கிட்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிட்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரண்டு வேடத்தில் நடிக்கிறார் மகிமா!

''சாட்டை'' படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா, தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார். இந்நிலையில், தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட “கிட்ணா“ என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.

சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார் அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம் என்றார் மகிமா.

கிட்ணாவுக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாகி விடுவாராம் தன்ஷிகா!

நிமிர்ந்து நில் படத்தை இயக்கியபோது அமலாபாலின் ஒத்துழைப்பைப் பார்த்த டைரக்டர் சமுத்திரகனி, எனது அடுத்த படத்திலும் அமலாபால்தான் நாயகியாக நடிப்பார் என்று கூறினார். அதோடு அந்த படத்தில் அமலாபாலை 2 விதமாக கேரக்டர்களில் நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார். அதனால், முதன்முறையாக டபுள் ரோலில் நடிக்கப்போகிறேன் என்று அமலாபாலும் சொல்லி புழகாங்கிதமடைந்து வந்தார்.

ஆனால், யார் கண் பட்டதோ அந்த படத்தில் அமலாபால் நடிக்க ஒத்துக்கொண்ட நிலையில், அவர் காதலித்து வந்த டைரக்டர் ஏ.எல்.விஜய்க்கு அவரது பெற்றோர் உடனடியாக திருமணம் செய்து வைக்க முற்பட்டதால், வேறு வழியில்லாமல் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு திருமண பந்தத்தில் இணைந்தார் அமலாபால்.