லிங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லிங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லிங்கா விநியோகஸ்தர்கள் இன்று உண்ணாவிரதம்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா படங்களை அடுத்து ரஜினிகாந்த் நடித்த படம் லிங்கா. ரஜினி நடிப்பில் சில ஆண்டு இடைவேளைக்குப்பிறகு இப்படம் வெளியானதால் எதிர்பார்ப்புகள் பலமாக இருந்தது. அதோடு கோச்சடையானில் அனிமேஷன் ரஜினியை பார்த்த ரசிகர்கள், நேரடி ரஜினியைபார்க்கும் ஆவலில் வரவேற்றனர்.

ஆனால், ஆரம்பத்தில் தியேட்டர்களுக்கு ரசிகர் கூட்டம் படையெடுத்த நிலையில், சீக்கிரமே வெறிச்சோடின. இதனால் அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தங்களுக்கு போட்ட பணம் கைக்கு வரவில்லை. அதிக நஷ்டமாகிவிட்டது என்று பல ஏரியாக்களில் இருந்தும் ரஜினிதரப்பை தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

3 நாட்களில் 100 கோடி வசூல்! லிங்கா பட சாதனை உண்மையா?

லிங்கா படத்தின் முதல் 3 நாள் வசூல் 100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல். உண்மையா இது? லிங்கா படத்தின் வியாபாரத்தில் பங்களிப்பு செய்த சிலரிடம் தகவல் திரட்டினோம். லிங்கா படம் வெளியான 12.12.2014 வெள்ளிக்கிழமை அன்று, சுமார் 720 தியேட்டர்களில் வசூலான தொகை மட்டுமே 53 கோடி! இரண்டாவது நாள் 27 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 24 கோடியும்..ஆக மூன்று நாட்களில் 104 கோடி வசூல் செய்திருப்பதை உறுதி செய்தனர்.

இதற்கு முன் 100 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்ட எந்திரன், கத்தி போன்ற படங்கள் அந்த தொகையை வசூலிக்க பல நாட்கள் ஆனநிலையில், லிங்கா 3 நாட்களில் 100 கோடியை எட்டியது எப்படி?

தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட லிங்கா, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து ஏரியா தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி முதலே திரையிடப்பட்டிருக்கிறது. அதோடு, 200, 300 என்று பல தியேட்டர்களில் அதிக கட்டணத்தை வசூல் செய்திருக்கின்றனர்.

'லிங்கா' படத்தில் 'காப்பி' அடிக்கப்பட்ட காட்சிகள்!

ஒரு படம் வெளிவருவதற்கு முன் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என ஒரு சிலர் பிரச்சனை எழுப்புவுதும், வழக்கு தொடுப்பதும் சமீப காலத்தில் அதிகமாகிவிட்டது. அப்படிப்பட்ட விவகாரங்களை சம்பந்தப்பட்ட படக் குழுவினர் படம் வெளிவருவதற்குள் சமாளிப்பது பெரிய விஷயம்.

படம் வெளியான பின் அவர்கள் வேறு சில விவகாரங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அது, காப்பி அடித்து எடுக்கப்படும் காட்சிகள். ஹாலிவுட் படங்களிலிருந்தோ, கொரியன், ஈரானிய படங்களில் இருந்தோ அப்படியே காட்சிகளை உருவி தங்களது படங்களில் பயன்படுத்திக் கொள்வது காலம் காலமாகவே நடந்து வருகிறது.

அமெரிகாவில் லிங்கா திரைப்படம் வெளியிடப்படும் தியேட்டர்கள் லிஸ்ட்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம், இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில், அதிகப்படியான தியேட்டர்கள் மற்றும் 200 கோடி அளவிற்கு காப்பீடு என பல்வேறு சாதனைகளை லிங்கா திரைப்படம் செய்துள்ளது.
அமெரிக்காவில், 300க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில், லிங்கா திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.
லிங்கா படம் வெளியிடப்படும் ஒவ்வொரு தியேட்டர்களிலும், 2 ஸ்கிரீன்கள் உள்ளது.

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது: சோனாக்சி சின்ஹா

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறிப் போனது என்றார் சோனாக்சி சின்ஹா. இவர் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:–

இந்தியில் சல்மான்கான், அஜய்தேவ்கான், சாகித்கபூர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு ரோல் மாடலாக இருப்பது ரஜினிதான். அவருடன் ‘லிங்கா’ படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது.

லிங்கா பட ரிலீசிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சொனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தின் படபிடிப்புக்கள் முடிவடைந்து, தற்போது ரிலீசிட்கான விலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் ஆடியோவை நவம்பர் 16ம் தேதி வெளியிட உள்ளதாகவும், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 21ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ஈரோஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளதாகும் கூறப்பட்டுள்ளது.

