விக்ரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்ரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

50 நாளை கடந்து விட்ட ஐ

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். நீண்ட நாள் தயாரிப்பு, நீண்ட போராட்டம், பல்வேறு பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி கடந்த பொங்கல் அன்று (ஜன 14) ஐ வெளிவந்தது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் உழைப்பு, எமி ஜாக்சனின் அழகு, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தைரியம் அனைத்தையும் ஐ உறுதி செய்தது.

 மக்கள் இவர்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள். படத்தின் விமர்சனங்கள் பல்வேறு கோணங்களில் வந்திருந்தாலும். மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு லாபத்தைக் கொடுத்தது.

"ஐ" பட டிரைலர் வெளியாகி அரைமணி நேரத்தில் உலகளவில் 7வது இடத்தை பிடித்தது

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சசன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

ஐ படத்தில் விக்ரம், பாடி பில்டர், மாடலிங், கூன் விழுந்த கோரமுகம், மிருக மனிதன்... என பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். இதை ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மூலமாக நாம் அறிந்தோம். அதுமட்டுமின்றி இப்படத்தின் டீசரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது.

இன்று இரவு 10 மணிக்கு... ஐ டிரைலர் வௌியீடு

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. ஐ படத்தில் விக்ரம், பாடி பில்டர், மாடலிங், கூன் விழுந்த கோரமுகம், மிருக மனிதன்... என பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். இதை ஏற்கனவே வௌியான இப்படத்தின் டீசர் மூலமாக நாம் அறிந்தோம். அதுமட்டுமின்றி இப்படத்தின் டீசரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது.

விஜய் படம் பார்த்தாலே ஜாலியா இருக்கும்!- விக்ரம்

இளைய தளபதி விஜய் படங்கள் பற்றி விக்ரம் கூறுகையில் விஜய் படம் என்றாலே காதல், ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி, நடனம் என அனைத்து ஜனரஞ்சகமான விசயங்களும இருக்கும். அதனால்தான் அவர் படங்கள் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கிறது.

அவரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக அந்த மாதிரியான கதைகளாகவே பெரும்பாலும் செலக்ட் பண்ணி நடிக்கிறார். அந்த வகையில், ரசிகர்களுக்குத்தான் விஜய் படம் பிடிக்கிறது என்றால் சீயான் விக்ரமுக்கும் விஜய் நடிக்கும் படங்கள் ரொம்ப பிடிக்குமாம்.

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் 'ஐ' - ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!

ஐ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... உள்ளிட்ட பலர். இப்படி மொத்த பிரமாண்டங்கள் இணைந்து ஒரு படத்தை செதுக்கி செதுக்கி எடுகின்றனர் என்றால் சும்மாவா...! ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் வரை கொண்டு வந்த பெருமை தமிழ் சினிமாவுக்கே சேரும். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் 'ஐ' படம் வெளி வர முடியாமல் தாக்கு பிடிக்கிறீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்டால்...

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்... ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ''மெர்சலாயிட்டேன்...'' என்ற பாடலை போட்டு காட்டினார். உண்மையாகவே அந்தப்பாட்டை பார்த்துவிட்டு மெர்சலாகிவிட்டோம். அந்தளவுக்கு அந்த ஒருபாட்டு மட்டும் இருக்கிறது. விக்ரம்-எமி ஆடிப்பாடும் காட்சிகளில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தி எடுத்துள்ளனர்.

ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனராக்கிய ரசிகர்கள்!

ஜென்டில்மேன் தொடங்கி இப்போது இயக்கியுள்ள ஐ படம் வரை ஷங்கரின் ஒவ்வொரு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில்தான் உருவாகியிருக்கிறது. அதில் ஐ படம் 150 கோடி பட்ஜெட. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

அதோடு, படத்தின் ஆடியோ விழாவுக்கு அர்னால்டை வரவைத்து இன்னும் பிரம்மாண்டம் சேர்த்து விட்டார்கள். மேலும், தான் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டிலேயே படம் எடுத்து வருவது பற்றி ஷங்கர் கூறுகையில், எனக்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் இன்றைக்கு பல மொழிப்படங்களையும் டி.வியிலேயே மக்கள் பார்த்து விடுகிறார்கள். அதனால் தியேட்டருக்கு வரும்போது ஏற்கனவே பார்த்த படங்களை விட பிரம்மாண்டமாக எதிர்பார்க்கிறார்கள்.

