சிவகார்த்திகேயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகார்த்திகேயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிம்புவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதலா..!

சிவகார்த்திகேயன் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் சிம்பு, சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் மோதல் தொடர ஆரம்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பொதுவாக, 'இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்கிறவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை' என்று தெரிவித்திருந்தார்.

 சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் எனப் பலரும் பேச ஆரம்பித்தார்கள். தனுஷ் தான், சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் உருவாகும் படங்களில் நாயகனாக நடிக்க வைத்தார். அதனால்தான் சிம்பு அப்படிப் பேசினார் என்றார்கள். அதன் பின் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனுஷ், 'நானும் ரௌடிதான்' படத்தைத் தயாரிக்க ஆரம்பித்த பின் அந்தப் பேச்சு இன்னும் அதிகமானது. சிவகார்த்திகேயனுக்கும், தனுஷிற்கும் இடையில் மோதல் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

'மோஷன் போஸ்டர்'...உருவாகும் புது 'டிரெண்ட்'...

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் புதிது புதிதாக பல வழிகளை நம்மவர்கள் கண்டு பிடித்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு படத்தைப் பற்றி முன்னோட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும்போதோ, அல்லது படத்தின் இடைவேளையின் போது விரைவில் வெளிவர இருக்கும் படத்தின் டிரைலரைப் போடுவார்கள்.

அதன் பின் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் வந்த பிறகு, அதில் டிரைலரைப் போட ஆரம்பித்தார்கள். கடந்த சில வருடங்களாக யூடியூப் வீடியோ இணையதளம் பிரபலமான பிறகு அதில் டிரைலர்களைப் போட ஆரம்பித்தார்கள். அந்த டிரைலரையும் சுருக்கி டிரைலருக்கு முன்னதாக ஒரு டீசரை உருவாக்கி அதை யூடியூபில் போட ஆரம்பித்தார்கள்.

நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணமில்லை!- விஷால்

சமீப காலமாகவே நடிகர் விஷால், நாசர் மற்றும் சில இளவட்ட நடிகர்களுடன் இணைந்து கொண்டு நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருவது போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதோடு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க கூட்டம் நடந்தபோதுகூட, அன்றைய தினத்தில் விஷால்தரப்பினர் காரசாரமாக பேசுவார்கள்.

அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டது.ஆனால், அப்படி எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அந்த கூட்டம் சுமூகமாகவே நடந்து முடிந்தது. இந்த நிலையில், நடிகர் சங்கம் உள்ள பகுதியில் வியாபார வளாகம் வரக்கூடாது என்றும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் விஷால்,

இறங்கிச்சென்று வாய்ப்பு கேட்டும் புண்ணியமில்லையே! - தமன்னா புலம்பல்

வீரம் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு கூட தயாராகயிருந்தார் தமன்னா. ஏற்கனவே லிங்குசாமியின் பையா படத்தில் நடித்திருந்ததால், அவரே ரஜினி முருகனை தயாரிக்கயிருப்பதால் அந்த நட்பு அடிப்படையில் அந்த படத்தை கைப்பற்றினார் தமன்னா.

ஆனால், இப்போது பார்த்தால், தமன்னாவுக்கு மார்க்கெட் இல்லாததை காரணம் காட்டி அவரை ஓரங்கட்டி விட்டனர். அவருக்குப்பதிலாக மாஜி மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொனராம் அப்படத்தை இயக்குகிறார்.

டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்!

மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் டாணா. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரே இயக்குகிறார். தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இதுவரை காமெடி படங்களில் அசத்தி வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக கொஞ்சம் சீரியஸ் கலந்த ரோலில், அதாவது போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி சமந்தா.?!

முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் இதை யாருமே நம்பவில்லை.

ஹன்சிகாவாவது சிவகார்த்திகேயனுடன் நடிப்பதாவது என்று சொன்னார்கள். ஆனால், அப்போதைய நிலவரப்படி ஹன்சிகாவின் மார்க்கெட் தள்ளாடிக்கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

சத்தமில்லாமல் வந்து போன சிவகார்த்திகேயன்...!

ஒரு விழாவுக்கு சிவகார்த்திகேயன் வருகிறார் என்றால் எப்படி ஒரு பரபரப்பு இருக்க வேண்டும். அவர் விழா என்றாலே 'மான் கராத்தே' இசை வெளியீட்டில் பவுன்சர்களை வைத்து அவர் ஏற்படுத்திய பரபரப்புதான் ஞாபகத்திற்கு வரும்.

ஆனால், நேற்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற 'மொசக்குட்டி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்தமில்லாமல் வந்து போனார் சிவகார்த்திகேயன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டவர் கடைசி சீட்டில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டார். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்தே அவரைப் பேச அழைத்தனர். அப்போதுதான் வந்திருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என்பதே தெரிய வந்தது.

ஹன்சிகாவுக்கு ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!

இப்போதெல்லாம் ஹீரோக்களை கவர்ந்த ஹீரோயின் கிடைத்து விட்டால், அந்த நடிகர்களின் கால்சீட் வாங்குவது ரொம்ப ரொம்ப எளிதான விசயம். இது நமக்கு தெரிந்திருக்கும்போது சினிமாவை அக்கு வேற ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கும் குஷ்புவுக்கு தெரியாதா என்ன? அதுவும், நடிகை, தயாரிப்பாளர் என்பதை கடந்து அரசியலையும் ஒரு கை பார்த்துவிட்டார்.

ஆக, தற்போது அனுபவத்தில் ஒரு பழுத்த பழமாகி விட்டார் குஷ்பு. இந்த நிலையில், அரசியல் பயணத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருக்கும் குஷ்பு, கணவர் சுந்தர்.சி. இயக்கத்தில் அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அஜீத் அதற்கு பிடி கொடுக்கவிலலை. அதனால் அடுத்த கட்ட முயற்சியாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் யாரை பிடிக்கலாம் என்று யோசித்து வந்தவரின் மனக்கண்ணில் சிவகார்த்திகேயனின் திருஉருவம் தோன்றியதாம்.