விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்

'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி மாணவனாக நடித்து அறிமுகமான
தனுஷ், இப்போது பல்கலை மாணவனாக மாறிவிட்டார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என திரையுலகில் அவருடைய பாதையை கமல்ஹாசன் வழிக்கு மாறி விட்டாரோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தைக் கூட தனுஷ்தான் இயக்கினார் என்று கூட ஒரு பேச்சு அடிபட்டது. குடும்பமே சினிமாக் குடும்பம் என்பதால் சினிமாவில் தனுஷின் ஈடுபாடு அதிகமிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நேற்று ஒரு சிறுவர் சிறுமியர் கலந்து கொள்ளும் ஒரு தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார், ரசிகர்களுடன் டிவிட்டர் வலைத்தளத்திலும் சாட் செய்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, “என்னை எல்லாரும் நல்லா பாடறன்னு சொல்றாங்க, ஆனால் நான் பாடறதுலாம் பாட்டு இல்லைங்க. இங்க சின்னச் சின்னப் பசங்க பாடறதையெல்லாம் பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்கு.

ராஜாவாக மாறும் விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு மாரீசன், கருடா என்று தலைப்புகள் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானபோதும், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், நல்ல டைட்டிலை அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் டைட்டிலை உடனடியாக அறிவிக்காமல் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியதுபோல், விஜய்யும் தனது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து புதிய பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், சமீபகாலமாக அதிரடி ஆக்சன் படங்களாக நடித்து வரும் விஜ்ய, இந்த படம் சரித்திர பின்னணி கொண்டது என்பதால், இரண்டில் ஒரு வேடத்தில் அரசர் கெட்டப்பில் வருகிறாராம்.

'வேற மாதிரி பேசி' சிக்கிய விஜய்...!

நெல்லையில் இரு நாட்களுக்கு முன் நடந்த 'கத்தி' படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் விஜய் பேசும் போது, “நம்மள வெட்ட வர்ற எதிரி கிட்ட நாம வெள்ளைக் கொடி காட்டிட்டு நிக்க முடியாது இல்லையா, அவனோட போக்குலயே விட்டுடணும். சாஃப்ட்டா பேசினால் சாஃப்ட்டா பேசணும், வேற மாதிரி பேசினால் நாமளும் வேற மாதிரி பேசணும்,” சினிமாவில் பேசும் பன்ச் வசனம் போலவே பேசி அவருடைய ரசிகர்களிடையே பலத்த கைத்தட்டல்களை வாங்கினார்.

அஜித் ரசிகர்களைப் பற்றித்தான் அவர் அப்படிப் பேசினார் என்பதைப் புரிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் நேற்று முழுவதும் “வேற மாதிரி விஜய்”, “வேற மாதிரி மீமீ” என விஜய்யை பயங்கரமாகக் கிண்டலடித்து அந்த வார்த்தைகளை டிவிட்டர் டிரெண்டிங்கில் கொண்டு வந்து விட்டனர்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் அமலாபால்!

தமிழில் மைனா படத்துக்குப்பிறகு எப்படி அமலாபாலுக்கு ஒரு மரியாதை கிடைத்ததோ அதேபோன்ற மரியாதையை தற்போது மலையாளத்தில் அவர் நடித்து வரும் மிலி படம் அவருக்கு கொடுக்கும் என்கிறார்கள். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகியிருநத அமலாபால், அதில் தனக்கு முக்கியத்துவம்

கொடுப்பட்டிருந்ததால்தான் அதே ஆர்வத்தில் இப்போது வரை நடித்துக்கொண்டிருக்கிறாராம். மேலும், மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை இயக்கிய ராஜேஷ்பிள்ளை இயக்கி வரும் இந்த மிலி படத்தில் ஒரு துணிச்சலான பெண்ணாக நடிக்கிறாராம் அமலாபால், அதோடு அப்படத்தின் கதை நல்லதொரு கருத்து சொல்லும் விதமாக உள்ளதாம். அதனால் இதுவரை நான் நடித்த படங்களில் இது எனது மனதுக்கு நிறைவான படம் என்று கூறி வருகிறார் அமலாபால்.

