சமந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நயன்தாராவுக்கென ஒரு தனி இடம் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரபுதேவாவுடனான காதல் விவகாரத்துக்குப் பிறகு மறுபிரவேசம் செய்தபோது, மீண்டும் விட்ட இடத்தை நயன்தாராவினால் பிடிக்க முடியாது என்றுதான் கருதப்பட்டது. ஆனபோதும், மீண்டும் அதே பழைய எனர்ஜியுடன் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, பழைய இடத்தை பிடித்துக்கொண்டார்.

குறிப்பாக, ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி செம ஸ்பீடாக சென்று கொண்டிருக்கும் நயன்தாராவின் படக்கூலி இப்போது ஒன்றரை கோடியை தொட்டு நிற்கிறது. ஆனால், நடித்து வரும் படங்களில் ஒன்றிரண்டு சூப்பர் ஹிட் ஆனால் அதை அபபடியே இரண்டு கோடியாக ரவுண்டாக்கி விடவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.

லிங்கா படம் கத்தி படத்தின் கதையா? பட அதிபர் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ்சின் இயக்கத்தில் வெளியாகி விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. விவசாயிகள், விவசாயம், தண்ணீர் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடும் இளைஞன் கேரக்டரில் விஜய் வருகிறார்.

ரஜினியின் ‘லிங்கா’ படமும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்தே எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏரி தண்ணீரை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக விவசாயிகள் பக்கம் நின்று போராடும் கேரக்டரில் ரஜினி வருகிறார் என்கின்றனர்.

எனக்கு நடிப்பு வராவிட்டால் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவேன்: சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா ஐதராபாத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன. சில படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இரண்டையும் ஒன்றாகத்தான் பார்த்தேன். தோல்வி அடைந்ததற்காக வருத்தப்பட்டது இல்லை. வெற்றி–தோல்வியில் எனக்கு சம்பந்தமில்லை என்பது போல்தான் இருப்பேன்.

அந்த வகையில் நான் ஒரு சுயநலக்காரி.படங்களில் என் கேரக்டர் என்ன எப்படி நடித்தேன் என்பதை தான் பார்ப்பேன். தோல்வி அடைந்த படங்களில் கூட நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்று பாராட்டுகள் கிடைத்துள்ளன. எனவே என்னை பொறுத்தவரை படம் நன்றாக ஓடாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் என் நடிப்பை பாராட்டுவதை கேட்கும் போது மகிழ்ச்சிதான்.

நீச்சல் உடை வேண்டாம் சமந்தா முடிவில் மாற்றம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, பிகினி - டூ பீஸ் உடைகளை நெருங்கவிடாமல், ஓரளவு டீசன்டாகத்தான் நடித்து வந்தார்.
ஆனால், 'அஞ்சான்' படத்தில் பிகினி உடைதரித்து அதிரடியாக பிரவேசித்தார். அதற்கு பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. மாறாக, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்ததற்கு அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

 ரசிகர்கள் பலரும், 'குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடியுங்கள்' என, அவரிடம் கூறி வருகின்றனராம். அதனால், 'இனிமேல் தப்பித்தவறி கூட, பிகினி பக்கம் திரும்பமாட்டேன். இப்போதைய இளம் ரசிகர்களின் ரசனை ஆபாசமாகி விட்டதாக நினைத்தேன். ஆனால், அவர்கள் கூறிய கருத்தைப் பார்க்கையில், இளம் ரசிகர்களின் ரசனை ஆரோக்கியமாக உள்ளதை உணர்ந்துள்ளேன்' என, சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி...

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணியில் இருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போதுள்ள நடிகைகள் பலரும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சரி சமமான புகழில் இருந்து வருகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா ஆகியோர் தமிழிலும், தெலுங்கிலும் புகழ் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்போது இவர்களுக்கிடையேதான் பலத்த போட்டி இருந்து வருகிறது. பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதில்தான் இவர்களுக்குள் அதிகமான போட்டி இருக்கிறது. அதிலும் ஒரு படம் ஹிட்டானவுடனே சம்பளத்தையும் ஏற்றி விடுகிறார்களாம். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்கும் ஹீரோயின்களுக்கு தயாரிப்பாளர்களும் ராசியானவர் என்று சொல்லி அவர்கள் கேட்கும் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.

கத்தி தெலுங்கிலும் டப் ஆகிறது...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் மீண்டும் நடிக்கும் படம் கத்தி. விஜய் இதற்கு முன் நடித்து வெளிவந்த ஜில்லா, தலைவா ஆகிய படங்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், துப்பாக்கி படத்தைப் போன்று மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைத் தரவேண்டும் என்று விஜய் நினைத்து வருகிறாராம்.

