ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லிங்கா விநியோகஸ்தர்கள் இன்று உண்ணாவிரதம்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா படங்களை அடுத்து ரஜினிகாந்த் நடித்த படம் லிங்கா. ரஜினி நடிப்பில் சில ஆண்டு இடைவேளைக்குப்பிறகு இப்படம் வெளியானதால் எதிர்பார்ப்புகள் பலமாக இருந்தது. அதோடு கோச்சடையானில் அனிமேஷன் ரஜினியை பார்த்த ரசிகர்கள், நேரடி ரஜினியைபார்க்கும் ஆவலில் வரவேற்றனர்.

ஆனால், ஆரம்பத்தில் தியேட்டர்களுக்கு ரசிகர் கூட்டம் படையெடுத்த நிலையில், சீக்கிரமே வெறிச்சோடின. இதனால் அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தங்களுக்கு போட்ட பணம் கைக்கு வரவில்லை. அதிக நஷ்டமாகிவிட்டது என்று பல ஏரியாக்களில் இருந்தும் ரஜினிதரப்பை தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகப்போகிறார், ஆமாம் அவரது இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டராக திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, இளையவர் சௌந்தர்யா. இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். செளந்தர்யா, அஸ்வின் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் தற்போது தமிழ் சினிமாவின் இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மருத்துவ மனையில் கே.பாலச்சந்திரனை சந்தித்த ரஜினி..

3 நாட்களில் 100 கோடி வசூல்! லிங்கா பட சாதனை உண்மையா?

லிங்கா படத்தின் முதல் 3 நாள் வசூல் 100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல். உண்மையா இது? லிங்கா படத்தின் வியாபாரத்தில் பங்களிப்பு செய்த சிலரிடம் தகவல் திரட்டினோம். லிங்கா படம் வெளியான 12.12.2014 வெள்ளிக்கிழமை அன்று, சுமார் 720 தியேட்டர்களில் வசூலான தொகை மட்டுமே 53 கோடி! இரண்டாவது நாள் 27 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 24 கோடியும்..ஆக மூன்று நாட்களில் 104 கோடி வசூல் செய்திருப்பதை உறுதி செய்தனர்.

இதற்கு முன் 100 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்ட எந்திரன், கத்தி போன்ற படங்கள் அந்த தொகையை வசூலிக்க பல நாட்கள் ஆனநிலையில், லிங்கா 3 நாட்களில் 100 கோடியை எட்டியது எப்படி?

தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட லிங்கா, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து ஏரியா தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி முதலே திரையிடப்பட்டிருக்கிறது. அதோடு, 200, 300 என்று பல தியேட்டர்களில் அதிக கட்டணத்தை வசூல் செய்திருக்கின்றனர்.

'லிங்கா' படத்தில் 'காப்பி' அடிக்கப்பட்ட காட்சிகள்!

ஒரு படம் வெளிவருவதற்கு முன் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என ஒரு சிலர் பிரச்சனை எழுப்புவுதும், வழக்கு தொடுப்பதும் சமீப காலத்தில் அதிகமாகிவிட்டது. அப்படிப்பட்ட விவகாரங்களை சம்பந்தப்பட்ட படக் குழுவினர் படம் வெளிவருவதற்குள் சமாளிப்பது பெரிய விஷயம்.

படம் வெளியான பின் அவர்கள் வேறு சில விவகாரங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அது, காப்பி அடித்து எடுக்கப்படும் காட்சிகள். ஹாலிவுட் படங்களிலிருந்தோ, கொரியன், ஈரானிய படங்களில் இருந்தோ அப்படியே காட்சிகளை உருவி தங்களது படங்களில் பயன்படுத்திக் கொள்வது காலம் காலமாகவே நடந்து வருகிறது.

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது: சோனாக்சி சின்ஹா

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறிப் போனது என்றார் சோனாக்சி சின்ஹா. இவர் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:–

இந்தியில் சல்மான்கான், அஜய்தேவ்கான், சாகித்கபூர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு ரோல் மாடலாக இருப்பது ரஜினிதான். அவருடன் ‘லிங்கா’ படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது.

லிங்கா பட ரிலீசிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சொனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தின் படபிடிப்புக்கள் முடிவடைந்து, தற்போது ரிலீசிட்கான விலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் ஆடியோவை நவம்பர் 16ம் தேதி வெளியிட உள்ளதாகவும், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 21ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ஈரோஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளதாகும் கூறப்பட்டுள்ளது.

லிங்கா படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை இராஸ் நிறுவனம் வாங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரட்டை வேட நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள பன்மொழித் திரைப்படமான ‘லிங்கா’ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சர்வதேச வெளியீட்டு (ரிலீஸ்) உரிமையை மும்பையைச் சேர்ந்த இராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிட்டெட் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

இதற்கு முன்னர் வெளியான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தையும் இராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிட்டெட்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.

