காஜல் அகர்வால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஜல் அகர்வால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனுஷின் மாரி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘வாயை மூடி பேசவும்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார். இவர் இயக்கும் அந்த புதிய படத்தில் நாயகனாக தனுஷும், நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார்கள்.

பெயரிப்படாத நிலையில் இப்படத்தின் தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்டர் வேகமாக இன்டர்நெட்டில் பரவி வருகிறது.

40 லட்சம் விவகாரம்! காஜல்அகர்வால்-உதயநிதி மோதல்!!

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கயிருந்த படம் நண்பேன்டா. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் காஜல் அகர்வால்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதோடு ரூ. 1 கோடியே 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அட்வான்சாக 40 லட்சமும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், காஜல்அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படம் தோல்வியடைந்ததோடு, அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லாததால், அவருக்குப் பதிலாக நண்பேன்டா படத்திற்கு நயன்தாராவை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார் உதயநிதி. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

மாம்பழம், பேரீச்சம்பழம்தான் காஜலின் அழகு ரகசியம்

தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி காஜல் அகர்வாலை கேட்டால், 'யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி முக்கியமானதாகும்.

அதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில யோகா பயிற்சி தினமும் செய்து வருகிறேன்' என்று சொல்லும் காஜல், உணவு விஷயத்திலும் நிறைய கட்டுப்பாடுகளை வைத்து உள்ளார். மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை, அவரது தினசரி உணவுகளில் முதலிடம் பிடிக்குமாம்.

சத்தமில்லாமல் காய் நகர்த்துகிறார் த்ரிஷா!

கோடம்பாக்கத்துக்கு லேட்டஸ்டாக இறக்குமதியான நடிகைகளில் லட்சுமிமேனனுக்கு பிறகு எந்த நடிகையும் பெரிய அளவில் வளரவில்லை. எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிப்புக்கு கல்தா கொடுத்து விட்டார்.

இதன்காரணமாக, பத்து வருடங்களாக கோலேச்சி கொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாரா, காஜல்அகர்வால் போன்ற சில முத்தின நடிகைகள்தான் தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். இதில் நயன்தாரா, காஜல் இருவரும் சம்பள விவகாரத்தில் இன்னமும் பழைய ஞாபகத்தில் உச்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் ரகசியம்...!

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில நடிகைகளுக்கு முகம் வசீகரமாக இருக்கும், சில நடிகைகளுக்கு உடலமைப்பு வசீகரமாக இருக்கும். ஆனால், காஜல் அகர்வாலிடம் இவையிரண்டுமே வசீகரமாக இருக்கும். கிளாமராக சிலர் நடித்தால் மட்டுமே ரசிக்க முடியும்,அவர்களில் தற்போது முன்னணியில் இருப்பவர் காஜல் அகர்வால் மட்டுமே.

அவருடைய அழகைப் பாதுகாத்துக் கொள்ள என்னவெல்லாம் காஜல் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை சமீபத்தில் சொல்லியிருக்கிறார். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிம்மதியாக இருக்க யோகாதான் காரணம் என்கிறார்.