அஜீத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஜீத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அஜித்தின் பிறந்த நாளில் ரஜினி முருகன்

எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச் சட்டை படம் பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்டது. தற்போது ஜனவரி கடைசி வராத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

அஜீத் படத்திற்கு பாட்டு பாடிய கானா பாலா

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் அஜீத்தின் அறிமுகப் பாடலான ‘அதாறு அதாறு, உதாறு உதாறு...’ எனத் தொடங்கும் பாடலை கானா பாலா பாடியுள்ளார்.

இதுவரை பல நடிகர்களுக்கு பாட்டு பாடியுள்ள கானா பாலா, அஜீத் படத்திற்கு பாட்டு பாடியதில்லை. ஒவ்வொரு பாடகருக்கும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் பாட்டு பாடுவது கனவாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது.

தனுசுடன் இணைகிறார் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜீத் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்ட த்ரிஷா ரஜினியுடனும், அவரது மருமகன் தனுசுடனுதான் இதுவரை ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இதில் ரஜினியுடன் நடிப்பதற்கு லிங்கா படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அழைப்பார் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் த்ரிஷா. ஆனால், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவையும், தெலுங்கில் படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்காவையும் அப்படத்துக்கு புக் பண்ணி த்ரிஷாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டனர்.

மேலும், தனுசுடனும் நடிப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த த்ரிஷாவை, ஆடுகளம் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார் வெற்றிமாறன். ஆனால், அப்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் த்ரிஷாவால் அவர்கள் கேட்ட தேதிக்கு கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால்தான் அந்த வாய்ப்பு டாப்சிக்கு சென்றது. வெள்ளாவி நடிகை என்ற அடைமொழியையும் அப்படம அவருக்கு கொடுத்தது.

மனசுக்கு பிடித்தவர்களுக்கு ரஜினி வழங்கும் ஆன்மீக பரிசு!

நீண்டகாலமாக ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார் ரஜினி. அவர் தீவிர ஆன்மீக சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகுதான், தான் நடிக்கும் படங்களில் அரசியல் டயலாக்குகளை குறைத்தார். அதோடு, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும் நிறுத்தினார். அது மட்டுமின்றி, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனா சரியான நேரத்துல வருவேன் என்று எதிர்கால அரசியல் என்ட்ரி குறித்தும் பேசி வந்தவர், பின்னர் அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சமீபகாலமாக, எந்த மேடைகளுக்கு சென்றாலும் அரசியல் பேசுவதில்லை. அரசியல்வாதிகளே தன்னை சந்தித்தாலும் அவர்களிடம் அரசியல் பேசுவதில்லை. மாறாக ஆன்மீகம் பேசுகிறார். அதோடு படப்பிடிப்பு தளங்களில் முன்பெல்லாம் தனது ஆரம்ப கால கதைகளை ஜூனியர் நடிகர் நடிகைகளிடம் பேசி வந்த ரஜினி, இப்போது இளவட்டங்களுடன் அமர்ந்தாலும் ஆன்மீகம் பற்றித்தான் பேசுகிறார்.

அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!

''நாளைய தீர்ப்பு'' படத்தில் அறிமுகமானவர் விஜய். அதையடுத்து அவர் நடித்த ''ராஜாவின் பார்வையிலே'' என்ற படத்தில் அஜீத் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அஜீத்திற்காக விஜய்தான் வில்லன்களை பின்னி பெடலெடுப்பார். அந்த படத்தில் நண்பர்களாக நடித்த அவர்கள் அதிலிருந்தே நிஜத்திலும் நட்பை வளர்த்து வருகிறார்கள்.

தற்போது மெகா நடிகர்களாக அவர்கள் வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களை போட்டியாளர்களாக சித்தரிப்பது, அவர்களது ரசிகர்கள் மோதிக்கொண்டு வருவதோ தொடர்கதையாகி விட்டது. ஆனால், திரைக்குப்பின்னால் விஜய்-அஜீத் இருவரும் அவ்வப்போது சந்தித்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் நல்ல நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள்.

அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!

கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தவர் த்ரிஷா. அந்த படத்தில் த்ரிஷாவை புடவை கெட்டப்பில் நடிக்க வைத்த கெளதம், சிம்பு-த்ரிஷாவுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகளையும் இளசுகள் விரும்பும் வகையில் டச்சிங்காக படமாக்கியிருந்தார்.