 தற்போது ரசிகர்கள் வழக்கமான மசாலாப் படங்களை ரசிப்பதில்லை, வித்தியாசமான படங்களையே ரசிக்கிறார்கள் என்ற நோக்கத்தில்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்களாம். சில நாட்களுக்கு முன் முடிவடைந்த பாடல் காட்சியுடன் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். விஜய் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் சமந்தா!

பாணா காத்தாடி சமந்தா தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார். அங்கு அவர் நடித்த படங்களெல்லாம் ஹிட்டாக அமைந்ததால் அத்தனை முன்னணி ஹீரோயினிகளையும் ஓவர்டேக் செய்து விட்டு நம்பர் ஒன் நாற்காலியிலும் அமர்ந்தார். அந்த நேரத்தில்தான், தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அவரது துரதிர்ஷ்டம் கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக, ஷங்கருக்கும் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதனால் எமிஜாக்சனை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார்.

தயாரிப்பாளராகப் போகிறாரா சமந்தா....?

தமிழில் தற்போதுதான் முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார் சமந்தா. அவர் நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த 'அஞ்சான்' படம் அவருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்றாலும், அவரைப் பற்றி பேச வைத்துவிட்டது.

இருந்தாலும் விஜய் ஜோடியாக நடித்து வரும் 'கத்தி' படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

சித்தார்த் ஒரு சினிமா பைத்தியம்!- சமந்தா

சித்தார்த் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தின் ஆடியோ விழா நேற்று சிறப்பாக நடந்தது. இவ்விழாவில் பேசியவர்கள், 30 வருடத்திற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அதே டைட்டீலில் இப்போது சித்தார்த் நடித்திருக்கிறார். ஜூனியர் கமலான சித்தார்த்தே இந்த டைட்டீலில் நடிக்க பொருத்தமானவர் என்றனர்.

அதோடு, அந்த படக்குழுவினர் பேசுகையில், ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான பாணி இருக்கிறது.அந்த வகையில், சித்தார்த் என்றால் இப்படித்தான் நடிப்பார் என்றும் கருதுவார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உடைத்தெறியும் வகையில் இந்த படத்தில் சித்தார்த்தால் வேறுவிதமாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடித்துள்ளார்.

அஞ்சான் படத்திற்கு வரி விலக்கு கிடைக்காதது ஏன்...?!

நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்திற்கு, வரி விலக்கு அளிக்கும்படி தேர்வுக்குழு உறுப்பினர் யாரும் பரிந்துரை செய்யாததால் வரி விலக்கு அளிக்க இயலாது என, அரசு அறிவித்துள்ளது. தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது உட்பட, பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்கு, தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது. வரி விலக்கு அளிக்க தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், சூர்யா நடித்து, சமீபத்தில் வெளியான, அஞ்சான் திரைப்படம், கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்கு, தகுதியானது அல்ல என, பரிந்துரை செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு...

சமந்தா லிமிட் தாண்டியதால் ஓரங்கட்டிய சித்தார்த்!

சித்தார்த்-சமந்தா இருவரும் ஒரேயொரு தெலுங்கு படத்தில்தான் இணைந்து நடித்தனர். அதற்குள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டது. இருவரும் ஜோடி போட்டு சினிமா விழாக்களில் ஆஜரானார்கள். அதனால் அவர்களது காதலை தெலுங்கு மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின. இதன் காரணமாக சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்குமோ என்று கருதிய சித்தார்த், காதல் பற்றி எந்த மீடியாக்கள் தன்னிடம் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதற்கு பதிலாக எரிந்து விழுந்தார்.

அதோடு எனது பர்சனல் விசயம் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் தயாராகயில்லை என்று கூறிவந்தார். அதேபோல் சமந்தாவும் காதல் பற்றி எந்த பதிலும் சொல்லாமல் மூடி மறைத்து வந்தார். அப்போது, சித்தார்த்தின் தந்தைதான் சமந்தாவின் கால்சீட் பார்ப்பதாககூட செய்திகள் வெளியாகிக்கொண்டு வந்தன.

நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அஞ்சான் சமந்தா!

நயன்தாரா சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே அவருக்கு பல ஹீரோக்களின் அணுக்கிரகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல சமயங்களில் ஆர்யா உள்ளிட்ட சில ஹீரோக்கள்தான் அவருக்கு கைகொடுத்து காப்பாற்றி விட்டுள்ளனர். அதனால்தான், தோழிகளை விட தோழர்களை எப்போதுமே தன்னைச்சுற்றி வைத்திருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச்சென்றால் தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்பதற்காகவே தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்வதையே தவிர்த்தார் நயன்தாரா. ஆனால், தமிழ் சினிமாவினர் அதை கண்டுகொள்ளாத நிலையில், தெலுங்கில் அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ள மறுத்ததால், அவருக்கு ரெட் கார்டு போட்டு, தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை போட்டுள்ளனர்.

