டாட்டூ வேண்டவே வேண்டாம் ! நடிகைகளை உஷார்படுத்தும் நயன்தாரா!!

சமீபகாலமாக தங்களது உடம்பில் சில முக்கிய பகுதிகளை தவிர அனைத்து ஏரியாக்களிலும் டாட்டூ வரைந்து அழகு பார்ப்பதில் பெருபாலான நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோலிவுட்டைப் பொறுத்தவரை, குஷ்பூ, த்ரிஷா, ப்ரியாமணி, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.

இவர்களில் த்ரிஷா தனது கழுத்துக்கு சற்று கீழே நெஞ்சுக்கு சற்று மேலே ஒரு டாட்டூவை ரொம்ப நாளாக வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் இறக்கமாக டிரஸ் அணியுமபோது அந்த டாட்டூ வெளியில் எட்டிப்பார்க்கும். அதேபோல், நயன்தாரா, தனது மாஜி காதலரான பிரபுதேவாவின் பெயரை தனது வலது கையில் டாட்டூ வரைந்திருக்கிறார். அதேபோல், இடை, தொடை என்று சில டாட்டூக்களை வரைந்து வைத்திருக்கிறார்.


ஆனால், இவர்களுக்கெல்லாம் மேலாக, உடம்பில் ஆங்காங்கே தனக்கு பிடித்த மலர்கள், நிலா, நட்சத்திரம் என உடம்பெங்கும் அதாவது, உள்ளங்காலை மட்டும் தவிர்த்து விட்டு அனைத்து பகுதகளிலும ஏதாவது ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருககிறார் ஸ்ருதிஹாசன்.

இந்த நிலையில, இந்த டாட்டூவை வரைவது எளிது. ஆனால் அதை அப்புறப்படுத்துவது மிக மிக கடினமானது என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தெரிந்துள்ளார் நயன்தாரா. பிரபுதேவாவே தனக்கு வேண்டாதவரான பிறகு அவரது பெயர் தனது கையில் எதற்காக இருக்க வேண்டும் என்று அதை நீக்குவதற்காக அவர் தோல் மருத்துவர்களை அணுகியபோது, இதை அத்தனை எளதில் அகற்றி விட முடியாது. பிளாஸ்டிக் சர்ஜரிதான் செய்ய வேண்டும் என்று குண்டை தூக்கிப்போட்டார்களாம். அதற்கும் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். மேலும், டாட்டூக்களால் ஏற்படும் பக்க விளைவுகளையும் பட்டியலிட்டார்களாம்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த நயன்தாரா, விரைவில் அதை லண்டன் சென்று அப்புறப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில், யாராவது நடிகைகள் தனது உடமபில் டாட்டூ வரைந்ததை அவரிடம் ஆசை ஆசையாய் காண்பித்தால், தனக்கு மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்களை அவர்களிடம் சொல்லி, மேற்கொண்டு அவர்கள் டாட்டூவில் இறங்காமலிருக்க எச்சரிக்கை மணி அடிக்கிறாராம் நயன்தாரா.