தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கென்று சில நண்பர்கள் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்கள் காமெடி நடிகர்களாகோ அல்லது ஹீரோக்களாகவோ மாறுவார்கள். சந்தானம், ஜெய், சூரி, கருணாகரன், விஜய்சேதுபதியெல்லாம் ஹீரோவின் நண்பர்களாக இருந்து வந்தவர்கள்தான்.
அதே மாதிரி ஹீரோயின்களுக்கும் தோழிகள் இருப்பார்கள். அவர்கள் காமெடி நடிகையாகவோ அல்லது ஹீரோயினாகவோ மாறுவார்கள். தோழியாக இருந்து ஹீரோயின் ஆனவர்களில் த்ரிஷா முக்கியமானவர். அந்த வழியில் இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார் மிஷா கோஷல்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தவர். கடைசியாக ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாகவும், வடகறி படத்தில் ஸ்வாதி தோழியாகவும் நடித்தார்.
தற்போது மூச் என்ற படத்தின் ஹீரோயின் ஆகிவிட்டார். பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்குகிறார், பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
நித்தின் என்ற புதுமுகம் ஹீரோ. “இது திகில் படம் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு பேயும், தாயும் உரிமை கொண்டாடுகிறார்கள். இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை” என்கிறார் வினுபாரதி.