ரஜினியின் லிங்கா டீசர் இன்று வெளியாகிறது

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசர் அக்டோபர் 31ம் தேதி வெளியாவதாக கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இதனை நம்பி ரஜினி ரசிகர்கள் பலரும் லிங்கா டீசர் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி டீசர் வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், லிங்கா படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் படக்குழுவினர், இன்று (நவம்பர் 1) மாலை படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் தலைவர் வருகிறார் என்ற எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தனுசுடன் இணைகிறார் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜீத் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்ட த்ரிஷா ரஜினியுடனும், அவரது மருமகன் தனுசுடனுதான் இதுவரை ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இதில் ரஜினியுடன் நடிப்பதற்கு லிங்கா படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அழைப்பார் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் த்ரிஷா. ஆனால், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவையும், தெலுங்கில் படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்காவையும் அப்படத்துக்கு புக் பண்ணி த்ரிஷாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டனர்.

மேலும், தனுசுடனும் நடிப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த த்ரிஷாவை, ஆடுகளம் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார் வெற்றிமாறன். ஆனால், அப்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் த்ரிஷாவால் அவர்கள் கேட்ட தேதிக்கு கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால்தான் அந்த வாய்ப்பு டாப்சிக்கு சென்றது. வெள்ளாவி நடிகை என்ற அடைமொழியையும் அப்படம அவருக்கு கொடுத்தது.

12 வயதுக்கு உட்பட்டவர்கள் கத்தி படத்தை பார்க்க முடியாது!

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரும் படம் கத்தி. இந்த படம் உலகமெங்கிலும் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. அதிலும், பிரிட்டனில் 70 தியேட்டர்களில் திரையிடப்படுகிறதாம். இதற்கு முன்பு ரஜினி நடித்த எந்திரன் கூட பிரிட்டனில் 30 தியேட்டர்களில்தான் வெளியாகியிருக்கிறது.

ஆக, ரஜினி பட சாதனையை தற்போது விஜய் படம் முறியடித்திருக்கிறது. மேலும், அங்கு வெளியாகும் கார்ட்டூன் படங்களுக்கு 12 என்ற சர்டிபிகேட் கொடுப்பார்களாம். அந்த மாதிரி படங்களைத்தான் சிறுவர்கள் தனியாக சென்று பார்க்க முடியுமாம். ஆனால், கத்தி படத்திற்கோ 12ஏ என்ற சர்டிபிகேட்டை பிரிட்டன் சென்சார்போர்டு வழங்கியிருக்கிறது. அதனால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் படத்தை பார்க்க வேண்டுமென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன்தான் பார்க்க முடியுமாம்.

ரஜினி குடும்பத்தில் ஒருவரானேன் தீபிகா படுகோனே பெருமிதம்.

ரஜினியுடன், 'கோச்சடையான்' படத்தில் நடித்த போது, ரஜினி, தன்னை மகளை போலவே கவனித்து வருவதாக கூறினார், தீபிகா படுகோனே. அதையடுத்து, ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரிடமும், நெருக்கமாகி விட்டதாக சொல்லும் அவர், 'ரஜினி - லதா தம்பதி, தன்னையும் தங்களின் மற்றொரு மகளாக நினைப்பதாக கூறுகிறார்.

மேலும், 'இப்போதெல்லாம் நான் சென்னை வந்தால், ரஜினியின் வீட்டிற்கு செல்லாமல் மும்பை திரும்புவதில்லை. அதேபோல், ரஜினி குடும்பத்தினர்மும்பை வந்தால், முதலில் என் வீட்டிற்கு தான் வருவர். அந்த அளவுக்கு, 'கோச்சடையான்' படம், எங்கள் இரண்டு குடும்பங்களை இணைத்து, உறவினர்களாக மாற்றி விட்டது' என்கிறார், தீபிகா படுகோனே.

திருநெல்வேலி தமிழச்சியாக மாறிய கெளதமி!

தமிழில் குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானவர் கெளதமி. அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படம் ஹிட்டாக அமைந்ததோடு சூப்பர் ஸ்டாருடன் டூயட் பாடியதால் அதன்பிறகு முன்னணி நடிகையாகி விட்டார் கெளதமி.

பின் கமலுடன், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அப்போது கமலுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தற்போது அவர் நடித்து வரும் த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் மீனா நடித்த ரோலில் நடிக்கும் கெளதமி, அந்த படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியானபோதும் எந்த மொழியிலும் அப்படத்தை அவர் பார்க்கவில்லையாம்.

காதலர்களுக்கு சிம்பு கொடுக்கும் டிப்ஸ்!

சினிமாவில் ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் பஞ்ச்தான் அவ்வப்போது கொடுத்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக அதெல்லாம் மறைந்துவிட்டது. மாறாக, ஆளாலுக்கு ஏதாவது ஒரு வகையில் பஞ்ச் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். ஏன் சந்தானம்கூட சில சமயங்களில் பஞ்ச் கொடுக்கிறார். ஆனால், சிம்புவோ காதலர்களுக்கு நிறைய பஞ்ச் கொடுக்கிறாராம்.

நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்து பிரிந்தவர் என்பதால், அவருக்கு காதலில் நல்ல அனுபவம் கிடைத்து விட்டது. அதனால், இந்த காலத்து காதலிகளை எப்படி கரெக்ட் பண்ணுவது, எப்படி மெயின்டெயின் பண்ணுவது என்றெல்லாம் ரசிகர்களுக்கு எடுத்துக்கொடுக்கிறாராம்.

மனசுக்கு பிடித்தவர்களுக்கு ரஜினி வழங்கும் ஆன்மீக பரிசு!

நீண்டகாலமாக ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார் ரஜினி. அவர் தீவிர ஆன்மீக சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகுதான், தான் நடிக்கும் படங்களில் அரசியல் டயலாக்குகளை குறைத்தார். அதோடு, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும் நிறுத்தினார். அது மட்டுமின்றி, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனா சரியான நேரத்துல வருவேன் என்று எதிர்கால அரசியல் என்ட்ரி குறித்தும் பேசி வந்தவர், பின்னர் அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சமீபகாலமாக, எந்த மேடைகளுக்கு சென்றாலும் அரசியல் பேசுவதில்லை. அரசியல்வாதிகளே தன்னை சந்தித்தாலும் அவர்களிடம் அரசியல் பேசுவதில்லை. மாறாக ஆன்மீகம் பேசுகிறார். அதோடு படப்பிடிப்பு தளங்களில் முன்பெல்லாம் தனது ஆரம்ப கால கதைகளை ஜூனியர் நடிகர் நடிகைகளிடம் பேசி வந்த ரஜினி, இப்போது இளவட்டங்களுடன் அமர்ந்தாலும் ஆன்மீகம் பற்றித்தான் பேசுகிறார்.

புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்கு பிறகு ஒரு அதிரடி நடிகையாக உருவெடுத்தவர்தான் அனுஷ்கா. அருந்ததி படத்தில் அவர் நடித்த அதிரடி வேடம் அவரது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. ஆனபோதும் அதன்பிறகு சிலகாலம் திறமைக்கு தீனி போட சரியான படங்கள் இல்லாமல் வழக்கான கதாநாயகிகளைப்போன்று மரத்தை சுற்றியே டூயட் பாடிக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி என்ற இரண்டு பெருந்தீனி படங்கள் கிடைத்தன.

அதனால், அந்த சரித்திர கால படங்களுக்காக சில பண்டைகால போர்ப்பயிற்சிகளை பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதோடு, தமிழில் அவர் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ரஜினி, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பும் இப்போதுதான் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. ஆக, தற்போது அவரது கைவசம் 4 மெகா படங்கள் உள்ளன. நான்கு படங்களுமே இறுதிகட்டத்தில் இருப்பதால், ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வரவும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய சினிமாவை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும்; ரஜினி பேச்சு

சென்னை: ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும் என ஐ பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசினார்.

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐ பட ஆடியோ விழாவுக்கு விஜய் வருவாரா?

கமல் நடித்த தசாவதாரம் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது ஜாக்கிசான் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதோடு, கமல், மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவை வெற்றிகரமாக நடத்திய அதே ஆஸ்கர் பிலிம்ஸ் இப்போது ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக அர்னால்டை அழைத்து வருகிறது.
வருகிற 15-ந்தேதி விழா நடப்பதாக கூறி விட்டபோதிலும், இன்னும் அழைப்பிதழ்களோ, விழா எங்கு நடக்கிறது என்பது போன்ற செய்திகளோ அந்த நிறுவனத்திடமிருந்து அறிவிக்கப்படவில்லை. எல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி படத்துக்காக தான் ஹீரோவாக நடிக்கும் பட விழாவை தவிர்த்த கருணாகரன்!

கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தவர் கருணாகரன். இதில் சூதுகவ்வும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்த கருணாகரனுக்கு காசு பணம் துட்டு என்ற பாடல் காட்சியிலும் நடித்தார். அதேபோல், யாமிருக்க பயமே படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார்.

விளைவு, இப்போது தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாகி விட்டார் கருணாகரன். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார் கருணாகரன்.

லிங்கா படக்குழு மீது சோனாக்ஷி சின்ஹா புகார்! ரஜினி அதிர்ச்சி!!

1975ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் இதுவரை 170 படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில் தனது 171வது படமான லிங்காவில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள்.

தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் லிங்காவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிலநாட்கள் ரஜினியுடன் சோனாக்ஷியும் நடித்துள்ளார். ஆனால் அப்போது அவரை ஒரு மட்டமான ஹோட்டலில் தங்க வைத்தார்களாம். இதனால் மனசுடைந்து போன சோனாக்ஷி இதை தனது டுவிட்டரில் கோபத்துடன் வெளியிட்டுள்ளார்.