சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சான்' படத்தின் மூலம் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சமந்தா ஆசைப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் பின் சமந்தா யார் என்பது ஓரளவிற்கு வெளியில் தெரிந்தாலும் அவர் தனி கதாநாயகியாக தமிழில் நடித்த 'பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை.
தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.
தற்போது 'அஞ்சான், கத்தி, 10 எண்ணுறதுக்குள்ள...' படங்களின் மூலம் அவருடைய ஆசை சீக்கிரமே நிறைவேறிவிடலாம்.
இருந்தாலும் இங்கும் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்கு கிளாமராகவும், செக்ஸியாகவும் நடிக்க சமந்தா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அஞ்சான்' படத்தின் முதல் பார்வை சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதில் சமந்தாவின் கிளாமரான ஆடையைப் பார்த்த சில முன்னணி நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம். சில தினங்களுக்கு முன் 'அஞ்சான்' படத்தின் பாடல்களை பிரத்யேகமாக திரையிட்ட போது சமந்தாவின் கிளாமர் ஆடைகளைப் பற்றிய பேச்சுத்தான் திரையுலகப் பிரபலங்களிடம் இருந்ததாம். இத்தனை நாட்களாக இந்த அளவிற்கு குறைவான ஆடைகளில் சில முன்னணி நடிகைகள் நடிக்க சம்மதித்ததே இல்லையாம். ஆனால், சமந்தாவின் இந்த ஆடைக் குறைப்பு விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்ட மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதாம். அதோடு, அடுத்தடுத்து விஜய், விக்ரம் என படங்கள் இருப்பதால் இந்த ஆண்டிலேயே நம்பர் 1 இடத்தை சமந்தா பிடித்து விடுவாரோ என அஞ்சுகிறார்களாம்.
சமந்தாவின் இந்த கிளாமர் தோற்ற புகைப்படங்கள்தான் தற்போது மீடியாக்களில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. 'பத்து எண்ணுறதுக்குள்ள' அடுத்த நடிகைகள் பிழைப்புல சமந்தா 'கத்தி'யை சொருகிடுவாரோ...!!