லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

50 நாளை கடந்து விட்ட ஐ

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். நீண்ட நாள் தயாரிப்பு, நீண்ட போராட்டம், பல்வேறு பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி கடந்த பொங்கல் அன்று (ஜன 14) ஐ வெளிவந்தது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் உழைப்பு, எமி ஜாக்சனின் அழகு, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தைரியம் அனைத்தையும் ஐ உறுதி செய்தது.

 மக்கள் இவர்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள். படத்தின் விமர்சனங்கள் பல்வேறு கோணங்களில் வந்திருந்தாலும். மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு லாபத்தைக் கொடுத்தது.

"ஐ" பட டிரைலர் வெளியாகி அரைமணி நேரத்தில் உலகளவில் 7வது இடத்தை பிடித்தது

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சசன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

ஐ படத்தில் விக்ரம், பாடி பில்டர், மாடலிங், கூன் விழுந்த கோரமுகம், மிருக மனிதன்... என பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். இதை ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மூலமாக நாம் அறிந்தோம். அதுமட்டுமின்றி இப்படத்தின் டீசரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது.

'ஐ' பட டிரைலர்

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் 'ஐ' - ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!

ஐ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... உள்ளிட்ட பலர். இப்படி மொத்த பிரமாண்டங்கள் இணைந்து ஒரு படத்தை செதுக்கி செதுக்கி எடுகின்றனர் என்றால் சும்மாவா...! ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் வரை கொண்டு வந்த பெருமை தமிழ் சினிமாவுக்கே சேரும். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் 'ஐ' படம் வெளி வர முடியாமல் தாக்கு பிடிக்கிறீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்டால்...

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்... ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ''மெர்சலாயிட்டேன்...'' என்ற பாடலை போட்டு காட்டினார். உண்மையாகவே அந்தப்பாட்டை பார்த்துவிட்டு மெர்சலாகிவிட்டோம். அந்தளவுக்கு அந்த ஒருபாட்டு மட்டும் இருக்கிறது. விக்ரம்-எமி ஆடிப்பாடும் காட்சிகளில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தி எடுத்துள்ளனர்.

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் முருகதாஸ்-ஹரி!

இந்த தீபாவளியில் ஷங்கரின் ஐ படமும் திரைக்கு வருவதாக இருந்தால் ஒரு மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கும். ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி ஆகியோர் களத்தில் நின்றிருப்பார்கள. அதேபோல், விஜய், விக்ரம், விஷால் ஆகியோரும் வரிந்து கட்டியிருப்பார்கள்.

ஆக ஒரு பெரிய போட்டி யுத்தமே நடந்திருக்கும். ஆனால், இப்போது ஐ படம் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால், விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.

ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனராக்கிய ரசிகர்கள்!

ஜென்டில்மேன் தொடங்கி இப்போது இயக்கியுள்ள ஐ படம் வரை ஷங்கரின் ஒவ்வொரு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில்தான் உருவாகியிருக்கிறது. அதில் ஐ படம் 150 கோடி பட்ஜெட. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

அதோடு, படத்தின் ஆடியோ விழாவுக்கு அர்னால்டை வரவைத்து இன்னும் பிரம்மாண்டம் சேர்த்து விட்டார்கள். மேலும், தான் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டிலேயே படம் எடுத்து வருவது பற்றி ஷங்கர் கூறுகையில், எனக்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் இன்றைக்கு பல மொழிப்படங்களையும் டி.வியிலேயே மக்கள் பார்த்து விடுகிறார்கள். அதனால் தியேட்டருக்கு வரும்போது ஏற்கனவே பார்த்த படங்களை விட பிரம்மாண்டமாக எதிர்பார்க்கிறார்கள்.

ஷங்கர் என்னை கண்டிக்கவில்லை! -எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் ஐ படப்பிடிப்பில் இருந்தபோது தனது காதலரை சந்திக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி லண்டனுக்கு ஓட்டம் பிடித்ததாக அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது செய்திகள் வெளியானது. அதோடு, அடிக்கடி இரவு பார்ட்டிகளுக்கு சென்று வந்த எமி, மறுநாள் படப்பிடிப்பு தளங்களுக்கு காலதாமதமாக வந்ததாக இன்னொரு பரபரப்பு செய்தியும் வெளியானது.

இதனால் டைரக்டர் ஷங்கர் கூட எமியிடம் கோபித்துக் கொண்டதோடு, நிறைய கண்டிசன்களை போட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது அதுபற்றி எமி ஜாக்சனிடம் கேட்டால், என்னிடம் யாரும் எந்த கண்டிசனும் போடவில்லை என்கிறார். என்னைப் பொறுத்தவரை படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 5 நிமிடம் 10 நிமிடம் வேண்டுமானால் முன்ன பின்ன இருக்கலாம். மற்றபடி சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவேன்.

ஐ படத்திலும் ஷங்கரின் ஒரு நாள் பார்முலா!

முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக்கியவர் ஷங்கர். அதையடுத்து, இப்போது தான் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரே நாளில் விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கிறாராம்.
அதாவது, ஒரேநாளில் தன்னை பேரழகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதையின் வில்லன் ஒரு மருந்தை கண்டு பிடித்து, அதை தனது உடம்பிலேயே செலுத்தி பரிசோதனை செய்து பார்ப்பாராம்.

ஆனால், அந்த மருந்து அவரை ஒரு கொடூரமான தோற்றத்துக்கு மாற்றி விடுமாம். இதனால் அந்த மருந்தில் இருந்த குறைபாடுகளை கண்டுபிடித்து அவற்றை நீக்கி அதை விக்ரம் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்வாராம்.

கோச்சடையான்' சாதனையை ஐந்தே நாளில் முறியடித்த 'ஐ'....

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் ஒரு படம் பற்றிய வீடியோ டீஸர், யு டியூப் மூலமாக மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பது கடந்த சில வருடங்களாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. 'கொலை வெறி' பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றப் பிறகுதான் யூ டியூப் மூலமாகவும் இணைய தளங்களின் மூலமாகவும் ஒரு படத்தை எளிதில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது நிரூபணமானது. தற்போது ஒரு படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் திரையுலகினர் அவர்களது படத்தை விளம்பரப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த அளவிற்கு இணையதளங்கள் மக்களிடையே முக்கிய ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது. இதை மீண்டும் 'ஐ' படத்தின் டீஸர் நிரூபித்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் யு டியூப் இணையதளத்தில் 'ஐ' டீஸர் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 49 லட்சம் பேர் அந்த டீஸரைப் பார்த்து ரசித்துள்ளனர்.

ஐ படத்திற்கு சூர்யா முக்கியத்துவம்

ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டை முதன் முறையாக சூர்யா சந்தித்து விளம்பரம் தேடிக் கொண்டதாக சூர்யா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஐ படத்தை தனது வாட்ஸ் ஆஃப் பக்கத்தின் புரபைல் பிக்சராக வைத்து படத்துக்கு வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார்.

"சினிமாவில் உண்மையான நண்பர்கள் அமைவது சிரமம். நண்பர்களாக இருப்பவர்கள் நண்பர்களாக நடித்துக் கொண்டிருப்பதாகத்தான் பொருள். ஆனால் சூர்யா எல்லோருக்கும் உண்மையான நண்பனாக இருக்கிறார். அதனால்தான் தான் நடிக்காத படத்தை தன் புரபைல் படமாக போட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் இந்த மனது வேறு எந்த நடிகருக்காவது வருமா? என்பது சந்தேகமே" என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ பட ஆடியோ விழாவுக்கு விஜய் வருவாரா?

கமல் நடித்த தசாவதாரம் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது ஜாக்கிசான் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதோடு, கமல், மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவை வெற்றிகரமாக நடத்திய அதே ஆஸ்கர் பிலிம்ஸ் இப்போது ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக அர்னால்டை அழைத்து வருகிறது.
வருகிற 15-ந்தேதி விழா நடப்பதாக கூறி விட்டபோதிலும், இன்னும் அழைப்பிதழ்களோ, விழா எங்கு நடக்கிறது என்பது போன்ற செய்திகளோ அந்த நிறுவனத்திடமிருந்து அறிவிக்கப்படவில்லை. எல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

விக்ரமுக்காக பின்னணி பாடிய ஏ.ஆர்.ரகுமான்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே அப்படத்துககு இசை ஏ.ஆர.ரகுமான்தான் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு அர்ஜூனைக்கொண்டு இயக்கிய தனது முதல் படமான ஜென்டில்மேன் படத்திலிருந்தே ரகுமானுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுத்துள்ளார் ஷங்கர். விஜய் நடித்த நண்பன் படத்திற்கு மட்டுமே அவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்றார். அதற்கு காரணம், ரகுமான் ஹாலிவுட் பட வேலைகளில் பிசியாக இருந்ததுதான்.

இந்த நிலையில், தற்போது விக்ரமைக்கொண்டு ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்திற்கும் எப்போதும் போலவே அதிகமாக மெனக்கெட்டு பாடல்களை கொடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், சீனாவில் அதிக நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சீனாவில்தான் படமாக்கப்பட்டுள்ளதாம்.

ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த விக்ரம்!

ஆஸ்கர் பிலிம்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக பட்ஜெட்டில் அதாவது 150 கோடியில் தயாராகியுள்ள படம் ஐ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படம் 2012ல் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் இறுதிகட்ட பணிகள் முடியவில்லை என்கிறார்கள்.

அதோடு, இந்த படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துள்ள ஷங்கர், இன்னும் சில மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறாராம். அதில் சீன மொழியும் ஒன்றாம். அந்த வகையில், ஜப்பான் மொழியில் ரஜினி நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வரும் நிலையில், சீன மொழியில் டப் செய்யப்படும் முதல் படமாக ஐ இடம்பெறுகிறது.