தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க முன்னணி ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலை அள்ளியதாகச் சொல்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாக ஏழு தோல்விப் படங்களைக் கொடுத்த தனுஷிற்கு 'வேலையில்லா பட்டதாரி' படம் வெற்றி எண்ணிக்கையை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. இதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த 'ராஞ்சனா' இந்திப் படமும் வெற்றி பெற்றதால் இந்திய அளவிலும் புகழ் பெற ஆரம்பித்தார். தற்போது அமிதாப்புடன் 'ஷமிதாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தனுஷ் அடுத்து 'அனேகன்' படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடும் விரைவில் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கில் உள்ள பல முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் உரிமையை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பபட்ட இந்தப் படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால்தான் இந்த அளவிற்குப் போட்டிப் போடுகிறார்கள். தெலுங்கு ரீமேக் உரிமை சில கோடிகள் வரை போகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema,Velai illapattathari, Dhanush, Amala Paul, Velraj, Remake