விஜய் படம் பார்த்தாலே ஜாலியா இருக்கும்!- விக்ரம்

இளைய தளபதி விஜய் படங்கள் பற்றி விக்ரம் கூறுகையில் விஜய் படம் என்றாலே காதல், ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி, நடனம் என அனைத்து ஜனரஞ்சகமான விசயங்களும இருக்கும். அதனால்தான் அவர் படங்கள் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கிறது.

அவரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக அந்த மாதிரியான கதைகளாகவே பெரும்பாலும் செலக்ட் பண்ணி நடிக்கிறார். அந்த வகையில், ரசிகர்களுக்குத்தான் விஜய் படம் பிடிக்கிறது என்றால் சீயான் விக்ரமுக்கும் விஜய் நடிக்கும் படங்கள் ரொம்ப பிடிக்குமாம்.

மாரீசனுக்காக விஜய் ஹன்சிகா நடனம்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாரீசன் படத்தின் படபிடிப்பு தொடங்கி விட்டது. முதல் கட்டமாக சில மாதங்களுக்கு முன்பே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சியை படமக்கியிள்ளனர்.

நூற்றுக்கணக்கான அழகிகள் அணிவகுத்து இந்த பாடல் காட்சியில் விஜய்யும், ஹன்ஷிகாவும் அழகு மிளிர நடமாடியிருக்கின்றார்கள். சரித்திர பின்னணி கொண்ட இந்த கதைக்கான இளவரசி கெட்டப்பில் உடையணிந்து ஜோலித்தாரம் ஹன்சிகா.

பாடல் காட்சியுடன் தொடங்கியது விஜய்யின் அடுத்தப் படம்

‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த விசயம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த செட்டில் இப்படத்தின் பாடல் காட்சி 100 வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளார். இந்த பிரம்மாண்டமான செட்டில் சண்டைக்காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் சிம்புதேவன்.

விஜய் படத்துக்காக அரண்மனை செட்

‘கத்தி’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி உட்பட பலர் நடிக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சோழ ராஜ்ஜியத்தின்போது நடந்த போரும் நடப்பு காலத்தில் மியூசியத்தில் நடப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு மாரீசன் என்று கூறிவந்தனர். ஆனால், படக்குழு மறுத்துள்ளது. இதன் ஷூட்டிங் 10&ம் தேதி சென்னை அருகே போடப்பட்டிருக்கிற பிரமாண்ட அரண்மனை அரங்கில் தொடங்குகிறது. இங்கு விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. 30 நாட்கள் இங்கு ஷூட்டிங் நடக்கிறது.

லிங்கா படம் கத்தி படத்தின் கதையா? பட அதிபர் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ்சின் இயக்கத்தில் வெளியாகி விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. விவசாயிகள், விவசாயம், தண்ணீர் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடும் இளைஞன் கேரக்டரில் விஜய் வருகிறார்.

ரஜினியின் ‘லிங்கா’ படமும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்தே எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏரி தண்ணீரை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக விவசாயிகள் பக்கம் நின்று போராடும் கேரக்டரில் ரஜினி வருகிறார் என்கின்றனர்.

டீக்கடை ஊழியர் மகளின் மேற்படிப்பு செலவை ஏற்ற விஜய்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்ப்பவர் எம்.ஷாகுல்ஹமீது. இவரது மனைவி பாஹிராபேஹம். இவர்களது மகள் பாத்திமா சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். பாத்திமாவிற்கு இன்ஜினீயரிங் துறையில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.

இந்த விஷயத்தை தனது உதவியாளர்கள் மூலம் அறிந்த விஜய், பாத்திமாவின் இன்ஜினீயரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார். சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினீயரிங் கல்லூரியில் இதற்கான தொகையை விஜய் செலுத்தியுள்ளார்.

கத்தி ஹிந்திக்குப் போகுமா...?