எமிஜாக்சனை புகழ்ந்த த்ரிஷா!

விக்ரமுடன் சாமி, பீமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. ஆனால், தொடர்ந்து அவருடன் நடிக்க அவர் முயற்சி எடுத்தபோது அது ஒர்க்அவுட் ஆகவில்லை. காரணம், கிரீடம் படத்தில் நடித்த நட்பை வைத்து தெய்வத்திருமகள் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியபோது மீண்டும் விக்ரமுடன் நடிக்க கல்லெறிந்தார் த்ரிஷா.

ஆனால், அனுஷ்கா ஏற்கனவே கமிட்டாகி விட்டதாக சொன்ன அவர், இன்னொரு நாயகிக்கு எனது மதராசப்பட்டினம் படத்தில் நடித்த எமிஜாக்சனையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று த்ரிஷாவுக்கு நோ சொல்லி விட்டார். அதனால் அந்த இரண்டாவது நாயகி வாய்ப்பைகூட ஹாலிவுட்டில் இருந்து வந்த நடிகை தட்டிப்பறித்து விட்டாரே என்று புலம்பினார் த்ரிஷா.

கோச்சடையான்' சாதனையை ஐந்தே நாளில் முறியடித்த 'ஐ'....

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் ஒரு படம் பற்றிய வீடியோ டீஸர், யு டியூப் மூலமாக மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பது கடந்த சில வருடங்களாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. 'கொலை வெறி' பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றப் பிறகுதான் யூ டியூப் மூலமாகவும் இணைய தளங்களின் மூலமாகவும் ஒரு படத்தை எளிதில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது நிரூபணமானது. தற்போது ஒரு படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் திரையுலகினர் அவர்களது படத்தை விளம்பரப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த அளவிற்கு இணையதளங்கள் மக்களிடையே முக்கிய ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது. இதை மீண்டும் 'ஐ' படத்தின் டீஸர் நிரூபித்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் யு டியூப் இணையதளத்தில் 'ஐ' டீஸர் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 49 லட்சம் பேர் அந்த டீஸரைப் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்திய படங்களில் நடிக்க ஆசை...! ஐ பட ஆடியோ விழாவில் அர்னால்டு பேச்சு

இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரட்டும் போய் உள்ளனர்.

ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய சினிமாவை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும்; ரஜினி பேச்சு

சென்னை: ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும் என ஐ பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசினார்.

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐ படம் பற்றி சில தகவல்...

ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என்று வலுவான கூட்டணியில் உருவான படம், ஐ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டிற்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவழைத்து இருப்பது, பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. இவருக்கும், இந்தப் படத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதாம்.

ஐ படத்தில் பயன்படுத்தப்பட்ட, எடுக்கப்பட்ட அனைத்து, 'லொகேஷன்'களும் புதுசு. சீனாவை சுற்றி, 50 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 'என்னோடு நீ இருந்தால், உயிரோடு நான் இருப்பேன்' என்ற டூயட் பாடல், அட்டகாசமாய் அமைந்துள்ளதாம்.

ஐ பட ஆடியோ விழாவுக்கு விஜய் வருவாரா?

