ரஜினி முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அஜித்தின் பிறந்த நாளில் ரஜினி முருகன்

எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச் சட்டை படம் பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்டது. தற்போது ஜனவரி கடைசி வராத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

இறங்கிச்சென்று வாய்ப்பு கேட்டும் புண்ணியமில்லையே! - தமன்னா புலம்பல்

வீரம் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு கூட தயாராகயிருந்தார் தமன்னா. ஏற்கனவே லிங்குசாமியின் பையா படத்தில் நடித்திருந்ததால், அவரே ரஜினி முருகனை தயாரிக்கயிருப்பதால் அந்த நட்பு அடிப்படையில் அந்த படத்தை கைப்பற்றினார் தமன்னா.

ஆனால், இப்போது பார்த்தால், தமன்னாவுக்கு மார்க்கெட் இல்லாததை காரணம் காட்டி அவரை ஓரங்கட்டி விட்டனர். அவருக்குப்பதிலாக மாஜி மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொனராம் அப்படத்தை இயக்குகிறார்.