'கத்தி' படத்தைப் பற்றி பல சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரம் ஸ்டடியாகவே இருக்கிறது என்கிறார்கள். நேற்றுடன் முடிந்த வார இறுதி வசூல் 90 கோடி ரூபாய் அளவைத் தொட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த வார முடிவிற்குள் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டினால் ஆச்சரியமில்லை என்கிறார்கள். இதனிடையே 'கத்தி' படம் தெலுங்கில் ரீமேக் ஆகுமா என்பது சந்தேகமாகிவிட்டது. இப்படத்தை டப்பிங் படமாகவே விரைவில் வெளியிட உள்ளார்கள்.

'எந்திரன்' வசூலை 'கத்தி' மிஞ்சுமா...?

'கத்தி' படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இந்த அளவிற்கு வசூலை அள்ளித் தரவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஒரு சில சிறிய படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடிய நிலையில் 'கத்தி' படத்தின் ஓட்டம் வசூல் ரீதியாக புதிய சாதனைகளைப் புரிந்து வருகிறதாம். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே 'துப்பாக்கி' படம்தான் அதிக அளவில் வசூலைக் குவித்த படமாக இருந்தது. ஆனால், அந்தப் படத்தின் வசூலை 'கத்தி' ஒரு வாரத்திற்குள்ளாகவே முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கத்தி படத்தின் வசூல் 'எந்திரன்' வசூலை மிஞ்சவும் வாய்ப்புள்ளதாம்.

2ஜி வசன விவகாரம்: விஜய்,முருகதாஸ் மீது அவதூறு வழக்கு

கத்தி படத்தில், 2ஜி ஊழல் தொடர்பான வசனத்தை பயன்படுத்திய, நடிகர் விஜய் உட்பட குழுவினர் மீது நடவடிக்கை கோரி, மதுரை கோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது.நாகமலைப்புதுக்கோட்டை வக்கீல் ராமசுப்பிரமணியன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: கத்தி திரைப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் போது, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நிலுவையில் உள்ள, 2ஜி வழக்கு குறித்த வசனம் இடம் பெற்றிருந்தது. 2ஜி என்றால் என்னன்னு தெரியுமா...? வெறும் காற்றை வைத்து கொள்ளையடித்தவர்கள் இருக்கும் ஊரு இது என்ற வசனம், இந்த நாட்டையும், நாட்டை ஆட்சி செய்தவர்களையும் கேவலமாக சித்தரித்துள்ளது. கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக, பல கோடி மக்கள் பார்க்கும் சினிமாவில் விஜய் யன்படுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!

துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முருகதாஸ்-விஜய் கூட்டணியில், இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம் கத்தி. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலையும் குவித்து வருகிறது. இதற்கிடையே கோவையில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விஜய், சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில் கத்தி படம் வெற்றி தொடர்பாக, சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை மாலையில் சந்தித்தார் நடிகர் விஜய். ஆனால் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத விஜய் இப்படத்தை வெற்றியடைய செய்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டு ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் தனித்தனியாக நின்று போட்டோ மட்டும் எடுத்து கொண்டார். கத்தி படம் தொடர்பாக விஜய்யிடம் பல கேள்விகளை கேட்க நினைத்திருந்த பத்திரிகையாளர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர்.

தனுசுடன் இணைகிறார் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜீத் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்ட த்ரிஷா ரஜினியுடனும், அவரது மருமகன் தனுசுடனுதான் இதுவரை ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இதில் ரஜினியுடன் நடிப்பதற்கு லிங்கா படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அழைப்பார் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் த்ரிஷா. ஆனால், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவையும், தெலுங்கில் படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்காவையும் அப்படத்துக்கு புக் பண்ணி த்ரிஷாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டனர்.

மேலும், தனுசுடனும் நடிப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த த்ரிஷாவை, ஆடுகளம் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார் வெற்றிமாறன். ஆனால், அப்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் த்ரிஷாவால் அவர்கள் கேட்ட தேதிக்கு கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால்தான் அந்த வாய்ப்பு டாப்சிக்கு சென்றது. வெள்ளாவி நடிகை என்ற அடைமொழியையும் அப்படம அவருக்கு கொடுத்தது.

அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!

குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்திருப்பவர் அனிருத். இவர் இசையமைத்த முதல் படமான 3 படத்தின் ஒய்திஸ் கொலவெறி பாடல் தொடங்கி தற்போது கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள செல்பி புள்ள பாடல் வரை அனைத்துமே ஹிட்தான்.

