80 கோடி பட்ஜெட்டில் விஜய்யின் 58வது படம்!

கத்தி படத்தை அடுத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட சில படங்களை இயக்கிய சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தற்போது கத்தி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவரும் நடிக்கின்றனர்.

இதில் ஹன்சிகா ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய வேடங்களில நடிக்கிறார்கள். மேலும், ஸ்ரீதேவிகூட ப்ளாஷ்பேக்கில் அப்பாவாக நடித்துள்ள விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் 58வது படமான இந்த படத்தை 80 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்களாம். மேலும், விஜய் படமென்றாலே உள்நாடு வெளிநாடு என்று மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தான் படப்பிடிப்புகள் நடத்துவார்கள். ஆனால் இந்த படத்தில் காடு, மலைப்பிரதேசங்களில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.