ஸ்ருதிஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ருதிஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராஜாவாக மாறும் விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு மாரீசன், கருடா என்று தலைப்புகள் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானபோதும், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், நல்ல டைட்டிலை அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் டைட்டிலை உடனடியாக அறிவிக்காமல் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியதுபோல், விஜய்யும் தனது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து புதிய பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், சமீபகாலமாக அதிரடி ஆக்சன் படங்களாக நடித்து வரும் விஜ்ய, இந்த படம் சரித்திர பின்னணி கொண்டது என்பதால், இரண்டில் ஒரு வேடத்தில் அரசர் கெட்டப்பில் வருகிறாராம்.

என் படம் பிடித்தால் பாருங்க...ஸ்ருதிஹாசன்...

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பூஜை' படம் மூலம் நடிக்க வந்த ஸ்ருதிஹாசனுக்கு அந்தப் படம் மிகப் பெரிய பெயரை வாங்கித் தரவில்லை. இருந்தாலும் படத்தில் ஸ்ருதிஹாசனின் கிளாமரான தோற்றம் அவரைப் பற்றி கொஞ்சம் பேச வைத்திருக்கிறது. தெலுங்கில் நடிக்கும் படங்களில் எல்லாம் அதிகமான கிளாமராக நடித்த ஸ்ருதி, தமிழில் அந்த அளவிற்கு கிளாமராக நடிக்கவில்லை என்கிறார்கள்.

சமீபத்தில் 'பூஜை' பட பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கிளாமர்னா என்ன எனக் கேள்வி கேட்டு திடுக்கிட வைத்தார்.கிளாமருக்கு என்ன அளவுகோல் என்பதை அவருக்கு யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும் என்று கூட அன்று கமெண்ட் அடித்தார்கள். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப என் எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும்.

ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி...

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணியில் இருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போதுள்ள நடிகைகள் பலரும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சரி சமமான புகழில் இருந்து வருகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா ஆகியோர் தமிழிலும், தெலுங்கிலும் புகழ் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்போது இவர்களுக்கிடையேதான் பலத்த போட்டி இருந்து வருகிறது. பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதில்தான் இவர்களுக்குள் அதிகமான போட்டி இருக்கிறது. அதிலும் ஒரு படம் ஹிட்டானவுடனே சம்பளத்தையும் ஏற்றி விடுகிறார்களாம். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்கும் ஹீரோயின்களுக்கு தயாரிப்பாளர்களும் ராசியானவர் என்று சொல்லி அவர்கள் கேட்கும் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.

ஸ்ருதிஹாசனின் கால்சீட் பிரச்சினையால் கைநழுவிப்போன படங்கள்!

ஏழாம் அறிவு, 3 படங்களைத் தொடர்ந்து தற்போது பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் இதற்கிடையே மணிரத்னம் டைரக்ஷனில் உருவாகும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது துல்கர்சல்மான்-நித்யாமேனன் நடிப்பதாக சொல்கிறார்கள். துல்கர்சல்மான் ஹீரோ என்பதால்தான் அப்படத்தை ஸ்ருதிஹாசன் தவிர்த்து விட்டதாகவும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.ஆனால் இதுபற்றி ஸ்ருதியைக் கேட்டால், மணி சார் படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!

தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள். அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள்.

கன்னட ஹீரோ சுதீப் வில்லன். ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். இது சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த திரைக்கதை. அதாவது தெலுங்கில் வெளிவந்த மகதீரா பாணியிலான கதை. இதற்கான படப்பிடிப்புகள் 5 கட்டமாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறது.

மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நித்யாமேனன்!

கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக முன்பு வேலைகள் நடந்தது. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தபோது சம்பளப் பிரச்சினை காரணமாக மகேஷ்பாபு அப்படத்திலிருந்து விலகினார். அதனால் அந்த முயற்சியையே கிடப்பில் போட்டார் மணிரத்னம். அதையடுத்து, இப்போது மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மானை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம்.

இந்த படத்தின் நாயகியாக முதலில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவிடம்தான் பேசப்பட்டது. ஆனால், இந்தியில் ஹிருத்திக் ரோசனுடன் மொகஞ்சதாரோ என்ற படத்தில் நடித்து வருவதால், தனது இயலாமையை அவர் தெரிவித்து விட்டார். அதனால், பின்னர் நித்யாமேனனிடம் பேசினார் மணிரத்னம்.

திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்! - ஷாக் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்.

கமல்ஹாசன்- சரிகா நட்சத்திர தம்பதியரின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசன். உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு அதையடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் அழகும், நடிப்புத்திறமையும் இருந்ததால் லக் இந்தி படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினார். முதல் படத்திலேயே பிகினி உடைதரித்து இந்தி சினிமாவையே கலக்கி எடுத்தார். அதோடு, படத்துக்குப்படம் அதிக கிளாமரை எக்ஸ்போஸ் செய்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

சுவிட்சர்லாந்தில் விஷால்-ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ்!

