மிஷா கோஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிஷா கோஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தோழியாக நடித்தவர் ஹீரோயின் ஆனார்!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கென்று சில நண்பர்கள் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்கள் காமெடி நடிகர்களாகோ அல்லது ஹீரோக்களாகவோ மாறுவார்கள். சந்தானம், ஜெய், சூரி, கருணாகரன், விஜய்சேதுபதியெல்லாம் ஹீரோவின் நண்பர்களாக இருந்து வந்தவர்கள்தான்.

அதே மாதிரி ஹீரோயின்களுக்கும் தோழிகள் இருப்பார்கள். அவர்கள் காமெடி நடிகையாகவோ அல்லது ஹீரோயினாகவோ மாறுவார்கள். தோழியாக இருந்து ஹீரோயின் ஆனவர்களில் த்ரிஷா முக்கியமானவர். அந்த வழியில் இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார் மிஷா கோஷல்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தவர். கடைசியாக ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாகவும், வடகறி படத்தில் ஸ்வாதி தோழியாகவும் நடித்தார்.