அதனால் மெகா ஹிட்டான அப்படம், கெளதம்மேனன் கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படமானது. அதனால் அதையடுத்து, அந்த படத்தை இந்தியில் ஏக் திவானா தா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரன்பீர்கபூர் நாயகனாக நடித்த அந்த படத்தில் தமிழில் த்ரிஷா நடித்த வேடத்தில் ஐ பட நாயகி எமி ஜாக்சன் நடித்திருந்தார். அப்படம் ஹிட்டடித்தது.

அஜீத் படத்திற்கு டைட்டில் ரெடியாகி விட்டதாம்!

ஆரம்பம் படத்தில் இருந்தே அஜீத் படங்களுக்கு உடனடியாக தலைப்பு சொல்வதில்லை என்ற ஒரு சபதத்தை எடுத்துள்ளார்கள், அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்கள். இதில் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா மட்டும் பூஜை அன்றே வீரம் என்ற தலைப்பினை தில்லாக அறிவித்தார்.


ஆனால், இப்போது அஜீத்தின் 55வது படத்தை இயக்கி வரும் கெளதம்மேனன், ஆரம்பத்தில் ஆயிரம் தோட்டாக்கள் என்ற பெயரை வைத்திருப்பதாக இலைமறை காய்மறையாக சொன்னார். ஆனால் அதற்கு அஜீத் என்ன சொன்னாரோ, அதன்பிறகு டைட்டீல் பற்றி அவர் வாயை திறக்கவே இல்லை. தற்போது, படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டது.

சத்தமில்லாமல் காய் நகர்த்துகிறார் த்ரிஷா!

கோடம்பாக்கத்துக்கு லேட்டஸ்டாக இறக்குமதியான நடிகைகளில் லட்சுமிமேனனுக்கு பிறகு எந்த நடிகையும் பெரிய அளவில் வளரவில்லை. எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிப்புக்கு கல்தா கொடுத்து விட்டார்.

இதன்காரணமாக, பத்து வருடங்களாக கோலேச்சி கொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாரா, காஜல்அகர்வால் போன்ற சில முத்தின நடிகைகள்தான் தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். இதில் நயன்தாரா, காஜல் இருவரும் சம்பள விவகாரத்தில் இன்னமும் பழைய ஞாபகத்தில் உச்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

வாலில் தீ வைத்தால்தான் ராக்கெட் மேலே செல்லும்! -அஜீத்

சமீபகாலத்து நடிகர்களெல்லாம் கதை சொல்ல வரும் டைரக்டர்களை பஞ்சர் பண்ணி விடுகிறார்கள். அந்த அளவுக்கு சீன் பை சீன் கதையை கேட்பவர்கள். பின்னர் தாங்கள் அவர்களுக்கு முதலில் இருந்தே கடைசி வரை அதே கதையை ரிப்பீட்டு செய்வார்கள்.

அதைக்கேட்டு தங்களது கதை தலை ஒரு பக்கம் வால் ஒருபக்கம் இடமாறிப்போயிருப்பதைப்பார்த்து தலை சுற்றிப்போவார்கள் டைரக்டர்கள்.


மீண்டும் அப்பா ஆகிறார் அஜீத்!

டைரக்டர் சரண் இயக்கிய படம் அமர்க்களம். இந்த படத்தில் அஜீத்-ஷாலினி இருவரும் ஜோடி சேர்ந்தனர். படத்தில் காதலர்களாக நடித்த அவர்கள் நிஜத்திலும் காதலிக்கத் தொடங்கி விட்டனர். இந்த செய்தி அமர்க்களம் படப்பிடிப்பு நடந்தபோது இலைமறையாக பரவிக்கொண்டிருந்தது. இதையடுத்து அவர்கள் தங்களது காதலை பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கினார்.

அதனால், இருவீட்டார் ஆசீர்வாதத்துடன் அஜீத்-ஷாலினி திருமணம் 2000-ம் ஆண்டில் கோலாகலமாக நடைபெற்றது. அதன்பிறகு அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகள் பிறந்தார். அவருக்கு தற்போது 4 வயது ஆகிறது.
இந்த நிலையில், தற்போது ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம். இதனால் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் அஜீத், அவரை நல்லமுறையில் கவனித்து வருகிறாராம்.