மைனா புகழ் அமலாபால், ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலிக்கத் தொடங்கினார். அதன்பிறகும், ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் விஜய்யுடன் டூயட் பாடும் வாய்ப்பினை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு டைரக்டர் விஜயை திருமணம் செய்து கொண்டார். அதனால் தமிழில் கமிட்டான சில படங்களில் இருந்து வெளியேறிய அமலாபால், தனது தாய்மொழியான மலையாளத்தில் மட்டும் நடிப்பதை நிறுத்தவில்லை.
இப்போதும் லைலா ஓ லைலா, மிலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனால் சென்னையில் இருப்பதை விட கேரளாவில்தான் அவர் அதிக நாட்கள் தங்கியிருநது நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போதும் லைலா ஓ லைலா, மிலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனால் சென்னையில் இருப்பதை விட கேரளாவில்தான் அவர் அதிக நாட்கள் தங்கியிருநது நடித்துக்கொண்டிருக்கிறார்.