சிவகர்த்திகேயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகர்த்திகேயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அஜித்தின் பிறந்த நாளில் ரஜினி முருகன்

எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச் சட்டை படம் பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்டது. தற்போது ஜனவரி கடைசி வராத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.