தமிழில் மைனா படத்துக்குப்பிறகு எப்படி அமலாபாலுக்கு ஒரு மரியாதை கிடைத்ததோ அதேபோன்ற மரியாதையை தற்போது மலையாளத்தில் அவர் நடித்து வரும் மிலி படம் அவருக்கு கொடுக்கும் என்கிறார்கள். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகியிருநத அமலாபால், அதில் தனக்கு முக்கியத்துவம்
கொடுப்பட்டிருந்ததால்தான் அதே ஆர்வத்தில் இப்போது வரை நடித்துக்கொண்டிருக்கிறாராம். மேலும், மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை இயக்கிய ராஜேஷ்பிள்ளை இயக்கி வரும் இந்த மிலி படத்தில் ஒரு துணிச்சலான பெண்ணாக நடிக்கிறாராம் அமலாபால், அதோடு அப்படத்தின் கதை நல்லதொரு கருத்து சொல்லும் விதமாக உள்ளதாம். அதனால் இதுவரை நான் நடித்த படங்களில் இது எனது மனதுக்கு நிறைவான படம் என்று கூறி வருகிறார் அமலாபால்.
அதோடு, நேரம் படத்தின் நாயகன் நிவின் பாலி, பூர்ணா ஆகியோரும இந்த படத்தில் இருந்தாலும் டைட்டீல் வேடத்தில நடிக்கும் அமலாபால் தான் படத்தின் விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறாராம். தற்போது அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து விட்டதால், வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் மிலி படம் திரைக்கு வருகிறதாம். அதனால் திருமணம் முடிந்து முதல் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் அமலாபால், திருமணத்திற்கு பிறகு தான் நடித்து வெளியாகும் முதல் படம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.