ஒரு பாடல் கூட சோடை போகவில்லை. அந்த அளவுக்கு தான் கம்போஸ் செய்த ஒவ்வொரு பாடல்களிலுமே ஏதாவது ஒரு புதுமை புகுத்தி ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளார் அனிருத். அதிலும் தற்போது விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைத்ததன் மூலம் முன்னணி இசையமைப்பாளர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் அனிருத். இந்தநிலையில், அடுத்து மேலும் சில பிரபல ஹீரோக்களின் படங்களும் அவர் பக்கம் திரும்பி நிற்கிறது.

12 வயதுக்கு உட்பட்டவர்கள் கத்தி படத்தை பார்க்க முடியாது!

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரும் படம் கத்தி. இந்த படம் உலகமெங்கிலும் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. அதிலும், பிரிட்டனில் 70 தியேட்டர்களில் திரையிடப்படுகிறதாம். இதற்கு முன்பு ரஜினி நடித்த எந்திரன் கூட பிரிட்டனில் 30 தியேட்டர்களில்தான் வெளியாகியிருக்கிறது.

ஆக, ரஜினி பட சாதனையை தற்போது விஜய் படம் முறியடித்திருக்கிறது. மேலும், அங்கு வெளியாகும் கார்ட்டூன் படங்களுக்கு 12 என்ற சர்டிபிகேட் கொடுப்பார்களாம். அந்த மாதிரி படங்களைத்தான் சிறுவர்கள் தனியாக சென்று பார்க்க முடியுமாம். ஆனால், கத்தி படத்திற்கோ 12ஏ என்ற சர்டிபிகேட்டை பிரிட்டன் சென்சார்போர்டு வழங்கியிருக்கிறது. அதனால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் படத்தை பார்க்க வேண்டுமென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன்தான் பார்க்க முடியுமாம்.

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் முருகதாஸ்-ஹரி!

இந்த தீபாவளியில் ஷங்கரின் ஐ படமும் திரைக்கு வருவதாக இருந்தால் ஒரு மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கும். ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி ஆகியோர் களத்தில் நின்றிருப்பார்கள. அதேபோல், விஜய், விக்ரம், விஷால் ஆகியோரும் வரிந்து கட்டியிருப்பார்கள்.

ஆக ஒரு பெரிய போட்டி யுத்தமே நடந்திருக்கும். ஆனால், இப்போது ஐ படம் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால், விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.

அஜீத்தை கேட்ச் பண்ணுகிறார் ஹன்சிகா!

தற்போதைய புது வரவு நடிகைகள் அனைவருக்குமே அஜீத்துடன் ஒரு படத்திலேனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அது சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. பலருக்கு நிராசையாகி விடுகிறது.அந்த வகையில் தற்போது பீல்டில் இருக்கும் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா இருவரும் அஜீத்துடன் சில படங்களில் நடித்து விட்டனர்.
அதேபோல் தமன்னாவுக்கு வீரம் படத்தில் லக் அடித்தது. அதையடுத்து அனுஷ்காவுக்கு தற்போது அவரது 55வது படத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால், ஹன்சிகாவுக்கு வேலாயுதம் படத்தையடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் விஜய்யுடன் நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டபோதும், அஜீத்துடன் மட்டும் ஒரு படத்தில்கூட நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை.

விஜய்க்குப் பிடித்த ஒரே நடிகை மீனா...

90களில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை முன்னணி நடிகையாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, அஜித் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்தவர்.

கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தில் நடித்து அடுத்த இன்னிங்ஸுக்கும் ரெடியாகிவிட்டார்.சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி அளித்த மீனா, அவருடன் நடித்த நடிகர்களைப் பற்றியும், அவருடைய திரையுலக வாழ்க்கையைப் பற்றியும் சுவாரசியமான சில தகவல்களைப் பகிர்ந்து கெண்டார். பல நடிகர்களுடன் மீனா ஜோடியாக நடித்திருந்தாலும் விஜய்யுடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவேயில்லை.