நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒப்புக்கொண்ட படங்களில் இருந்தும் விலகினார். ஆனால் இரண்டு மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கணவர் விஜய் இயக்கிய விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கிறார் அமலா பால். விஜய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விளம்பர படங்கள் இயக்கியவர் என்பதும், அமலாபால் உள்ளூர் கேபிள் டி.விக்காக விளம்பர படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்துக்கது.
இதுகுறித்து அமலாபால் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பிறகு கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அடுத்து என் கணவர் விஜய் இயக்கத்தில் நடிப்பதாக வந்த செய்திகள் தவறானது. இப்போது அப்படி எந்த திட்டமும் இல்லை. அவர் இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. விளம்பர படமாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் விஜய் ஆர்ட்டிஸ்டுகளிடமிருந்து பெஸ்டை கொண்டு வருவார். அப்படித்தான் என்னை வேலை வாங்கினார் விளம்பரமும் சிறப்பாக வந்துள்ளது. என்றார் அமலாபால்.

Cinima, director vijay, amala paul