கே.எஸ்.ரவிக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.எஸ்.ரவிக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரஜினி படத்துக்காக தான் ஹீரோவாக நடிக்கும் பட விழாவை தவிர்த்த கருணாகரன்!

கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தவர் கருணாகரன். இதில் சூதுகவ்வும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்த கருணாகரனுக்கு காசு பணம் துட்டு என்ற பாடல் காட்சியிலும் நடித்தார். அதேபோல், யாமிருக்க பயமே படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார்.

விளைவு, இப்போது தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாகி விட்டார் கருணாகரன். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார் கருணாகரன்.

மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.?!

ராணா படத்தின் பூஜை அன்று இரவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, அதையடுத்து இரண்டறை ஆண்டுகளாக நடிக்கவில்லை. அதனால், இரவு பகலாக 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி, வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து போரடித்து காணப்பட்டார். அவரது பொழுது போக்கிற்காக வீட்டிற்குள்ளேயே ஒரு தியேட்டர் ரெடி பண்ணி வெளியாகிற படங்களையெல்லாம் அவருக்கு போட்டு காட்டி வந்தனர்.

இந்த நேரத்தில்தான், பல வருடங்கள் இடைவெளி விழுந்தால் ரஜினியின் மார்க்கெட் போய் விடும் என்பதால், அவரை சினிமாவில் இருந்து கொண்டேயிருப்பது போன்று காண்பிக்க கோச்சடையான் அனிமேஷன் படத்தை எடுத்தார் அவரது இளைய மகள் செளந்தர்யா. அதையடுத்து, லிங்காவில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.