டாணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்!

மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் டாணா. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரே இயக்குகிறார். தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இதுவரை காமெடி படங்களில் அசத்தி வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக கொஞ்சம் சீரியஸ் கலந்த ரோலில், அதாவது போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார்.

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை ரிலீஸ் செய்யவிருக்கும் தனுஷ்!

சில காலங்களில் ரஜினி-கமல் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. குறிப்பாக, ரஜினி நடித்த கோச்சடையான் திரைக்கு வந்தபோது பல படங்கள் வரிந்து கட்டி நின்றன. இதனால் கோச்சடையான்தான் சிலதடவை பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதையடுத்து, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2-ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.