கமல் நடித்த தசாவதாரம் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது ஜாக்கிசான் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதோடு, கமல், மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவை வெற்றிகரமாக நடத்திய அதே ஆஸ்கர் பிலிம்ஸ் இப்போது ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக அர்னால்டை அழைத்து வருகிறது.
வருகிற 15-ந்தேதி விழா நடப்பதாக கூறி விட்டபோதிலும், இன்னும் அழைப்பிதழ்களோ, விழா எங்கு நடக்கிறது என்பது போன்ற செய்திகளோ அந்த நிறுவனத்திடமிருந்து அறிவிக்கப்படவில்லை. எல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் படம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது - கத்தி படம். அதனால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி ஒருபுறம் கத்தி படத்தை பதம் பார்த்துக்கொண்டிருக்க...அதைப் பற்றி கவலையேப்படாமல் எப்படியும் கத்தி படத்தை தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வந்தே தீருவது என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிஸியாக இயங்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப் பாடிய பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. இன்னொரு பக்கம், கத்தி படத்திற்கான எடிட்டிங், டப்பிங் வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

12 மணி நேரம் மேக்கப் போட்ட விக்ரம்...!

ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஐ' படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம்.

 படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் 'ஐ' படத்திற்காக மட்டுமே உழைத்து வருகிறார். எதைப் பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாமல் முழு அர்ப்பணிப்புடன் படத்தில் அவர் நடித்துக் கொடுத்துள்ளதாக பாராட்டுகிறார்கள். இதுதான் அவருடைய தனித்துவம் என்கிறார்கள்.

விக்ரமுக்காக பின்னணி பாடிய ஏ.ஆர்.ரகுமான்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே அப்படத்துககு இசை ஏ.ஆர.ரகுமான்தான் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு அர்ஜூனைக்கொண்டு இயக்கிய தனது முதல் படமான ஜென்டில்மேன் படத்திலிருந்தே ரகுமானுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுத்துள்ளார் ஷங்கர். விஜய் நடித்த நண்பன் படத்திற்கு மட்டுமே அவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்றார். அதற்கு காரணம், ரகுமான் ஹாலிவுட் பட வேலைகளில் பிசியாக இருந்ததுதான்.

இந்த நிலையில், தற்போது விக்ரமைக்கொண்டு ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்திற்கும் எப்போதும் போலவே அதிகமாக மெனக்கெட்டு பாடல்களை கொடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், சீனாவில் அதிக நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சீனாவில்தான் படமாக்கப்பட்டுள்ளதாம்.

ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த விக்ரம்!

ஆஸ்கர் பிலிம்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக பட்ஜெட்டில் அதாவது 150 கோடியில் தயாராகியுள்ள படம் ஐ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படம் 2012ல் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் இறுதிகட்ட பணிகள் முடியவில்லை என்கிறார்கள்.

அதோடு, இந்த படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துள்ள ஷங்கர், இன்னும் சில மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறாராம். அதில் சீன மொழியும் ஒன்றாம். அந்த வகையில், ஜப்பான் மொழியில் ரஜினி நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வரும் நிலையில், சீன மொழியில் டப் செய்யப்படும் முதல் படமாக ஐ இடம்பெறுகிறது.

கெளதம்மேனனுக்கு கை கொடுக்கவிருக்கும் விக்ரம்!......

கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கயிருந்த விஜய் அவர் தன்னிடம் கதையே சொல்லவில்லை என்று அவர் படத்தில் நடிக்க மறுத்தார். ஆனால், அதையடுத்து சூர்யாவோ, அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு லிங்குசாமிக்கு கால்சீட் கொடுத்து தற்போது அஞ்சான் படத்தில் நடித்துள்ளார்.

 இந்த நிலையில், விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்தார்.

தீபாவளிக்கு 'ஐ' படம் ரிலீஸ்...!

விக்ரமின் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் 'ஐ'. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும் ஒல்லியாக மாற்றியும், பின்னர் திடகாத்திரமாகவும் மாற்றி நடித்திருக்கிறார். 'மதராசப் பட்டிணம்' படத்தின் ஆங்கிலேய நாயகி எமி ஜாக்சன் விக்ரம் ஜோடியாக நடித்திருக்கிறார்.