உத்தம வில்லன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்தம வில்லன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை ரிலீஸ் செய்யவிருக்கும் தனுஷ்!

சில காலங்களில் ரஜினி-கமல் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. குறிப்பாக, ரஜினி நடித்த கோச்சடையான் திரைக்கு வந்தபோது பல படங்கள் வரிந்து கட்டி நின்றன. இதனால் கோச்சடையான்தான் சிலதடவை பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதையடுத்து, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2-ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

'உத்தம வில்லன்' - அக்டோபர் 2 ரிலீஸ்...?

அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹசான், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள 'உத்தம வில்லன்' திரைப்படம் அக்டோபர் 2ம் தேதியன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போதுமே கமல்ஹாசன் ஒரு சீரியசான படம் ஒன்றில் நடித்தால் அதற்கடுத்து நகைச்சுவை கலந்த 'லைட்டான' படம் ஒன்றில் நடிப்பது வழக்கம். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'விஸ்வரூபம்' படம் மிகவும் சீரியசான கதை கொண்ட படமாக இருந்ததால், தொடர்ந்து 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிடுவதையும் அவர் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள். அதனால்தான் 'உத்தம வில்லன்' படத்தில் குறுகிய காலத்தில் நடித்து முடித்து படத்தை வெளியிட முடிவு செய்ததாகவும் சொல்கிறார்கள்.