நன்பேண்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்பேண்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

40 லட்சம் விவகாரம்! காஜல்அகர்வால்-உதயநிதி மோதல்!!

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கயிருந்த படம் நண்பேன்டா. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் காஜல் அகர்வால்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதோடு ரூ. 1 கோடியே 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அட்வான்சாக 40 லட்சமும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், காஜல்அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படம் தோல்வியடைந்ததோடு, அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லாததால், அவருக்குப் பதிலாக நண்பேன்டா படத்திற்கு நயன்தாராவை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார் உதயநிதி. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.