தாமிரபரணி படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது ஏற்கனவே முடிவாகி விட்டது. அதையடுத்து, கத்தி மற்றும் ஐ படங்களும் ரிலீசாவது அடுத்தடுத்து முடிவாகி விட்டபோதும், சில முக்கிய தியேட்டர்களை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றி வைத்துள்ளதாம்.

அதனால், தற்போது படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பேட்ச் ஒர்க் படப்பிடிப்புகளையும் சேர்த்து இப்போதே நடத்திக்கொண்டிருக்கிறார் ஹரி. மேலும் வசன காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் இப்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

80 கோடி பட்ஜெட்டில் விஜய்யின் 58வது படம்!

கத்தி படத்தை அடுத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட சில படங்களை இயக்கிய சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தற்போது கத்தி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவரும் நடிக்கின்றனர்.

இதில் ஹன்சிகா ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய வேடங்களில நடிக்கிறார்கள். மேலும், ஸ்ரீதேவிகூட ப்ளாஷ்பேக்கில் அப்பாவாக நடித்துள்ள விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

டாட்டூ வேண்டவே வேண்டாம் ! நடிகைகளை உஷார்படுத்தும் நயன்தாரா!!

சமீபகாலமாக தங்களது உடம்பில் சில முக்கிய பகுதிகளை தவிர அனைத்து ஏரியாக்களிலும் டாட்டூ வரைந்து அழகு பார்ப்பதில் பெருபாலான நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோலிவுட்டைப் பொறுத்தவரை, குஷ்பூ, த்ரிஷா, ப்ரியாமணி, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.

இவர்களில் த்ரிஷா தனது கழுத்துக்கு சற்று கீழே நெஞ்சுக்கு சற்று மேலே ஒரு டாட்டூவை ரொம்ப நாளாக வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் இறக்கமாக டிரஸ் அணியுமபோது அந்த டாட்டூ வெளியில் எட்டிப்பார்க்கும். அதேபோல், நயன்தாரா, தனது மாஜி காதலரான பிரபுதேவாவின் பெயரை தனது வலது கையில் டாட்டூ வரைந்திருக்கிறார். அதேபோல், இடை, தொடை என்று சில டாட்டூக்களை வரைந்து வைத்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, முன்பெல்லாம் தனது படங்களில் நடிக்க சமந்தாவுக்குத்தான் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், அவர் முன்பு தனது படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பான கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்போது சமந்தாவுக்கு எதிரியாகி விட்டார்.

அதோடு சமந்தா எந்த கருத்து சொன்னாலும அதற்கு எதிர் கருத்து கொடுப்பதை மகேஷ்பாபுவின் ரசிகர்கள முக்கிய வேலையாகவும் செய்து வருகின்றனர்.

தமிழிலும் போட்டி போடும் சமந்தா, ஸ்ருதிஹாசன்...!

சமந்தாவும், ஸ்ருதிஹாசனும், தெலுங்கில்தான் படத்துக்குப் படம் போட்டி போட்டார்கள் என்று பார்த்தால், இவர்களது போட்டி தற்போது தமிழிலும் தொடர்கிறதே என்று ஆந்திரத் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம்.

கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் சமந்தாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும்தான் பலத்த போட்டியாக இருந்தது.

'பலுப்பு' படத்தில் ரவி தேஜாவுடனும், 'ராமையா ஒஸ்தாவையா' படத்தில் ஜுனியர் என்டிஆருடனும், 'எவடு' படத்தில் ராம் சரண் தேஜாவுடனும், 'ரேஸ் குர்ரம்' படத்தில் அல்லு அர்ஜுனுடனும் கடந்த இரண்டு வருடங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ருதிஹாசன்.

விஜய்யுடன் நடிக்கவிருக்கும் ஸ்ருதிஹாசன்

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் விஜய் நடித்து வரும் கத்தி படம் முடிந்தவுடன் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். சரித்திர கதையும், இன்றைய சமூக கதையும் இணைந்த பேண்டஸி படம்.

இதில் சரித்திர கால கதையில் விஜய்யுடன் மாஜி ஹீரோயின் ஸ்ரீதேவி நடிப்பது உறுதியானது.விஜய் ஜோடியாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா இந்த மூவரில் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்ருதி நடிப்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்தபோதும்.

பெற்றோர் பெயரைக் கெடுக்க மாட்டேன்…ஸ்ருதிஹாசன் நம்பிக்கை…!

பிரிந்து வாழும் நட்சத்திரத் தம்பதிகளான கமல்ஹாசன், சரிகாவின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இந்தியத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். இவரின் தங்கையான அக்ஷராவும் தற்போது ‘ஷமிதாப்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

தனக்கு ஆரம்ப காலங்களில் நடிப்பதற்கு விருப்பமே இருந்ததில்லை என்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞராக வரவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம். திடீரென தான் நடிக்கும் முடிவை எடுத்தாகச் சொல்கிறார்.