ஸ்ரீதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராஜாவாக மாறும் விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு மாரீசன், கருடா என்று தலைப்புகள் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானபோதும், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், நல்ல டைட்டிலை அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் டைட்டிலை உடனடியாக அறிவிக்காமல் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியதுபோல், விஜய்யும் தனது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து புதிய பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், சமீபகாலமாக அதிரடி ஆக்சன் படங்களாக நடித்து வரும் விஜ்ய, இந்த படம் சரித்திர பின்னணி கொண்டது என்பதால், இரண்டில் ஒரு வேடத்தில் அரசர் கெட்டப்பில் வருகிறாராம்.

பாடல் காட்சியுடன் தொடங்கியது விஜய்யின் அடுத்தப் படம்

‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த விசயம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த செட்டில் இப்படத்தின் பாடல் காட்சி 100 வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளார். இந்த பிரம்மாண்டமான செட்டில் சண்டைக்காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் சிம்புதேவன்.

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!

தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள். அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள்.

கன்னட ஹீரோ சுதீப் வில்லன். ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். இது சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த திரைக்கதை. அதாவது தெலுங்கில் வெளிவந்த மகதீரா பாணியிலான கதை. இதற்கான படப்பிடிப்புகள் 5 கட்டமாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறது.

80 கோடி பட்ஜெட்டில் விஜய்யின் 58வது படம்!

கத்தி படத்தை அடுத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட சில படங்களை இயக்கிய சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தற்போது கத்தி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவரும் நடிக்கின்றனர்.

இதில் ஹன்சிகா ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய வேடங்களில நடிக்கிறார்கள். மேலும், ஸ்ரீதேவிகூட ப்ளாஷ்பேக்கில் அப்பாவாக நடித்துள்ள விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக கெளதமி நடிக்கிறார்!

மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த படம் த்ருஷ்யம். கேளாவில் மெகா ஹிட்டான இப்படம், பின்னர் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக்காகி வெளியானது. இதில் தெலுங்கில் அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து அப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. மோகன்லால் நடித்த வேடத்தில் கமல் நடிக்கிறார். அதேசமயம், மலையாள படங்களின் கதை தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகாது என்பதால், தமிழுக்காக கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர். திருநெல்வேலியில் நடக்கும் கதையாக மாற்றியிருக்கும் கமல், முதன்முறையாக திருநெல்வேலி தமிழ் பேசியும் நடிக்கிறார். தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் நெல்லை தமிழ் பேசும் பயிற்சியிலும் இறங்கி விட்டார்.