பூஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் முருகதாஸ்-ஹரி!

இந்த தீபாவளியில் ஷங்கரின் ஐ படமும் திரைக்கு வருவதாக இருந்தால் ஒரு மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கும். ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி ஆகியோர் களத்தில் நின்றிருப்பார்கள. அதேபோல், விஜய், விக்ரம், விஷால் ஆகியோரும் வரிந்து கட்டியிருப்பார்கள்.

ஆக ஒரு பெரிய போட்டி யுத்தமே நடந்திருக்கும். ஆனால், இப்போது ஐ படம் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால், விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.

ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் இப்போது எமியும் சேர்ந்தார்

ஆர்யாவுக்கு நயன்தாரா, பூஜா, த்ரிஷா, அனுஷ்கா என நிறைய நடிகைகள் நெருக்கம். எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டு பிரியாணி கிளப்பில் இணைந்தவர்கள்.

இப்போது இதில் எமியும் சேர்ந்துள்ளார். அவர் முன்பே பிரியாணி கிளப்பில் இருந்தாலும் இப்போதுதான் அதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ் நாட்டில் நண்பர்கள் இல்லை. இங்கு நடிக்க மட்டுமே வருவதால் நடித்து முடித்த உடன் லண்டன் சென்று விடுகிறேன். அங்குதான் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கு ஆர்யா மட்டுமே நண்பர். மதராசபட்டினம் படத்தில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதுபற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதில்லை என்கிறார் எமி.

பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் பூஜா!

2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார்.

அவரது நடிப்பும் பேசப்பட்டது.
இருப்பினும், அதன்பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாததால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடியும்முன், கடவுள் பாதி மிருகம் பாதி ஆகிய படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தி கோலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக, சில மேடைகளில் நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா ஆகியோருக்கு முத்தம் கொடுத்து அதை மீடியாக்களில் ப்ளாஷ் செய்ய வைத்தார்.

அன்பா பழகினால் தப்பா? அப்பாவியாக கேட்கிறார் பூஜா....!

'நான் கடவுள்' படத்தில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து அழுத்தமான முத்திரை பதித்தவர் பூஜா. தற்போது, அவருக்கு அதிகமாக படங்கள் இல்லை என்றாலும், அவரைப்பற்றி வெளியாகும் காதல் செய்திகள் பரபரப்பு கூட்டி வருகின்றன. அவர் கூறுகையில், 'அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.

என்னை அவர்களுக்கு பிடித்து விட்டால், அதிக உரிமை எடுத்துக் கொண்டு பழகுவேன்; முத்தம் கொடுப்பேன்; கட்டிப்பிடிப்பேன். ஆனால், இது என்னுடைய அன்பின் வெளிப்பாடு தான். இதை பார்ப்பவர்கள் உடனே அவர்களுடன் என்னை இணைத்து காதல் செய்தி பரப்புகின்றனர்' என, கடுப்படிக்கிறார்.

மீண்டும் ஆர்யாவுடன் இணையும் பூஜா.........

ஆர்யாவுடன் முதன்முதலாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை பூஜா. நான் கடவுள் படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் அதிக நெருக்கமாகி மாறியது. இதனால், இருவரும் சினிமா விழாக்களுக்கு ஜோடி போட்டே வந்தனர். ஆனால், அதையடுத்து அவரது ட்ராக்கில் நயன்தாரா மட்டுமின்றி பல நடிகைகள் அணி வகுத்தனர்.

மேலும் பூஜாவுக்கு, தமிழில் படங்களும் இல்லாததால் தாய்வீடான ஸ்ரீலங்காவிற்கு சென்று விட்டார். ஆனால், சமீபத்தில் ஆர்யா தயாரித்து வெளியிடும் அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்த பூஜா, அந்த விழா மேடையில் ஏறியதும், ஆர்யாவை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு பல நாட்கள் சென்னையிலேயே டேரா போட்ட விட்டுதான் இலங்கை சென்றார்.