எமி ஜாக்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எமி ஜாக்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் 'ஐ' - ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!

ஐ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... உள்ளிட்ட பலர். இப்படி மொத்த பிரமாண்டங்கள் இணைந்து ஒரு படத்தை செதுக்கி செதுக்கி எடுகின்றனர் என்றால் சும்மாவா...! ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் வரை கொண்டு வந்த பெருமை தமிழ் சினிமாவுக்கே சேரும். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் 'ஐ' படம் வெளி வர முடியாமல் தாக்கு பிடிக்கிறீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்டால்...

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்... ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ''மெர்சலாயிட்டேன்...'' என்ற பாடலை போட்டு காட்டினார். உண்மையாகவே அந்தப்பாட்டை பார்த்துவிட்டு மெர்சலாகிவிட்டோம். அந்தளவுக்கு அந்த ஒருபாட்டு மட்டும் இருக்கிறது. விக்ரம்-எமி ஆடிப்பாடும் காட்சிகளில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தி எடுத்துள்ளனர்.

ஆண் நண்பர்களுடன் சேர்ந்தால்ஒரே கும்மாளம் தான்: எமி ஜாக்சன்

இங்கிலாந்து இறக்குமதி நடிகை எமி ஜாக்சன், 'ஏக் திவானா தா' என்ற இந்தி படத்தில், பிரதீக்குடன் நடித்த போது, காதல் கிசுகிசுவில் சிக்கினார்.இதுகுறித்து எமி ஜாக்சன் கூறுகையில்,'பிரதீக்குடன் எனக்கு ஏற்பட்டது காதல் அல்ல; நட்பு மட்டுமே. அவரைப் போன்று தான் ஆர்யாவும் என் நண்பர் பட்டியலில் உள்ளார்.

இந்த நட்பை காதல் என்று யாராவது கூறினால், அதைவிட சிறந்த காமெடி வேறு எதுவும் இருக்க முடியாது' என்றார்.மேலும், 'லண்டனில் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். நாங்க எல்லாம் ஒன்று கூடி விட்டால் ஒரே கூத்து, கும்மாளம் தான். அந்த சந்தோஷமே தனி. இந்திய படங்களில் நடிக்க வந்த பின் என் லண்டன் நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்றேன்' என்கிறார் எமி ஜாக்சன்.

ஷங்கர் என்னை கண்டிக்கவில்லை! -எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் ஐ படப்பிடிப்பில் இருந்தபோது தனது காதலரை சந்திக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி லண்டனுக்கு ஓட்டம் பிடித்ததாக அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது செய்திகள் வெளியானது. அதோடு, அடிக்கடி இரவு பார்ட்டிகளுக்கு சென்று வந்த எமி, மறுநாள் படப்பிடிப்பு தளங்களுக்கு காலதாமதமாக வந்ததாக இன்னொரு பரபரப்பு செய்தியும் வெளியானது.

இதனால் டைரக்டர் ஷங்கர் கூட எமியிடம் கோபித்துக் கொண்டதோடு, நிறைய கண்டிசன்களை போட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது அதுபற்றி எமி ஜாக்சனிடம் கேட்டால், என்னிடம் யாரும் எந்த கண்டிசனும் போடவில்லை என்கிறார். என்னைப் பொறுத்தவரை படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 5 நிமிடம் 10 நிமிடம் வேண்டுமானால் முன்ன பின்ன இருக்கலாம். மற்றபடி சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவேன்.