேற்கண்ட பாடலை முதலில் படத்தின் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். அந்த பாடலை வைத்து படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள்.