பார்த்திபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்திபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆனது!- பார்த்திபன் உருக்கம்

நீண்ட நாளைக்குப்பிறகு தான் இயக்கிய படம் வெற்றி பெற்றிருப்பதால் அந்த வெற்றிக்களிப்பை ரசித்து ருசித்துக்கொண்டிருக்கிறார் பார்த்திபன். அதோடு, தான் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெற்றி பெற்றதற்கு தனது திரைக்கதையே காரணம் என்று அவர் நினைத்தாலும், அதற்கு நற்சான்றிதழ் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவைத்தது பத்திரிகைகள்தான் என்பதையும் அவர் மறக்கவில்லை.

அதனால் நேற்றைய தினம் அவர் பத்திரிகைகளை சந்தித்து அதற்கான நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

இந்த நடிகையை எங்கே பிடிச்சே? பார்த்திபனிடம் கேட்ட பாரதிராஜா!

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் தம்பி ராமய்யாவை தவிர அனைவருமே புதுமுகங்கள்தான் நடித்துள்ளனர். விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, பிரகாஷ்ராஜ், அமலாபால், டாப்சி, பரத், சாந்தனு, விமல் என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவருமே கெஸ்ட் ரோலில்தான் வந்து செல்கிறார்கள்.

மற்றபடி, முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில் பலரை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா பாதி, சுனைனா பாதி கலந்த கலவையாக இருக்கும் அகிலாவின் பர்பாமென்ஸைப் பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜாகூட, அற்புதமாக நடிச்சிருக்காளே. இந்த நடிகையை எங்கே பிடிச்சே என்று பார்த்திபனிடம் கேட்டாராம்.

சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட பார்த்திபன்!...

தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி ஒரே வாரத்தில் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து விட்டது. கூடவே சதுரங்க வேட்டையும் சேர்ந்து கொண்டது. அதனால், ஜூலை 25-ந்தேதி வெளியாக வேண்டிய ஜிகர்தண்டா ஆகஸ்ட்1-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 15-ந்தேதி சூர்யாவின் அஞ்சான் வெளியாகிறது. ஆக, அடுத்த மாதம் வெளியாக வேண்டிய சில படங்கள் தாமதமாகி வருகின்றன.

பார்த்திபனை நெகிழ வைத்த நடிகர்-நடிகைகள்!

வித்தகன் படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பதற்கு முழுக்குப்போட்டு விட்டார் பார்த்திபன். அதனால் மற்ற நடிகர்களின் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வரும் அவர், தற்போது ''கதை திரைக்கதை வசனம் இயக்கம்'' என்ற படத்தில் இயக்குனராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். அதோடு, தனது பெயரையும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் மாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இயக்கி வெற்றி பெறுவேன் என்று உரக்க பேசினார். ஆனால், கமர்சியல் விசயத்தில் சிக்கிக்கொள்வோம் என்று பின்னர் நினைத்தவர் திடீரென்று தம்பி ராமைய்யாவை ஒரு இயக்குனர் வேடத்துக்கு புக் பண்ணியவர், அடுத்தடுத்த பிரகாஷ்ராஜ், விஷால், விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறங்கி விட்டிருக்கிறார்.