பேட்டி கொடுக்க சமந்தா போட்ட நிபந்தனைகள்..!

சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் வருகிற 15-ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் ஆடியோ வெளியீடு உள்ளிட்ட எந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வராத சமந்தா தற்போது பத்திரிகை மற்றும் டி.வி புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அதாவது வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் அவர் தினமும் பத்திரிகையாளர்களுக்கும், டி.வி மீடியாக்களுக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்து வருகிறார்.

கத்தி படத்தை எதிர்க்க மாட்டேன்: சீமான் சொல்கிறார்

விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதனை லைக்கா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரின் நிறுவனம் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் இது தவறு லண்டனில் செட்டிலாகிவிட்ட இலங்கை தமிழரின் நிறுவனம் இது. இதற்கும் ராஜபக்ஷேவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தியும் சீமான், நெடுமாறன், ராமதாஸ், தொல் திருமாவளவன், வைகோ ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தை சீமான் இயக்க இருக்கிறார். அதற்காகத்தான் அவர் கத்தி பட விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார் என்று கூறப்பட்டது.

தமிழுக்கு வராத சமந்தா, தெலுங்குக்கு வந்தார்...!

லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையைமப்பில் உருவாகியுள்ள 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற போது அந்தப் படத்தின் நாயகியான சமந்தா கலந்து கொள்ளவில்லை. அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சொன்னார்கள்.

ஆனால், அவர் சென்னையில் இருந்து கொண்டேதான் அந்த விழாவிற்கு வராமல் தவிர்த்துவிட்டார் என்றும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியானது.

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி சமந்தா.?!

முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் இதை யாருமே நம்பவில்லை.

ஹன்சிகாவாவது சிவகார்த்திகேயனுடன் நடிப்பதாவது என்று சொன்னார்கள். ஆனால், அப்போதைய நிலவரப்படி ஹன்சிகாவின் மார்க்கெட் தள்ளாடிக்கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்ட சமந்தா!

தமிழ்த் திரைப்பட உலகில் மட்டும் இசை விழாவோ, அல்லது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள அந்தந்த படங்களில் நடிக்கும் நடிகைகள் முன் வருவதே இல்லை. நயன்தாரா, த்ரிஷா போன்ற பல நடிகைகள் படத்தில் ஒப்பந்தமாகும் போதே அவற்றிற்கெல்லாம் தங்களை அழைக்கக் கூடாது என்று சொல்லி விடுகிறார்களாம்.

நடிகைகள் அவரவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும், அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சொன்னாலும் அப்படி எதுவும் நடந்ததுமில்லை. தமிழில் இனிதான், வெற்றிப் படக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சமந்தா, கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

'அஞ்சான்' சமந்தா, அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்...!

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சான்' படத்தின் மூலம் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சமந்தா ஆசைப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் பின் சமந்தா யார் என்பது ஓரளவிற்கு வெளியில் தெரிந்தாலும் அவர் தனி கதாநாயகியாக தமிழில் நடித்த 'பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.

சமந்தா மீது கடும் கோபத்திலிருக்கும் சூர்யா....!

தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகைகள் அனைவருமே அவரவர் படங்களின் இசை வெளியீட்டுக்கோ, பத்திரிகையாளர் சந்திப்புக்கோ கண்டிப்பாக வந்து விடுவார்கள். அங்கு படத்தின் நாயகியர் வரும் போதுதான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். நடிகர்களுக்குள் எப்படிப்பட்ட போட்டி இருந்தாலும், நடிகைகள் அனைத்து ஹீரோக்களின் படங்களின் விழாக்களுக்கும் தவறாமல் வருவார்கள்.

அப்படியிருக்க சமீபத்தில் நடைபெற்ற 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின.

தமிழிலும் போட்டி போடும் சமந்தா, ஸ்ருதிஹாசன்...!

சமந்தாவும், ஸ்ருதிஹாசனும், தெலுங்கில்தான் படத்துக்குப் படம் போட்டி போட்டார்கள் என்று பார்த்தால், இவர்களது போட்டி தற்போது தமிழிலும் தொடர்கிறதே என்று ஆந்திரத் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம்.

கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் சமந்தாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும்தான் பலத்த போட்டியாக இருந்தது.

'பலுப்பு' படத்தில் ரவி தேஜாவுடனும், 'ராமையா ஒஸ்தாவையா' படத்தில் ஜுனியர் என்டிஆருடனும், 'எவடு' படத்தில் ராம் சரண் தேஜாவுடனும், 'ரேஸ் குர்ரம்' படத்தில் அல்லு அர்ஜுனுடனும் கடந்த இரண்டு வருடங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ருதிஹாசன்.