மாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் மாதம் 'மாஸ்' ரிலீஸ்...!

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா,
நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. அங்கு மிக நீண்ட ஷெட்யூல் நடைபெற்றிருக்கிறது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம்.

அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகி பிப்ரவரிக்குள் முடிந்த பின் படத்தை மார்ச் மாதக் கடைசியில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். சூர்யா, 'மாஸ்' படம் மூலம் அவருடைய வெற்றியை நிரூபித்து ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளார். 'அஞ்சான்' படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எழுந்த அதிரடியான விமர்சனங்களால் அந்தப் படத்தின் இயக்குனரான லிங்குசாமி மட்டும் பாதிக்கப்படவில்லை, சூர்யாவும்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்.