ரஜினியின் லிங்கா டீசர் இன்று வெளியாகிறது

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசர் அக்டோபர் 31ம் தேதி வெளியாவதாக கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இதனை நம்பி ரஜினி ரசிகர்கள் பலரும் லிங்கா டீசர் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி டீசர் வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், லிங்கா படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் படக்குழுவினர், இன்று (நவம்பர் 1) மாலை படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் தலைவர் வருகிறார் என்ற எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மனசுக்கு பிடித்தவர்களுக்கு ரஜினி வழங்கும் ஆன்மீக பரிசு!

நீண்டகாலமாக ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார் ரஜினி. அவர் தீவிர ஆன்மீக சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகுதான், தான் நடிக்கும் படங்களில் அரசியல் டயலாக்குகளை குறைத்தார். அதோடு, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும் நிறுத்தினார். அது மட்டுமின்றி, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனா சரியான நேரத்துல வருவேன் என்று எதிர்கால அரசியல் என்ட்ரி குறித்தும் பேசி வந்தவர், பின்னர் அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சமீபகாலமாக, எந்த மேடைகளுக்கு சென்றாலும் அரசியல் பேசுவதில்லை. அரசியல்வாதிகளே தன்னை சந்தித்தாலும் அவர்களிடம் அரசியல் பேசுவதில்லை. மாறாக ஆன்மீகம் பேசுகிறார். அதோடு படப்பிடிப்பு தளங்களில் முன்பெல்லாம் தனது ஆரம்ப கால கதைகளை ஜூனியர் நடிகர் நடிகைகளிடம் பேசி வந்த ரஜினி, இப்போது இளவட்டங்களுடன் அமர்ந்தாலும் ஆன்மீகம் பற்றித்தான் பேசுகிறார்.

'லிங்கா'வில் ஒரு பாடலில் த்ரிஷா....?!

தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது இன்றைய புதுமுக ஹீரோயின்களின் ஆசையாகவும் இருக்கிறது. ஆனால், திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் த்ரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது. கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் கூட அவர் ஜோடி சேர்ந்து விட்டார். ஆனால், என்னமோ ரஜினிகாந்துடன் மட்டும் அவரால் ஜோடி சேரவே முடியவில்லை.

இதனிடையே 'லிங்கா' படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாட உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பாடலுக்கு நடனமாட த்ரிஷாவை அழைத்தார்களாம். ஆனால், ரஜினியுடன் ஜோடியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரும் த்ரிஷா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா அப்படி நடிப்பதில் தவறில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.

ரஜினி படத்துக்காக தான் ஹீரோவாக நடிக்கும் பட விழாவை தவிர்த்த கருணாகரன்!

கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தவர் கருணாகரன். இதில் சூதுகவ்வும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்த கருணாகரனுக்கு காசு பணம் துட்டு என்ற பாடல் காட்சியிலும் நடித்தார். அதேபோல், யாமிருக்க பயமே படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார்.

விளைவு, இப்போது தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாகி விட்டார் கருணாகரன். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார் கருணாகரன்.

லிங்கா படக்குழு மீது சோனாக்ஷி சின்ஹா புகார்! ரஜினி அதிர்ச்சி!!

1975ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் இதுவரை 170 படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில் தனது 171வது படமான லிங்காவில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள்.

தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் லிங்காவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிலநாட்கள் ரஜினியுடன் சோனாக்ஷியும் நடித்துள்ளார். ஆனால் அப்போது அவரை ஒரு மட்டமான ஹோட்டலில் தங்க வைத்தார்களாம். இதனால் மனசுடைந்து போன சோனாக்ஷி இதை தனது டுவிட்டரில் கோபத்துடன் வெளியிட்டுள்ளார்.

அதிரடி நடனமாடி அனுஷ்காவை அதிர வைத்த ரஜினி!

ரஜினி படங்களின் பாடல்கள் எப்போதுமே படு ஸ்பீடாக இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடனமாடுவார் ரஜினி. அந்தவகையில், தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் லிங்கா படத்திலும் அதே வேகமான பாடல்களை கொடுத்துள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான்.

அந்த வகையில், தற்போது ரஜினி-அனுஷ்கா இடம்பெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை ஐதராபாத்தில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள்.

ரஜினி லிங்கா பட ரிலீஸ் திகதியை முடிவு செய்து விட்டார்...


லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். 

அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில் அங்குள்ள சில அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. எனவே கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது லிங்கா படக்குழு.

ரஜினி லிங்கா படப்பிடிப்பில் மயங்கி விழவில்லை!!!

ரஜினி நடிக்கும் அடுத்த படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அவர் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தவர்கள் இப்போது ஐதராபாத்தில் சரித்திரகால செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். முதலில் அரண்மனை செட் அமைத்து படமாக்கியவர்கள், இப்போது ஒரு பாடல் காட்சிக்காக ரஜினி விண்கலத்தில் நடந்து செல்வது போன்று படமாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரஜினி படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்து விட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. அதோடு, சண்டை காட்சியில் டூப் நடிகரை யூஸ் பண்ணாமல் ரஜினி ரிஸ்க் எடுத்ததினால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் சொள்ளபடுங்கின்றது