கீர்த்தி சுரேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீர்த்தி சுரேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறங்கிச்சென்று வாய்ப்பு கேட்டும் புண்ணியமில்லையே! - தமன்னா புலம்பல்

வீரம் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு கூட தயாராகயிருந்தார் தமன்னா. ஏற்கனவே லிங்குசாமியின் பையா படத்தில் நடித்திருந்ததால், அவரே ரஜினி முருகனை தயாரிக்கயிருப்பதால் அந்த நட்பு அடிப்படையில் அந்த படத்தை கைப்பற்றினார் தமன்னா.

ஆனால், இப்போது பார்த்தால், தமன்னாவுக்கு மார்க்கெட் இல்லாததை காரணம் காட்டி அவரை ஓரங்கட்டி விட்டனர். அவருக்குப்பதிலாக மாஜி மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொனராம் அப்படத்தை இயக்குகிறார்.