ஜெயம் ரவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயம் ரவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீடியாவை கண்டாலே அலர்ஜியாகும் த்ரிஷா..

ஆர்யா தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு த்ரிஷாவும், நயன்தாராவும ஜோடி போட்டு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால் மட்டும் நான் அன்றைய தினத்தில் அமெரிக்காவில் இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் என்று சொல்லி எஸ்கேப்பாகி விடுகிறார்கள்.

அப்படித்தான் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள பூலோகம் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொள்வதற்கு த்ரிஷாவை அழைத்தபோது, உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றிருப்பதாக அப்பட நாயகனான ஜெயம்ரவி தெரிவித்தார். இந்த நிலையில், கெளதம்மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படத்தின் பிரஸ்மீட்டோ, ஆடியோ விழாவோ நடந்தால் அதில் அஜீத் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதால் அதை வைத்து தானும் ஜகா வாங்கி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.

ஹன்சிகாவுக்கு வந்த திடீர் ஆசை!

தான்அறிமுகமான மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்த ஹன்சிகா அதையடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தவர், பின்னர் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். அந்த சமயத்தில் மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்றொரு பாலிஸியும் வைத்திருந்தார்.

ஆனால், இப்போதும் அவருக்கு முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைத்தபோதும், அப்படி கிடைக்கும் படங்களில் வேறு முன்னணி நடிகைகளும் இருப்பதோடு, ஹன்சிகாவை பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி விடுகிறார்கள். அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தாலும் அவருக்கு திருப்தியாக இல்லையாம்.

அஞ்சலிக்கு கை கொடுக்கும் தமிழ்ப் படங்கள்

சில வருடங்களுக்கு முன் வரை தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என பெயரெடுத்தவர் அஞ்சலி. “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு” என அவருடைய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றதுமில்லாமல், அவரை ஒரு சிறந்த நடிகையாகவும் அடையாளம் காட்டியது.

இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் அடுத்த ரேவதி இவர்தான் என்று அடையாளப்படுத்தப்பட்டவர் திடீரென தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கினார். அவருடைய தனிப்பட்ட குடும்ப விவகாரத்தால் தமிழ்நாட்டிற்கு வருவதையே விட்டுவிட்டு, ஆந்திரா பக்கமே தங்கிவிட்டார்.

இறுதி கட்டத்தில் ரோமியோ ஜூலியட்.

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் இயக்கி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் செட் அமைத்து பாடல் காட்சிகளை படமாக்கினர்.

நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணமில்லை!- விஷால்

சமீப காலமாகவே நடிகர் விஷால், நாசர் மற்றும் சில இளவட்ட நடிகர்களுடன் இணைந்து கொண்டு நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருவது போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதோடு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க கூட்டம் நடந்தபோதுகூட, அன்றைய தினத்தில் விஷால்தரப்பினர் காரசாரமாக பேசுவார்கள்.

அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டது.ஆனால், அப்படி எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அந்த கூட்டம் சுமூகமாகவே நடந்து முடிந்தது. இந்த நிலையில், நடிகர் சங்கம் உள்ள பகுதியில் வியாபார வளாகம் வரக்கூடாது என்றும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் விஷால்,

விஜய் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் கத்தி ட்ரெய்லர்!

தீபாவளிக்கு பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஜெயம்ரவியின் பூலோகமும் வரக்கூடும் என்கிறார்கள். மேலும், கத்தியின் டீஸர் வெளியாகி அதை 2 மில்லியனுக்கும மேற்பட்ட ரசிகர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கத்தி ட்ரெய்லர் எப்போது வரும் என்று தவம் கிடக்கிறார்கள் விஜய்யின் ரசிககோடிகள், ஆடியோ ரிலீஸில் இருந்தே டிரெய்லரை வெளியிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், படமே தீபாவளிக்கு வெளியாகப்போகிறது என்கிறார்கள். பிறகு ஏன் இன்னமும ட்ரெய்லரை வெளியிடவில்லை என்று விஜய்யின் சமூக வலைதளத்திற்குள் புகுந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட பூலோகம் படம்!

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவியின் நடிப்பில் தயரான படம் பூலோகம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் பூலோகம் படத்துக்கு இன்னும் விமோசனம் பிறக்கவில்லை. நீண்டநாட்களாக... இல்லை... இல்லை... நீண்ட மாதங்களாக ரிலீஸுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது பூலோகம் படம்.

பூலோகம் படத்தை ரிலீஸ் பண்ணும்படி சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளரிடம் கண்ணீர் மல்காத குறையாக கேட்டுவிட்டார் இயக்குநர். ஆனால் தயாரிப்பாளர் மனம் இரங்கவில்லை. பிறகு ஜெயம் ரவியே நேரடியாய் சென்று தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியை சந்தித்து பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய கேட்க சென்றார்.

“மெட்ராஸ் - பூலோகம்” ஒரு ஏரியா கதையாமே....!

கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க 'அட்டகத்தி' பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'மெட்ராஸ்' படமும், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ள 'பூலோகம்' படமும் ஒரே கதையில்தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இரண்டு படங்களுமே வட சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளன. ஒரு சாதாரண இளைஞன் எப்படி சிறந்த பாக்சிங் வீரனாகிறான் என்பதுதான் படத்தின் கதையாம்.

இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராகி பல மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

சத்தமில்லாமல் காய் நகர்த்துகிறார் த்ரிஷா!

கோடம்பாக்கத்துக்கு லேட்டஸ்டாக இறக்குமதியான நடிகைகளில் லட்சுமிமேனனுக்கு பிறகு எந்த நடிகையும் பெரிய அளவில் வளரவில்லை. எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிப்புக்கு கல்தா கொடுத்து விட்டார்.

இதன்காரணமாக, பத்து வருடங்களாக கோலேச்சி கொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாரா, காஜல்அகர்வால் போன்ற சில முத்தின நடிகைகள்தான் தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். இதில் நயன்தாரா, காஜல் இருவரும் சம்பள விவகாரத்தில் இன்னமும் பழைய ஞாபகத்தில் உச்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.