ஐ பட ஆடியோ விழாவுக்கு விஜய் வருவாரா?

கமல் நடித்த தசாவதாரம் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது ஜாக்கிசான் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதோடு, கமல், மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவை வெற்றிகரமாக நடத்திய அதே ஆஸ்கர் பிலிம்ஸ் இப்போது ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக அர்னால்டை அழைத்து வருகிறது.
வருகிற 15-ந்தேதி விழா நடப்பதாக கூறி விட்டபோதிலும், இன்னும் அழைப்பிதழ்களோ, விழா எங்கு நடக்கிறது என்பது போன்ற செய்திகளோ அந்த நிறுவனத்திடமிருந்து அறிவிக்கப்படவில்லை. எல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அர்னால்டு கலந்து கொள்ளும் அந்த விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளது. டைரக்டர் ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்தவர் என்பதோடு அவரது அன்புக்குரியவர்கள் பட்டியலில் விஜய்க்கும் தனி இடம் இருந்து வருகிறது. அதன் காரணமாகத்தான், சமீபத்தில் தான் கொண்டாடிய பிறந்த நாள் பார்ட்டிக்குகூட விக்ரமுடன், விஜய்யையும் அழைத்திருந்தார் ஷங்கர்.
ஆனால், இந்த முறை ஐ ஆடியோ விழாவில் விஜய் கலந்து கொள்ள இன்னமும் முறையான அழைப்புகள் வழங்கப்படவில்லையாம். அதனால், விஜய் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.