தமன்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமன்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நயன்தாராவுக்கென ஒரு தனி இடம் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரபுதேவாவுடனான காதல் விவகாரத்துக்குப் பிறகு மறுபிரவேசம் செய்தபோது, மீண்டும் விட்ட இடத்தை நயன்தாராவினால் பிடிக்க முடியாது என்றுதான் கருதப்பட்டது. ஆனபோதும், மீண்டும் அதே பழைய எனர்ஜியுடன் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, பழைய இடத்தை பிடித்துக்கொண்டார்.

குறிப்பாக, ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி செம ஸ்பீடாக சென்று கொண்டிருக்கும் நயன்தாராவின் படக்கூலி இப்போது ஒன்றரை கோடியை தொட்டு நிற்கிறது. ஆனால், நடித்து வரும் படங்களில் ஒன்றிரண்டு சூப்பர் ஹிட் ஆனால் அதை அபபடியே இரண்டு கோடியாக ரவுண்டாக்கி விடவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.

தமன்னாவின் 'தலை' போகும் கனவு!

கனவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லுமளவிற்கு நம் அனைவரின் வாழ்விலும் தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது கனவுகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் பல கனவுகள் நம்ப முடியாதவையாகவும், இப்படியெல்லாம் கூட நடக்குமா என்றெல்லாமும் யோசிக்க வைக்கும். தமன்னாவிற்கும் அப்படித்தான் ஒரு பயங்கரக் கனவு அடிக்கடி வருகிறதாம். அதாவது அந்தக் கனவு 'தலை' போகிற ஒரு கனவாக இருக்கிறதாம்.

அவருடைய கனவில் அவருடைய தலைமுடி வெள்ளையாகி விடுவது போலவும், அவருக்குத் தலையில் குறைவான முடியே இருப்பது போலவும் கனவு அடிக்கடி வருகிறதாம். இன்னும் 30 வயதைக் கூடத் தாண்டவில்லை, அதற்குள் இப்படிப்பட்ட கனவு வருகிறதே என்று தமன்னா கவலைப்படுகிறாராம். அப்படி ஒரு கனவு வரும் போதெல்லாம் தமன்னா மிகவும் தவித்துப் போய்விடுகிறாராம்.

இறங்கிச்சென்று வாய்ப்பு கேட்டும் புண்ணியமில்லையே! - தமன்னா புலம்பல்

வீரம் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு கூட தயாராகயிருந்தார் தமன்னா. ஏற்கனவே லிங்குசாமியின் பையா படத்தில் நடித்திருந்ததால், அவரே ரஜினி முருகனை தயாரிக்கயிருப்பதால் அந்த நட்பு அடிப்படையில் அந்த படத்தை கைப்பற்றினார் தமன்னா.

ஆனால், இப்போது பார்த்தால், தமன்னாவுக்கு மார்க்கெட் இல்லாததை காரணம் காட்டி அவரை ஓரங்கட்டி விட்டனர். அவருக்குப்பதிலாக மாஜி மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொனராம் அப்படத்தை இயக்குகிறார்.

தொடரும் தமன்னாவின் தோல்வி ராசி...

ஒரு படத்தின் வெற்றிக்கு எப்படி பல காரணங்கள் இருக்கிறதோ அதே போலத்தான் தோல்விக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அப்படித் தோல்வியடையும் படங்களில் யாரையாவது ஒருவரை மட்டும் குற்றம் சாட்டும் போக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

அந்தக் குற்றத்தில் குறை இருந்தாலும் பரவாயில்லை கறை இருக்கக் கூடாது. மகேஷ் பாபு ஜோடியாக தமன்னா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஆகாடு' படத்தின் தோல்விக்கு தமன்னாவின் ராசிதான் காரணம் என சிலர் சொல்லி வருகிறார்களாம். தமன்னா ஹிந்தியில் நாயகியாக நடித்த படங்கள் தோல்வியடைந்ததற்கு அவருடைய ராசியையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சம்பளத்துக்கு பதிலாக அசையா சொத்துக்களை வாங்கும் தமன்னா!

2005ம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான தமன்னா இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 37 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தெலுங்கில் மட்டும் 18 படங்களில் நடித்துள்ளார்.

அப்படி அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அங்கு வெற்றி பெற்றிருப்பதால், தமன்னா நடித்தால் ஹிட் என்கிற செண்டிமென்ட்டும் உள்ளதாம்.

அதனால், அப்படி தமன்னா நடிக்கும் படங்களுக்கு சிலர் பணமாக கொடுக்காமல் அசையா சொத்துக்களையும் அள்ளிக் கொடுக்கிறார்களாம். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தமன்னாவுக்கு சொகுசு பங்களா ஒன்றை கட்டிக்கொடுத்தனர். அதனால் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்கும்போது அந்த வீட்டில்தான் தங்குகிறார் தமன்னா.

ஆர்யாவின் அடுத்த ஜோடி தமன்னா!

ஆர்யா என்றாலே எல்லா கதாநாயகிகளுக்கும் எளிதில் பிடித்துவிடும். இவருடன் ஒரு படம் சேர்ந்து நடித்தாலே தான் விட்ட மார்கெட்டை பிடித்து விடலாம் என்று பல ஹீரோயின்ஸ் போட்டி போட்டு இவருடன் நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஆர்யாவே ஒரு கதாநாயகியை தன் படத்திற்கு வேண்டும் என்று நூல் விட்டுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, நம் எல்லோருக்கும் பிடித்த தமன்னா தாங்க.பாஸ்(எ)பாஸ்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குனர் ராஜேஷ். இப்படத்தில் தமன்னாவை கதாநாயகியாக்க ஆர்யாவே பெர்சனல்லாக சிபாரிசு செய்தராம்.

திருமணத்திற்கு தமன்னாவின் நிபந்தனை

காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார், தமன்னா. பல நடிகைகள், தங்களது காதல் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் போது, 'என் மனதுக்கு பிடித்த நபரை தேடி கொண்டிருக்கிறேன்' என, பகிரங்கமாக அறிவித்துள்ளார், தமன்னா.இதுபற்றி அவர் கூறுகையில், 'என்னை கவர்ந்த நபர், இன்னும் என் கண்ணில் படவில்லை. அப்படிப்பட்ட நபரை, இப்போது சீரியசாக தேடி வருகிறேன்.

அறிமுகம் இல்லாத நபருக்கு கழுத்தை நீட்டுவதில் உடன்பாடில்லை. பல ஆண்டுகளாக பார்த்து, பழகி, காதலித்தவரையே திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார்.