காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார், தமன்னா. பல நடிகைகள், தங்களது காதல் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் போது, 'என் மனதுக்கு பிடித்த நபரை தேடி கொண்டிருக்கிறேன்' என, பகிரங்கமாக அறிவித்துள்ளார், தமன்னா.இதுபற்றி அவர் கூறுகையில், 'என்னை கவர்ந்த நபர், இன்னும் என் கண்ணில் படவில்லை. அப்படிப்பட்ட நபரை, இப்போது சீரியசாக தேடி வருகிறேன்.
அறிமுகம் இல்லாத நபருக்கு கழுத்தை நீட்டுவதில் உடன்பாடில்லை. பல ஆண்டுகளாக பார்த்து, பழகி, காதலித்தவரையே திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார்.
அறிமுகம் இல்லாத நபருக்கு கழுத்தை நீட்டுவதில் உடன்பாடில்லை. பல ஆண்டுகளாக பார்த்து, பழகி, காதலித்தவரையே திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார்.